கணவன் மனைவி உறவுக்குள் வாக்குவாதம் என்பது முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன. உறவில் பிரச்சனையை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிமுறைகள். பின்வருவனவற்றுள் காண்போம்.

உறவுகளுக்குள் பிரச்சனை வர உளவிலாளர்களின் கூற்றுப்படி பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகமான அளவுக்கு எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிகை, இழப்பு ஆகியவை உள்ளடங்கும். எல்லா நேரங்களிலும் கணவன் மனைவி உறவுக்குள் சண்டை போடுவது மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.மேலும் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்றால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.
வாக்குவாதம் என்பது உறவுகளில் இயல்பான ஒன்றாகும். மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை தவிர்ப்பதற்கும் வழிகள் உள்ளன. கணவன் மனைவி உறவில் வாக்குவாதத்தை கையாளுவதற்கான ஆரோக்கியமான வழிகள்;
உறவுக்குள் பிரச்சனை நடைபெறுவது இயல்பான ஒன்று. ஆனால் கோபத்தை அந்த நேரத்தில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் எதிரில் இருப்பவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் பகுத்தறிவோடு அவர்களை மதிப்பிட வேண்டும். அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். மரியாதையோடும், அமைதியோடும் அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும்.

வாக்குவாதம் ஏற்படும் நேரத்தில் கோபப்படாமல் அமைதியாக யோசித்தால் வாக்குவாதம் சண்டையாக மாறாது. உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதம் செய்வதால் விளைவுகள் மோசமானதாகும். ஏனென்றால் நம்மை மீறி அந்த நேரத்தில் தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்கவோ, வருத்தப்படக்கூடிய செயலை செய்யவோ வாய்ப்பு இருக்கிறது. அதனால் பிறகு வருத்தப்பட நேரிடும். ஆகையால் வாக்குவாதம் முற்றும் நிலைக்கு கொண்டு செல்லாமல் நாம் விட்டு கொடுப்பது தேவையற்ற சண்டைகள் வராமல் தவிர்க்கலாம்.
வாக்குவாதங்களை தொலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாக பேசி தீர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குறுஞ்செய்தியில் நாம் கூறவரும் கருத்துக்களை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனவே, முடிந்தவரை நேரில் சந்தித்து பேசி தீர்ப்பது தான் சிறந்தது. சிறிய விஷயங்களை பெரிய பிரச்சனைகளாக கருதாமல் தவிர்க்க வேண்டும். தேவையற்ற காரியங்களை விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டு விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்தது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






