
சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ரெய்சினா டயலாக் என்ற கருத்தரங்கில் பேசியுள்ளார். அதன்படி இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், மின்சார கார்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களும் தற்போது இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி தொடங்கும் படி அந்த நிறுவனத்திடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளாராம்.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனத்தின் கார் இந்தியாவில் விற்பனை தொடங்க உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பதிவு அலுவலகம் பெங்களூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






