பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் இம்ரான்கானுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனினும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த தகவலை இம்ரான்கானின் மருத்துவ உதவியாளர் டாக்டர் பைசல் சுல்தான் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.
இம்ரான்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







