
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் லக்னோ, வாரணாசி, காசியாபாத், கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் நொய்டா ஆகிய மாவட்டங்களில் இரவு ஊரடங்கு வரும் வியாழன் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காசியாபாத் மற்றும் நொய்டாவில் வரும் 17 தேதி வரையும் மற்ற மாவட்டங்களில் 30 தேதி வரையும் இரவு ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

மேலும், மாவட்டங்களுக்கேற்ப இரவு நேர ஊரடங்கில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து வாரணாசியில் கும்பமேளா நடக்க இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்று கூடும் சூழல் ஏற்படுவதால் கடும் கட்டுப்பாடு நடவடிக்கையுடன் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






