தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக -காங்கிரஸ் இடையே சில தினங்களுக்கு முன் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் சனிக்கிழமை (மார்ச் 13 ) நள்ளிரவு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி
1. பொன்னேரி (SC ) – துரை சந்திரசேகர்,
2. ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம்
4. ஊத்தங்கரை (SC) – ஜே.எஸ்.ஆறுமுகம்
5. கள்ளக்குறிச்சி (SC) – மணிரத்னம்
6. ஓமலூர் – ஆர்.மோகன் குமாரமங்கலம்
7. ஈரோடு கிழக்கு – திருமகன் ஈவேரா
8. உதகை – ஆர்.கணேஷ்
9. கோவை தெற்கு – மயூரா எஸ்.ஜெயக்குமார்
10. உடுமலைப்பேட்டை – கே.தென்னரசு
11. விருதாச்சலம் – எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன்
12. அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்
13. காரைக்குடி – எஸ்.மாங்குடி
14. மேலூர் – டிரவிச்சந்திரன்
15. ஸ்ரீவில்லிபுத்தூர் (SC)-பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்
16. சிவகாசி – அசோகன்
17. திருவாடானை – ஆர்.எம்.கருமாணிக்கம்
18. ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்
19. தென்காசி – எஸ்.பழனி நாடார்
20. நாங்குநேரி – ரூபி ஆர்.மனோகரன்
21. கிள்ளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அத்தொகுதியின் எம்பியாக இருந்து மறைந்த ஹெச். வசந்தகுமாரின், மகன் விஜய் வசந்த் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயர்கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
