முத்து வாங்க போறீங்களா!!!

Pearl

அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று தான் முத்து. பெர்சிய வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்படுத்தினர். முத்துக்களின் தேவை அதிகரிப்பால் செயற்கை முத்துக்கள் உற்பத்தி செய்கின்றனர்.

முத்துக்கள் அதன் நிறம், வடிவம், தரம் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உங்கள் விருப்பம் மற்றும் வாங்கும் சக்திக்கு ஏற்ப முத்துவை தேர்ந்தெடுங்கள்.

முத்துக்களின் நிறம்

இயற்கையாக அல்லது தேவையான நிறங்களில் முத்துக்களை செய்யும் தொழில் நுட்பம் உள்ளதால், வெண்மை, கறுப்பு, சாம்பல் நிறம், பச்சை, ப்ளு, பிங்க் நிறங்களில் கிடைக்கிறது.

முத்துக்களின் வகைகள்

நன்னீர், கடல்நீரில் தோன்றிய முத்துக்கள், முதுதுச்சிப்பியின் வகை, இவற்றை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைப்படுத்தப்படுகிறது.

முத்தின் அளவு

முத்துக்கள் வாங்கும் போது அதன் அளவும் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எனில் 7 மில்லிமீட்டர் அல்லது அதைவிட பெரியதாக வாங்க வேண்டும். இளம்பெண்களுக்கு மேற்கண்ட அளவை விட சிறியதாக வாங்க வேண்டும்.

செயற்கை முத்துக்கள் கண்ணாடி அல்லது பிளாஸ்டிகால் விலை மலிவாக கிடைக்கும். முத்து சிப்பியில் செயற்கை முறையில் உருவாக்கிய முத்துக்கள் கிடைக்கும். முத்துக்களின் மென்மையான தன்மையை கொண்டு போலி முத்துக்கள் அடையாளம் கண்டு பிரிக்கப்படுகிறது.

முத்து நகைகள் பராமரிப்பு

Peal Jewel

நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை முத்துக்களை பாதிக்கும் என்பதால் அடிக்கடி முத்து நகைகளை அணிவதை தவிர்க்கவும்.

ஃபெர்ப்யூம், ஹேர் ஸ்பிரே, பவுடர் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் முத்துக்களை பாதிக்கும் என்பதால் முத்து நகையை அணியும் போது காஸ்மெட்டிக்ஸ் (cosmetics) தவிருங்கள்.

வெளியே அணிந்து சென்ற முத்து நகையை வீட்டுக்கு வந்ததும் சுத்தமான, மென்மையான(soft cloth) காட்டன் துணியை கொண்டு துடைத்து அதற்கென உள்ள பெட்டியில் வைக்கவும். பிற நகைகளோடு வைத்தால் முத்தில் உராய்வு ஏற்படும்.


Pearl is a Gemstone produced within the soft tissue of a living shelled mollusk or another animal. Four types of pearl are: Freshwater Pearls which are Fashion-Forward Pearls, Akoya Pearls which are Classic Pearls, grown off the coast of Japan, Tahitian Pearls which are the Dark, Exotic Pearls, South Sea Pearls which are the Rolls Royce of Pearls. South Sea pearls are the third most popular pearl type and the most expensive. Pearls may be Grey, Purple, Black, White, Pink, Blue, Yellow, Green, Orange, Brown in color.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women