
உலக அளவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு உதவும் நிலையில் ரெம்டெசிவிர் என்ற மருந்து மிகவும் சிறப்பாக பயனளித்து தொற்று குணப்படுத்த உதவுகிறது. இந்தியாவில் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், ரெம்டெசிவிர் ஊசி மருந்து பாதிக்கப்பட்டவர்களை குணமடைய பயனளிப்பதால் இந்த மருந்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த மருந்தை பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த மருந்து அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்த மருந்து பல்வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த மருந்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை இந்த ரெம்டெசிவிர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது மத்திய அரசு. மேலும், இந்த ரெம்டெசிவிர் ஊசி மருந்தின் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், அவர்கள் இருப்பு வைத்திருக்கும் விவரங்கள் விநியோகம் குறித்த விவரங்களை இணைய தளங்களில் வெளியிடவும், மருந்து கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள் இருப்பு குறித்து சரிபார்க்கவும், மருந்து பதுக்கல் குறித்தும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






