Crime – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 31 May 2021 03:53:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Crime – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/ https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/#respond Mon, 31 May 2021 03:52:10 +0000 https://tamilnewslive.com/?p=15208 செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பாக, முன்னாள் மாணவ, மாணவியர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என, பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்றின் மீது கூட, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது, தாமதமின்றி நடவடிக்கை […]

The post செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! appeared first on Tamil News Live.

]]>
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பாக, முன்னாள் மாணவ, மாணவியர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

Chettinad Vidyashram School, RA Puram - CBSE - Admission 2020-21 | SchoolConnects

இதுகுறித்து புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என, பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்றின் மீது கூட, இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மாணவிகளை அழைத்து, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மகரிஷி வித்யா மந்திர், செட்ட்பேட்டை, சென்னை | சேர்க்கை, விமர்சனங்கள், கட்டணம் - எடுஸ்டோக்

புகாருக்கு பதில் அளிக்க, ஜூன் 8ம் தேதி ஆஜராகுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதும், பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Chettinad students win at zonal level chess tourney – MYLAPORE TIMES

இந்த புகார் தொடர்பாக, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி குழு நேராக  சென்று விசாரித்துள்ளது. இது தொடர்பாக மேல் விசாரணைக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என புகார் கூறப்பட்டுள்ள அனைவரையும்,ஜூன் 8ம் தேதி ஆஜராக பாதுகாப்பு கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் மீதும் மாணவியர் பாலியல் புகார்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/crime/student-sexual-harassment-complaint-against-chettinad-vidyashram-school-teachers/feed/ 0 15208
முன்னாள் அமைச்சர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி புகார்!! https://tamilnewslive.com/news-in-tamil/nadotikal-film-actress-shantini-complaints-that-the-former-minister-has-deceived-her/ https://tamilnewslive.com/news-in-tamil/nadotikal-film-actress-shantini-complaints-that-the-former-minister-has-deceived-her/#respond Fri, 28 May 2021 13:23:44 +0000 https://tamilnewslive.com/?p=15075 சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் இணைந்து, 18 ஆதரவு எம் எல் ஏ-க்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.                                    இந்நிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தன்னை காதலித்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]

The post முன்னாள் அமைச்சர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி புகார்!! appeared first on Tamil News Live.

]]>
சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் இணைந்து, 18 ஆதரவு எம் எல் ஏ-க்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.

                             5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் - முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்       இந்நிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தன்னை காதலித்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

டிரைவர்

 இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். 

பப்ஜி பட நடிகை சாந்தினியின் பரவசமூட்டும் பக்கா போட்டோஷூட்! - TTN Cinema

மேலும் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார். அதனால் தன்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சாந்தினி தேவா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post முன்னாள் அமைச்சர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி புகார்!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/nadotikal-film-actress-shantini-complaints-that-the-former-minister-has-deceived-her/feed/ 0 15075
சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயில் சாப்பாடு தான் – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான்! https://tamilnewslive.com/news-in-tamil/jail-meal-for-sappattu-raman-because-this-is-the-video-he-posted/ https://tamilnewslive.com/news-in-tamil/jail-meal-for-sappattu-raman-because-this-is-the-video-he-posted/#respond Fri, 28 May 2021 10:39:58 +0000 https://tamilnewslive.com/?p=15048 முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் என்கிற யூடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தார். இவர்கொரோனாவில் […]

The post சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயில் சாப்பாடு தான் – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான்! appeared first on Tamil News Live.

]]>
முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோற்றை.. உருட்டி உருட்டி வாயில் திணித்து.. ஓவர் நைட்டில் பேமஸ் ஆன.. "சாப்பாட்டு ராமன்" திடீர் கைது! | Siddha doctor Porchezhiyan arrested for prescribing English Drugs ...

அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் என்கிற யூடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தார்.

இவர்கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை யூடியூப் சேனலில் வழங்கியிருந்தார். அது பொதுவான டிப்ஸ் ஆகத்தான் இருந்தது என்றாலும் சித்தா மருத்துவரான இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.

வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

இதையடுத்து போலீசார் இவரது சிகிச்சை மையத்திற்கு விசாரணைக்காக சென்ற போது, அங்கே இவர் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது தெரிய வந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் ஆங்கில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்தா மருத்துவ படிப்பை முடித்த இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், இவரை போலீசார் போலி மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் இவரது யூடியூப் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயில் சாப்பாடு தான் – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/jail-meal-for-sappattu-raman-because-this-is-the-video-he-posted/feed/ 0 15048
கள்ளக்காதலை கண்டித்த சகோதரி, தாய்யை கூலிப்படை வைத்து படுகொலை செய்த பெண்! https://tamilnewslive.com/news-in-tamil/the-mother-who-condemned-fake-love-the-woman-who-murdered-her-sister-as-a-mercenary/ https://tamilnewslive.com/news-in-tamil/the-mother-who-condemned-fake-love-the-woman-who-murdered-her-sister-as-a-mercenary/#respond Thu, 27 May 2021 13:39:45 +0000 https://tamilnewslive.com/?p=14933 மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், நீலாதேவி 47 வயதான இவருக்கு மகேஷ்வரி, அகிலாண்டேஷ்வரி என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் இதே ஊரில் அருகில் வசித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ்வரிக்கு இதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த தாய் […]

The post கள்ளக்காதலை கண்டித்த சகோதரி, தாய்யை கூலிப்படை வைத்து படுகொலை செய்த பெண்! appeared first on Tamil News Live.

]]>
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், நீலாதேவி 47 வயதான இவருக்கு மகேஷ்வரி, அகிலாண்டேஷ்வரி என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் இதே ஊரில் அருகில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மகேஷ்வரிக்கு இதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த தாய் லீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும், மகேஷ்வரியைக் கண்டித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பல முறை வற்புறுத்தி சண்டையிட்ட நிலையில், மகேஷ்வரி சில மாதங்களாக உறவைத் துண்டித்துள்ளார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு நீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடினர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மேலூர் போலீசார், கொலையான நீலாதேவி, அகிலாண்டேஷ்வரி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நீலாதேவியின் மூத்த மகள் மகேஷ்வரிக்கு கள்ள உறவு இருந்து வந்ததும். அதை கொலையான தாயும், மகளும் கண்டித்ததும் தெரிய வந்தது. இந்தக்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ்வரி தனது கள்ளக் காதலன் சசிக்குமார் மூலம் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மேலூர் போலீசார் இது தொடர்பாக கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கள்ளக்காதலை கண்டித்த சகோதரி, தாய்யை கூலிப்படை வைத்து படுகொலை செய்த பெண்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/the-mother-who-condemned-fake-love-the-woman-who-murdered-her-sister-as-a-mercenary/feed/ 0 14933
சென்னையில் சொமேட்டோ ஊழியர் உடையில் மதுபான பாட்டில் டோர் டெலிவரி! https://tamilnewslive.com/news-in-tamil/liquor-bottle-door-delivery-in-zomato-employee-attire-in-chennai/ https://tamilnewslive.com/news-in-tamil/liquor-bottle-door-delivery-in-zomato-employee-attire-in-chennai/#respond Thu, 27 May 2021 11:59:57 +0000 https://tamilnewslive.com/?p=14920 தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த  முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி பலர் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.   சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை – கேஜி ரோடு சந்திப்பில் போலீஸ் சப்- இன்ஸ்பெகடர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சொமேட்டோ ஊழியரை வழி மறித்து அடையாள அட்டை கேட்டுள்ளனர். […]

The post சென்னையில் சொமேட்டோ ஊழியர் உடையில் மதுபான பாட்டில் டோர் டெலிவரி! appeared first on Tamil News Live.

]]>
தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த  முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி பலர் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
शराब के लिए मची होड़, अब Zomato ऑर्डर पर घर-घर करेगा डिलिवरी - zomato in preparation for alcohol home delivery
 
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை – கேஜி ரோடு சந்திப்பில் போலீஸ் சப்- இன்ஸ்பெகடர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சொமேட்டோ ஊழியரை வழி மறித்து அடையாள அட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர்  முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
 
 
இதனால் சந்தேகமடைந்த போலீசார்  இவர் கொண்டு செல்லும்  உணவுப்பெட்டியை சோதனை செய்த பார்த்த போது அதில் மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல்  செய்து அந்த நபரை கைது செய்து  விசாரணை நடத்தினர்.
 
Zomato, Swiggy start alcohol delivery; here are the details | Technology News,The Indian Express
 
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. சொமேட்டோ ஊழியரான இவர் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சென்னையில் சொமேட்டோ ஊழியர் உடையில் மதுபான பாட்டில் டோர் டெலிவரி! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/liquor-bottle-door-delivery-in-zomato-employee-attire-in-chennai/feed/ 0 14920
நடத்தையில் சந்தேகம் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை! https://tamilnewslive.com/news-in-tamil/wife-killed-her-husband-with-the-help-of-goons-near-gobichettipalayam-in-erode-district/ https://tamilnewslive.com/news-in-tamil/wife-killed-her-husband-with-the-help-of-goons-near-gobichettipalayam-in-erode-district/#respond Wed, 26 May 2021 10:30:11 +0000 https://tamilnewslive.com/?p=14777 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரை சேர்ந்த சீனிவாசன், பிரபா இணையருக்கு கனிஷ்கா என்ற மகள் உள்ளார். சீனிவாசன் சலூன் கடை நடத்தி வந்தார், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது மனைவி பிரபா அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  ஸ்ரீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் […]

The post நடத்தையில் சந்தேகம் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை! appeared first on Tamil News Live.

]]>
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரை சேர்ந்த சீனிவாசன், பிரபா இணையருக்கு கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.

சீனிவாசன் சலூன் கடை நடத்தி வந்தார், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது மனைவி பிரபா அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  ஸ்ரீனிவாசனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற உறவினர் மாரிமுத்து என்பவர் சீனிவாசனின் உடலைப் பார்த்தபோது, கழுத்தில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். அவர் அளித்த புகாரையடுத்து போலீசாரின் விசாரணையில் சீனிவாசனை அவரது மனைவி பிரபாவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 இதை தொடர்ந்து பிரபா போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், கணவர் சீனிவாசன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகாத வார்த்தையில் பேசியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சலூன் கடை வெள்ளியங்கிரி மற்றும் பரோட்டா மாஸ்டர் சரவணகுமார் ஆகிய இருவரின் உதவியுடன் சீனிவாசனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post நடத்தையில் சந்தேகம் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/wife-killed-her-husband-with-the-help-of-goons-near-gobichettipalayam-in-erode-district/feed/ 0 14777
பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை புகாரில் கைது https://tamilnewslive.com/news-in-tamil/private-school-teacher-rajagopalan-confession-in-a-sexual-harassment-case/ https://tamilnewslive.com/news-in-tamil/private-school-teacher-rajagopalan-confession-in-a-sexual-harassment-case/#respond Tue, 25 May 2021 12:20:18 +0000 https://tamilnewslive.com/?p=14660 பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதாகவும் நேற்றைய தினம் புகார் எழுந்தது. கடந்த ஆண்டுகளில் பலமுறை இவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதும் நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை என கூறி புகார்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் உரிய […]

The post பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை புகாரில் கைது appeared first on Tamil News Live.

]]>
பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதாகவும் நேற்றைய தினம் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டுகளில் பலமுறை இவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதும் நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை என கூறி புகார்களை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ச்சியான அழுத்தங்களை தொடர்ந்து ஆசிரியர் ராஜாகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன்  8ஆம் நாள் வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ராஜகோபாலன் தற்போது செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை புகாரில் கைது appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/private-school-teacher-rajagopalan-confession-in-a-sexual-harassment-case/feed/ 0 14660
மதுரையில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! https://tamilnewslive.com/news-in-tamil/cctv-footage-of-a-two-wheeler-being-stolen-in-madurai/ https://tamilnewslive.com/news-in-tamil/cctv-footage-of-a-two-wheeler-being-stolen-in-madurai/#respond Tue, 25 May 2021 07:25:11 +0000 https://tamilnewslive.com/?p=14579 மதுரை அலங்காநல்லூர் அருகே பையூர் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே பையூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில்  நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை […]

The post மதுரையில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! appeared first on Tamil News Live.

]]>
மதுரை அலங்காநல்லூர் அருகே பையூர் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அலங்காநல்லூர் அருகே பையூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில்  நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார்.

அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மதுரையில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/cctv-footage-of-a-two-wheeler-being-stolen-in-madurai/feed/ 0 14579
குழந்தை கையில் பட்டாகத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சபதம்! https://tamilnewslive.com/news-in-tamil/giving-the-child-a-sword-in-hand-and-vowing-to-avenge-enemies/ https://tamilnewslive.com/news-in-tamil/giving-the-child-a-sword-in-hand-and-vowing-to-avenge-enemies/#respond Mon, 24 May 2021 10:09:35 +0000 https://tamilnewslive.com/?p=14459 புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி திப்புராயபேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவீத், கௌசிகபாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர்.  இந்நிலையில் தீப்லானின்  பிறந்த நாளன்று அவரது கல்லறைக்கு […]

The post குழந்தை கையில் பட்டாகத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சபதம்! appeared first on Tamil News Live.

]]>
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி திப்புராயபேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவீத், கௌசிகபாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர். 

இந்நிலையில் தீப்லானின்  பிறந்த நாளன்று அவரது கல்லறைக்கு நண்பர்களான ஆட்டோ மணி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்றுள்ளனர். அப்போது தீப்லானின் குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து கேக் வெட்டி கொலை செய்தவர்களை பழிவாங்க பாடல் பாடி சபதம் எடுத்தனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post குழந்தை கையில் பட்டாகத்தி கொடுத்து எதிரிகளை பழி தீர்க்க சபதம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/giving-the-child-a-sword-in-hand-and-vowing-to-avenge-enemies/feed/ 0 14459
தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு – கனிமொழி கோரிக்கை  https://tamilnewslive.com/news-in-tamil/sexual-assault-on-private-school-teacher-kanimozhi-demand/ https://tamilnewslive.com/news-in-tamil/sexual-assault-on-private-school-teacher-kanimozhi-demand/#respond Mon, 24 May 2021 09:13:46 +0000 https://tamilnewslive.com/?p=14444 சென்னையில் உள்ள  பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் மீதும் அதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுக்குறித்து கனிமொழி வெளியிட்டிருக்கும் தனது ட்விட்டர் பக்க பதிவில் சென்னை பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சியுறச் செய்துள்ளது. அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக […]

The post தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு – கனிமொழி கோரிக்கை  appeared first on Tamil News Live.

]]>
சென்னையில் உள்ள  பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் மீதும் அதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுக்குறித்து கனிமொழி வெளியிட்டிருக்கும் தனது ட்விட்டர் பக்க பதிவில் சென்னை பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என அந்த ட்விட்டர் பக்க பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

The post தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு – கனிமொழி கோரிக்கை  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/sexual-assault-on-private-school-teacher-kanimozhi-demand/feed/ 0 14444