வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி?

பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள்.

மருக்கள் என்பது என்ன?

Wart in Body

தோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வரும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு.

மருக்களின் அளவு

ஒன்று முதல் நூற்றுக்கணக்கான மருக்கள் தோன்றும். பருவ வயதில் தான் உருவாக ஆரம்பிக்கிறது. திராட்சை போல் கிளைத்து வருவதும் உண்டு. பொதுவாக 2 mm அளவில் இருந்து 5 mm அளவுக்கு தான் இருக்கும் அசாதாரணமாக 5 cm வரை உருவாகிறது.

மருக்களை எப்படி நீக்குவது?

Laser Removal

மருக்களை நீக்கினால் வேகமாக பரவும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால் அது உண்மை அன்று. அறுவை சிகிச்சை, லேசர் மூலம் சுட்டுப்பொசுக்குதல், அதற்கான இரத்த ஓட்டத்தை தடைச் செய்யும் போது ஊட்டம் இல்லாமல் சுருங்கி உதிர்ந்த விடும். திரவ நைட்ரஜன் மூலம் உறைய வைக்கும் போது அது உதிர்ந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால் தோல் மருத்துவர் மூலம் நீக்குதல் தான் சிறப்பு.

பெரும்பாலான மருக்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. நகைகள், ஆடைகள், சதை மடிப்பு எனும் போது கிடைக்கும் உராய்வு, அழுத்தத்தால் தான் பலநேரங்களில் வலி ஏற்படுகிறது.

புற்றுநோயாக மாறுவதற்க்கான சாத்தியம் மிகவும் குறைவு. அரிதாக மருக்கள் சிவந்து நிறம் மாறி அதில் இருந்து நீர் வடிந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் பயாப்சி எடுப்பது நல்லது.


Wart is a fleshy bump mucous membrane on the skin, caused by papillomavirus. Warts can be found anywhere on skin, from face to feet. Cutting off a wart cannot cure it. Flat warts and long skinny warts that look like tiny fingers usually appear on your face. Plantar warts are common that are large flat bumps on the bottoms of feet. There are some natural remedies and Laser treatment for wart removal.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas