தம்பதியினர் இருவரும் அவரது வாழ்க்கையில் தாம்பத்திய உறவுகளைபற்றி இரண்டு விதமான பார்வைகளோடு பார்க்கிறார்கள். தாம்பத்தியத்தை பற்றி தம்பதிகள் அனைவரும் கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்.
தாம்பத்திய உறவு என்பது ஆண் பெண் இருபாலரும் மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு திருவிழா. தாம்பத்திய உறவுகளை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். அனைத்து தம்பதிகளும் தாம்பத்தியம் பற்றி கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இங்கே காணலாம்.

கணவன் மனைவி இருவரும் அந்தரங்க சுத்தத்தை எப்போதுமே கடைப்பிடித்தல் வேண்டும் அப்போது தான் அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய உறவுகளை என்றுமே அனுபவிக்க முடியும். தம்பதிகள் அனைவரும் தாம்பத்திய செயல்பாட்டை இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
முழுமையான ஈடுபாடு இல்லாமல் ஒரு பிரிவினர் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் வித்தியாசமாக புதுவிதமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். பெரும்பாலும் சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் உடல் ரீதியாக அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகை பிறிவினரோ பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தம்பதிகள் ஒவ்வொருவரும் முழுமையாக தாம்பத்தியத்தை கொண்டாடுவதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய தயார் நிலையில் இருக்கக்கூடிய முக்கியமானவை சுத்தமாகும். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
அத்தகைய தம்பதிகளின் வாழ்க்கையில் முதலிடம் உடல் சுத்தத்தில் பெறுவதுதான். இதில் சருமம் முதன்மை வகிக்கிறது. மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் ஒன்றுதான். பெரிய உறுப்பாக உடலில் கருதப்படும் இந்த சர்மமானது சுத்தமாக வைத்திருந்தால் உங்கள் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாதிருப்பதால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நமது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். இதனால் நம் மீது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தப்படுத்தினால் தான் நாம் சுகாதாரமாக நம் உடலை வைத்திருக்க முடியும்.

அதற்குத்தான் தினமும் நான் குளித்துவிடுகிறேனே என்கிறீர்களா? சரிதான். ஆனால் குளிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்க வேண்டும்.சோப்புகளை பயன்படுத்துவதன் மூலம் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை அதிகமாக எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஆண், பெண் இருவருமே ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளித்து விட வேண்டும்.
மணக்கக்கூடிய தன்மை கொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்ற உறுப்பு பகுதிகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.

தினமும் ஆண்களும் பெண்களும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். நீங்கள் உறவுக்கு தயாராக இருக்கீர்கள் என்றால் உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் நல்லது.
பெரும்பாலான தம்பதிகள் காதலை ஆரம்பிக்கும் போது முதலில் முத்தத்தோடு தான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் தான் வாய் உறவுக்கு நுழைவு வாசல் போன்று இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன் மனைவி இருவருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். எனென்றால் உறவு இடையில் தடைபடலாம். பற்களை இரவில் ஒரு முறை துலக்கி, வாயை சுத்தமாக வைக்க இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம்தான் தாம்பத்திதியத்தை மிகவும் இனிமையாக்கி விடும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






