Beauty Tips – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Thu, 17 Jun 2021 16:02:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Beauty Tips – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 பருவ வயது பெண்களுக்கு வரும் முகப்பரு பிரச்னைணைகளுக்கான தீர்வு ..!! https://tamilnewslive.com/beauty-tips/the-solution-to-the-acne-problems-that-come-to-adolescent-women/ https://tamilnewslive.com/beauty-tips/the-solution-to-the-acne-problems-that-come-to-adolescent-women/#respond Mon, 14 Jun 2021 07:57:56 +0000 https://tamilnewslive.com/?p=15543 பருவ வயதில், பெண் இருபாலருக்கும் வரும் தலையாய பிரச்சனை முகப்பரு.பளபளவென்று மாசு மருவற்ற முகத்திற்கு ஆசைப்படாதவர் யாரும் இல்லை.பருக்கள் சீழ் வைத்து அதனால் வரும் வடுக்கள் முகத்தின் அழகை கெடுக்கிறது.பருவை நினைத்து அனாவசிய கவலை வேண்டாம்.சாய் பல்லவி அதாங்க மலர் டீச்சரை சிவந்த பருக்கள் முக்த்தில் இருந்தும் , மலர் டீச்சரை அனைவரும் ரசித்தனர். பருக்கள் தோன்றுதல் முகத்தில் உள்ள வியர்வை துளைகளில் இறந்த செல்களும் , எண்ணெய் சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால் , சிறு கட்டிகள் […]

The post பருவ வயது பெண்களுக்கு வரும் முகப்பரு பிரச்னைணைகளுக்கான தீர்வு ..!! appeared first on Tamil News Live.

]]>
பருவ வயதில், பெண் இருபாலருக்கும் வரும் தலையாய பிரச்சனை முகப்பரு.பளபளவென்று மாசு மருவற்ற முகத்திற்கு ஆசைப்படாதவர் யாரும் இல்லை.பருக்கள் சீழ் வைத்து அதனால் வரும் வடுக்கள் முகத்தின் அழகை கெடுக்கிறது.பருவை நினைத்து அனாவசிய கவலை வேண்டாம்.சாய் பல்லவி அதாங்க மலர் டீச்சரை சிவந்த பருக்கள் முக்த்தில் இருந்தும் , மலர் டீச்சரை அனைவரும் ரசித்தனர்.

Young woman squeezing pimple on her cheek on white background

பருக்கள் தோன்றுதல்

முகத்தில் உள்ள வியர்வை துளைகளில் இறந்த செல்களும் , எண்ணெய் சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால் , சிறு கட்டிகள் தோன்றுகிறது. இதனைத்தான் பருக்கள் என்கிறோம்.

பருக்கள் முகம் முழுவதும் , கழுத்தில் , முதுகில் , மார்பு வரை தோன்றுகிறது.பருக்கள் தோன்றி சிவந்து , பிறகு வெள்ளை நிறமாக வறண்டு விழுந்து விடும்.பெரும்பாலும் இவை தழும்புகளை விட்டு செல்வதில்லை. பருக்களை கிள்ளும் போது தான் கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வைத்து முகத்தில் உள்ள மயிர்க்கால்கள் கூட அடைத்து கொள்கிறது.சிலருக்கு கடும் வலியும் , காய்ச்சலும் ஏற்படும்.நாளடைவில் இவை தழும்புகளாக மாறிவிடும். பருக்கள் முகம் முழுவதும் பரவி விடுகிறது.

பருக்கள் வரக்காரணம்

மரபுவழி, மன அழுத்தம், கொழுப்பு மிக்க உணவுகள், ஹார்மோன்கள் குளறுபடி, நோய் தொற்று .

பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய

1 டீஸ்பூன் பட்டை பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் குழைத்து கொள்ளவும் . முகத்தை கழுவி துடைத்து விட்டு இந்த கலவையை போடவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.தேன் மற்றும் பட்டையில் (cinnamon) உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (antioxidants) Antibacterial , antiseptic properties இருப்பதால் பருக்கள் மறைந்து விடும்.

*எலுமிச்சை சாறை எடுத்து அதனை பஞ்சை நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும். எரிச்சல் ஏற்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

*சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து  செய்த கலவையை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணி நேரம் கழித்து பிறகு முகத்தை கழுவவும்.

* சோற்றுக் கற்றாழை உள்ளில் உள்ள பளிங்கு போன்ற சதைப்பகுதியை நீரில் கழுவி பிறகு மிக்ஸியில் அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும்.

*பால் சார்ந்த உணவுகள் தவிர்த்தல், கொழுப்பு உணவுகளை குறைத்து பச்சைக் காய்கறிகள், பழங்கள் நிறைய உண்ணவேண்டும்.தினசரி உடற்பயிற்சி, மன அமைதி , நிறைய தண்ணீர் குடிக்கவும் மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கவும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பருவ வயது பெண்களுக்கு வரும் முகப்பரு பிரச்னைணைகளுக்கான தீர்வு ..!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/the-solution-to-the-acne-problems-that-come-to-adolescent-women/feed/ 0 15543
முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? https://tamilnewslive.com/beauty-tips/need-face-skin-glow/ https://tamilnewslive.com/beauty-tips/need-face-skin-glow/#respond Thu, 10 Jun 2021 09:54:20 +0000 https://tamilnewslive.com/?p=15509 பெண்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள பல செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.  அழகு சாதன பொருட்கள் விலையும் அதிகம் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும். நாளடைவில் பிரச்சினைகள் தீவிரமடையும் ஒழிய நிவாரணம் பெரும்பாலும் தருவதில்லை.இதனால் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றது. எனவே செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கை நமக்களித்தப் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.    * சுற்றுச்சூழல் மாசுக்களால் முகம் பாதிக்கும் என்பதால் சிறிய முயற்சி சருமத்தை […]

The post முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? appeared first on Tamil News Live.

]]>
பெண்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள பல செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.  அழகு சாதன பொருட்கள் விலையும் அதிகம் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும். நாளடைவில் பிரச்சினைகள் தீவிரமடையும் ஒழிய நிவாரணம் பெரும்பாலும் தருவதில்லை.இதனால் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றது. எனவே செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கை நமக்களித்தப் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.
 
 * சுற்றுச்சூழல் மாசுக்களால் முகம் பாதிக்கும் என்பதால் சிறிய முயற்சி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
எப்போதும் பயணங்கள் மேற்கொண்ட பிறகு களைப்புடன் வீடு திரும்புபவர்களும், பயணத்திற்கு தயாராக இருப்பவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.
*கடலை மாவுடன் வெள்ளரிக்காய் சாறைக் குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
* கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவுடன் காய்ச்சிய பாலை குழைத்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
* மேலும், முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கிவிடும்.முகச்சுருக்கங்கள் நீங்கும்.
*முல்தானிமெட்டியை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
* சிவப்பு சந்தனம் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதனை தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
* சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.
* வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க தயிருடன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
* கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* அதேபோல் கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
அத்துணையும் எளிமையான வழிமுறைகள் இதனை தினம் ஒன்றாக கடைப்பிடித்தாலே போதும் .

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/need-face-skin-glow/feed/ 0 15509
நீங்கள் மாநிறமா? இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள். https://tamilnewslive.com/health/do-you-change-even-better-color-then-do-this-and-get-a-facelift/ https://tamilnewslive.com/health/do-you-change-even-better-color-then-do-this-and-get-a-facelift/#respond Tue, 08 Jun 2021 04:23:09 +0000 https://tamilnewslive.com/?p=15428 மாநிறத்தை கொண்டிருக்கும் பெண்கள் தங்கள் நிறத்தை மேலும் பிரகாசமாகவும் வைத்திருக்க விரும்புவார்கள். தற்போது கோடைக்காலம் என்பதால் சருமத்தை பராமரிப்பதில் சிரமம் இருக்கும். அதோடு முகத்தின் நிறத்தையும் மீட்டெடுப்பது சவாலானதாக இருக்கும். சரும நிறத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் வெளியில் கிடைக்கும் என்றாலும் அது நம் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் ஏற்றப்படுகின்றன. எளிதாக கிடைக்க கூடிய பல பொருள்களை கொண்டு எளிதாக சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யலாம். அப்படியான ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம். பப்பாளி முட்டையின் வெள்ளைக்கரு […]

The post நீங்கள் மாநிறமா? இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள். appeared first on Tamil News Live.

]]>
மாநிறத்தை கொண்டிருக்கும் பெண்கள் தங்கள் நிறத்தை மேலும் பிரகாசமாகவும் வைத்திருக்க விரும்புவார்கள். தற்போது கோடைக்காலம் என்பதால் சருமத்தை பராமரிப்பதில் சிரமம் இருக்கும். அதோடு முகத்தின் நிறத்தையும் மீட்டெடுப்பது சவாலானதாக இருக்கும்.

சரும நிறத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் வெளியில் கிடைக்கும் என்றாலும் அது நம் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் ஏற்றப்படுகின்றன. எளிதாக கிடைக்க கூடிய பல பொருள்களை கொண்டு எளிதாக சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க செய்யலாம். அப்படியான ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.

பப்பாளி முட்டையின் வெள்ளைக்கரு மாஸ்க்

இந்த ஃபேஸ் பேக் கருமையான சருமத்தையும் ஒளிர செய்கிறது. சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

பப்பாளி சாறு – 2 டீஸ்பூன்

தயிர் – 2 டீஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்

முட்டையின் வெள்ளைக்கரு

பாதாம் எண்ணெய்/ ஆலிவ் எண்ணெய்/ சுத்தமான தேங்காய் எண்ணெய் – கால் டீஸ்பூன்

சருமம் வறண்டு இருந்தால் கிளிசரின் சேர்க்கலாம்

பப்பாளி துண்டை எடுத்து மசிக்கவும். அதில் தயிர் ஆப்பிள் சீடர் வினிகர், பாதாம் எண்ணெய் என ஏதாவது ஒன்றை எடுத்து நன்றாக கலந்து முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்குள் ஊறவிடவும். பிறகு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.

பப்பாளி தோல் ஒளிர செய்கிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. முகத்தில் கறைகளுக்கு எதிராக போராடுகிறது. தயிர் முகத்தை சுத்தப்படுத்தக்கூடும். இது சரும பிரச்சனைகளுக்கு எதிராக போராடுகிறது. முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை பாதுகாக்கிறது.

கடலைமாவு உடன் எலுமிச்சை சாறு

கருமையான சருமத்தை கொண்டிருந்தால் இந்த பேக் மிகவும் உதவும்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

மஞ்சள் – கால் டீஸ்பூன்

பன்னீர் – சிறிதளவு

அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். அதை உலரவிட்டு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். கடலை மாவு முகத்துக்கு நல்ல க்ளென்சர் மற்றும் எக்ஸ்போலியேட்டர் ஆகும். அதே நேரத்தில் எலுமிச்சை சாறு சரும நிறத்தை மீட்டெடுக்க செய்கிறது. பன்னீர் இயற்கை டோனராகும். மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் என்பதால் இது தோல் பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

​தேனுடன் எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:

தேன் – 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து எடுக்கவும். 15 – 20 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் குழைத்து எடுக்கவும்.

தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலப்பொருள். இது கறைகள் வடுக்கள் மற்றும் சருமம் இழந்த நிறத்தை மீட்டெடுக்கிறது.

​பாலுடன் எலுமிச்சை சாறு

கருமையான சருமத்துக்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக் வகையில் இது எளிமையானது. பலன் தரக்கூடியது.

தேவையான பொருட்கள்:

காய்ச்சாத பால் – 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – சிட்டிகை .

தேன் – கால் டீஸ்பூன்

இவை அனைத்தையும் நன்றாக கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து விடவும். இது உலரவிட்டு மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யும். சருமத்தின் நிறத்தின் மேம்படுத்தும்.

​தக்காளி மற்றும் தேன்

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1

தேன் – 2 டீஸ்பூன்

தக்காளி நன்றாக பழமாக இருக்கட்டும். இதை மசித்து இதில் தேன் கலந்து விடவும். இதை முகம் மற்றும் கழுத்து மூழுக்க தடவி விடவும். இதை முகம் முழுவதும் தடவி 20 முதல் 30 ந்மிடங்கள் வரை தடவி விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். இதை தொடர்ந்து செய்யும் போது மாநிறமான முகம் பளிச்சிடும்.

சருமம் மாநிறமாக இருந்தால் தக்காளியின் ஒளிரும் பண்புகள் தோல் சருமத்தை மேம்படுத்தும். இதை தொடர்ந்து தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் சருமம் அதிசயமாக ஜொலிப்பதை பார்க்கலாம்.

பால் பவுடருடன் எலுமிச்சை சாறு

சருமம் மாநிறமாக இருப்பவர்களுக்கு ஏற்ற பேக் இது.

தேவையான பொருட்கள்:

பால் பவுடர்- 2 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய்- அரை டீஸ்பூன்

எலுமிச்சை – 1 டீஸ்பூன்

தேன் 1 டீஸ்பூன்

பால் பவுடரில் அனைத்தையும் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி விடவும். இதை 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். இதை காம்பினேஷன் ஸ்கின் இருப்பவர்களும் செய்யலாம்.

சருமத்திற்கு ஏற்ற சிறந்த எண்ணெய் இது. இதை தவறாமல் பயன்படுத்துவதால் சருமம் ஒளிரக்கூடும். முகப்பருவை குறைக்கவும் இந்த பேக் உதவுகிறது. வறண்ட சருமத்துக்கான ஃபேஸ் பேக் இது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post நீங்கள் மாநிறமா? இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள். appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/do-you-change-even-better-color-then-do-this-and-get-a-facelift/feed/ 0 15428
முகத்தை சுத்தப்படுத்துவதற்கான ஸ்க்ரப் வகைகள்… https://tamilnewslive.com/beauty-tips/types-of-scrubs-for-cleansing-the-face/ https://tamilnewslive.com/beauty-tips/types-of-scrubs-for-cleansing-the-face/#respond Mon, 10 May 2021 09:42:46 +0000 https://tamilnewslive.com/?p=12238 முகத்தில் இருக்கும் சருமத்தை சுத்தம் செய்ய அவசியம் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும்.ஸ்க்ரப் செய்வதால் சருமத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. இது சரும பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. இதற்கென பிரத்யேகமான வீட்டு பொருள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி ஸ்கரப் செய்து முகத்தின் பளபளப்பை கூட்டுவது என்று பார்க்கலாம். தேங்காய் ஸ்க்ரப்   தேங்காய் சாப்பிடுவது சுவையானது. அதே போன்று சருமத்தில் பயன்படுத்தும் போது நன்மை பயக்கக் கூடியது.தேங்காய் முகத்தில் இருக்கும் அழுக்குகளை விரைவாக வெளியேற்ற […]

The post முகத்தை சுத்தப்படுத்துவதற்கான ஸ்க்ரப் வகைகள்… appeared first on Tamil News Live.

]]>
முகத்தில் இருக்கும் சருமத்தை சுத்தம் செய்ய அவசியம் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும்.ஸ்க்ரப் செய்வதால் சருமத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. இது சரும பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. இதற்கென பிரத்யேகமான வீட்டு பொருள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி ஸ்கரப் செய்து முகத்தின் பளபளப்பை கூட்டுவது என்று பார்க்கலாம்.

தேங்காய் ஸ்க்ரப்

 

தேங்காய் சாப்பிடுவது சுவையானது. அதே போன்று சருமத்தில் பயன்படுத்தும் போது நன்மை பயக்கக் கூடியது.தேங்காய் முகத்தில் இருக்கும் அழுக்குகளை விரைவாக வெளியேற்ற உதவும் சிறந்த பொருள் . நேரடி சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்வதற்கு தேங்காய் ஸ்க்ரப் உதவக்கூடும்.

தேங்காயை துண்டுகளாக்கி மசிக்கவும். மஞ்சள் 1 சிட்டிகை கலந்து அதில் சந்தன எண்ணெய் 10 துளிகள் சேர்க்கவும். இந்த கலவையை 5 நிமிடங்கள் முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்து பிறகு முகத்தை கழுவி எடுக்கலாம். சருமத்துக்கு ஈரப்பதத்தையும் குளிரூட்டும் வேலையையும் இது செய்கிறது.

​சரும மென்மைக்கு கேரட்

 சருமத்திற்கு கேரட் ஸ்க்ரப் கூடுதல் நன்மை தரக்கூடியது. இது சர்மத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க செய்யும். கேரட் எல்லாவிதமான சருமத்தினருக்கும் ஏற்றது.

தேவை

கேரட் – 1

தயிர் – 5 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

பன்னீர் – 3 டீஸ்பூன்

அனைத்தையும் நன்றாக கலந்து வட்ட வடிவில் முகத்தில் இயக்கவும். வாரம் இருமுறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எண்ணெய் சுரப்பும் கட்டுக்குள் இருக்கும்.

​ஆரஞ்சு தூள் ஸ்க்ரப்

இறந்த செல்களை ஆரஞ்சு சருமத்தில் வெளியேற்ற உதவுகிறது. வெயிலில் ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி ரவை போன்ற சலித்து வைக்கவும்.

இதில் தயிர் அல்லது பால், எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். ஆரஞ்சு தூள் ஸ்கரப் எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது.

​பாசிப்பருப்பு ஸ்க்ரப்

லேசாக பாசிப்பருப்பை வறுத்து பொடியாக மாற்றவும். அவசர காலத்தில் இதனுடன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். இதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி விடவும். பிறகு ஈரமான பருத்தியை நனைத்து முகத்தில் துடைத்து பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். இதில் சர்க்கரை சேர்ப்பதால் சருமம் ஆற்றல் மிக்கதாக புத்துணர்ச்சியாக இருக்கும்.

இந்த சருமம் பொலிவை பெறுவதற்கு சரியான முறையில் ஸ்க்ரப்பிங் செய்வது அவசியம். உள்ளங்கையில் லேசான அழுத்தத்தை பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்யவும். இது ஆழமான சருமத்தின்  துளைகளை சுத்தம் செய்ய கூடும்.

பாசிப்பருப்பு பொடி – 4 டீஸ்பூன் அளவு

சர்க்கரை – 1 டீஸ்பூன்

தேன் – 3 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 சொட்டு

கற்றாழை – 2 டீஸ்பூன்

நன்றாக அனைத்தையும் சேர்த்து கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகம் அதிக பொலிவை பெறுவதை பார்க்கலாம்.

​சால்ட் ஸ்க்ரப்

சால்ட் ஸ்க்ரப் என்பது முழு சருமத்துக்கும் ஏற்ற ஸ்க்ரப், சருமத்தின் இறந்த செல்களை ஆழமாக சுத்தம் செய்வதற்கு இந்த சால்ட் ஸ்க்ரப் உதவும். இதை அடிக்கடி செய்ய வேண்டியதில்லை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்தாலே போதுமானது. இது இறந்த செல்களை ஆழமாக சுத்தப்படுத்தும்.

உப்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள்- 1 சிட்டிகை

முகத்தில் இதை கலந்து  தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விடவும். இதனால் மேலும் முகத்தின் அழகு பொலிவாக இருப்பதை பார்க்கலாம். உடலுக்கு தேவையெனில் இதையே மென்மையாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post முகத்தை சுத்தப்படுத்துவதற்கான ஸ்க்ரப் வகைகள்… appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/types-of-scrubs-for-cleansing-the-face/feed/ 0 12238
செம்ம அழகு டானு சொல்ல வைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டு, ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே போதும்! https://tamilnewslive.com/health/wants-to-see-the-natural-beauty-of-your-skin-with-fruit-face-pack/ https://tamilnewslive.com/health/wants-to-see-the-natural-beauty-of-your-skin-with-fruit-face-pack/#respond Mon, 10 May 2021 08:35:27 +0000 https://tamilnewslive.com/?p=12204 சருமம் மாசு அடைவதற்கான காரணம் பல இருக்கலாம். அதனால் தான்  சரியான பராமரிப்பை வெளியிலும் சீரான ஊட்டத்தை உள்ளுக்குள்ளும் சேர்க்கும் போது தான் சருமம் பளபளப்பாக இருக்கும். அதிலும் சிறப்பு மிக்க  பழங்களை கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக் வகைகள் சிறந்த தேர்வாக இருக்கும். சுற்றுப்புற சூழல்கள் மோசமான நிலையில் காணப்படுவதால்   அதிகப்படியாகவே சருமத்தை பாதிக்க செய்வதாகும் . நீங்கள்  மோசமான உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றுக்கு பலியாவது ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சருமத்தையும் பாதிக்கும்.  […]

The post செம்ம அழகு டானு சொல்ல வைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டு, ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே போதும்! appeared first on Tamil News Live.

]]>
சருமம் மாசு அடைவதற்கான காரணம் பல இருக்கலாம். அதனால் தான்  சரியான பராமரிப்பை வெளியிலும் சீரான ஊட்டத்தை உள்ளுக்குள்ளும் சேர்க்கும் போது தான் சருமம் பளபளப்பாக இருக்கும். அதிலும் சிறப்பு மிக்க  பழங்களை கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக் வகைகள் சிறந்த தேர்வாக இருக்கும்.

சுற்றுப்புற சூழல்கள் மோசமான நிலையில் காணப்படுவதால்   அதிகப்படியாகவே சருமத்தை பாதிக்க செய்வதாகும் . நீங்கள்  மோசமான உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றுக்கு பலியாவது ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சருமத்தையும் பாதிக்கும். 

சருமத்தை பராமரிப்பதற்கும்,புத்துணர்ச்சியாக்குவதற்கும்  நீங்கள் சரும பராமரிப்பில் பழங்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.ஒவ்வொரு பழங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதன் மூலம் சருமம் பொலிவு அடைவதை  நீங்களும் பார்க்கலாம். குறிப்பிட்ட சில பழ வகைகளை உள்ளுக்கும், வெளிக்கும் எடுப்பதன் மூலம் பெறும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

எலுமிச்சை

உடலில் நச்சுக்களை வெளியேற்ற வைட்டமின் சி நிறைந்த ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பழம் உதவுகிறது.இந்த பலம் சருமத்தில் இருந்து  கறைகளை நீக்கி பளிச்சென்று வைக்க செய்கிறது. சீரற்ற நிறமி கருமையான புள்ளிகள், முகப்பரு வடுக்கள் இருந்தால் எலுமிச்சையை பயன்படுத்தி  ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.

உள்ளுக்கு

அரை டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சுத்தமான தேனை கலந்து காலையில் வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உடல் நச்சு தன்மையை வெளியேற்ற உதவும். உணவிலும் சாலட்டிலும் எலுமிச்சை சேர்த்து சருமத்தை ஒளிர செய்யும்.

சரும பராமரிப்புக்கு

 சருமத்தில் பொலிவு பெற எலுமிச்சை சாறுடன் பன்னீர் கலந்து முகத்தில்  தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவலாம்.பின்னர் உலர் சருமம் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். சருமத்தில் கறை இருந்தால் பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். குறிப்பாக கருவளையம் இருக்கும்  ஆண்கள் ,பெண்கள் கண்களுக்கு கீழ் தடவி எடுங்கள்.முகத்திற்கு எலுமிச்சை மற்றும் சர்க்கரை சேர்த்து  ஸ்க்ரப் செய்யுங்கள்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள சிறப்பு அம்சம்:வைட்டமின் ஏ, சி, பி, பான்டோதெனிக் அமிலம் மற்றும் தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் சருமத்தில் உண்டாகும் சேதத்தை தடுக்கும் பாபேன் மற்றும் சைமோபாபேன் போன்ற நொதிகள் உள்ளன.

ஆரோக்கியமான சருமத்தை பெற பின்பற்ற வேண்டியவை: பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளன பப்பாளி மலச்சிக்கலை தடுப்பதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். மேலும் இது சருமத்தில் மருக்கள், அரிக்கும் தோலழற்சி, சோளம் மற்றும் வெட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.

உள்ளுக்கு

பப்பாளியை தினமும் ஒரு கிண்ணம் வீதம் காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்து கொண்டால் ஒளிரும் சருமத்தைப் பெறலாம். பப்பாளி ஸ்மூத்தியாக்கியும் சாப்பிடலாம்.

சரும பராமரிப்புக்கு

சருமத்தில் பொலிவை பெற பப்பாளி துண்டுகளை பிசைந்து தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். பப்பாளி உடன் எலுமிச்சை சாறு , மற்றும் மஞ்சள் தூள் சிட்டிகை கலந்து சருமம் நிறமி மற்றும் வடு இருக்கும் இடத்தில் தடவி எடுக்கவும். வறண்ட சருமத்திற்கு பாதாம் கலந்து பயன்படுத்தவும்.பப்பாளியுடன் ஆரஞ்சு தோல் பொடி, தேன் கலந்து ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தலாம்.

அவகேடோ

அவகேடோ என்பது ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டது. நார்ச்சத்து வைட்டமின் ஏ, ஈ, சி, கே, பி6, நியாசின், ஃஓலேட் மற்றும் பான்டோதெனிக் அமிலம் கொண்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுக்க செய்கிறது. அவகேடோ ஆரோக்கியமான வயதை ஊக்குவிக்க கூடியதாகும். இதில் இருக்கும் லுடின் மற்றும் ஜீயாக்சாந்தின் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை தக்க வைக்க உதவும்.

உள்ளுக்கு

ஒளிரும் சருமத்தைப் பெற அவகேடோவை  காலை வேளையில் சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் கலக்கலாம். அவகேடோவை கீரையுடன் கலந்து ஸ்மூத்தி செய்யலாம். தயிருடன் கலந்து சாப்பிடலாம். ஸ்முத்தியாக எடுக்கலாம்.

சரும பராமரிப்புக்கு

10 நிமிடங்களுக்கு அவகேடோவை மசித்து சருமத்தில் தடவி விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். எண்ணெய் சருமத்துக்கு அவகேடோவுடன் பன்னீர் கலந்து பயன்படுத்தவும்.

ஆரஞ்சு

லேசான புளிப்புச் சுவையை கொண்டது ஆரஞ்சு என்பதால் சருமத்துக்கு அதிசயங்களை செய்யக்கூடியது. வைட்டமின் சி நிறைந்தவை. இது ஒரு ஆக்ஸிஜனேற்றி. இது கொலாஜன் சுரப்புக்கு உதவும்.

உள்ளுக்கு

ஒரு ஆரஞ்சு பழத்தை தினசரி சாப்பிட்டு வாருங்கள். குறைந்தது அரை பழமாவது அவசியம் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் சாறு குடிக்கலாம்.

சரும பராமரிப்புக்கு

சருமத்தில் ஆரஞ்சு சாற்றை  தடவி விடவும். பிறகு 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். எண்ணெய் சருமமாக இருந்தால் ஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, கடலை மாவு, மஞ்சள் தூள் கலக்கி எடுக்கவும். வறண்ட சருமத்துக்கு ஆரஞ்சு சாறுடன் பால், தேன், மஞ்சள் தூள் கலந்து பயன்படுத்தவும்.

​மாம்பழம்

சதைப்பற்றுள்ள இனிப்பு நிறைந்த மாம்பழம். இது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க செய்கிறது. வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் கே, ஃபிளேவனாய்டுகள், பாலி பினாலிக்ஸ், பீட்டா கரோட்டின் மற்றும் சாந்தோபில்ஸ் போன்றவை உள்ளது. இது சரும வீக்கத்தை தடுக்கவும் சருமத்தை புத்துயிராக்கவும்  வைத்திருக்க செய்கிறது. 

உள்ளுக்கு

தினசரி உணவில் மாம்பழத்தை  ஒரு கப் சேர்க்கலாம். மாம்பழ மிருதுவாக்கி குடிக்கலாம். சாலட்டில் மாம்பழம் சேர்த்து கொள்ளலாம். 

பராமரிப்புக்கு

 சருமம் முழுவதும் மாம்பழத்தை பிசைந்து தடவி எடுக்கவும்.உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் சருமத்துக்கு பன்னீர், எலுமிச்சை சேர்க்கலாம். பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி எடுக்கலாம். வறண்ட சருமமாக இருந்தால் மாம்பழம் உடன் தயிர் தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். 10 நிமிடங்களுக்கு முகத்தை கழுவி எடுக்கவும்.

வாழைப்பழம்

 

வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, கே, மற்றும் ஈ, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நல்ல இயற்கையான  மாய்சுரைசர் என்றும் சொல்லலாம். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது.வாழைப்பழத்தை கொண்டு ஒளிரும் சருமத்தை பெற பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

உள்ளுக்கு

ஓட்மீலில் வாழைப்பழத்தை காலை உணவில் சேர்க்கவும். இதை ஸ்மூத்தி வடிவிலும் எடுக்கலாம். காலை அல்லது மாலை உணவில் இதை சேர்க்கலாம். வாழைப்பழத்தை சாலட்டிலும் சேர்க்கலாம்.

பராமரிப்புக்கு

 உடல் முழுவதும் வாழைப்பழம் அல்லது வாழைப்பழத் தோலை தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் சருமத்துக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். வாழைப்பழத் தோலையும் பயன்படுத்தலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசி பழம் என்பது நார்ச்சத்து வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஃபோலேட், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ப்ரோமைலின் என்னும் நொதி அழற்சி எதிர்ப்பு கொண்டவை. தீப்புண் பட்டவர்களுக்கு அன்னாசி பழம் பயன்படுத்துவது இறந்த சரும செல்களை அகற்றி குணப்படுத்துவதை விரைவுபடுத்தும்.

உள்ளுக்கு

ஒரு கப் அன்னாசிப்பழம் தினசரி காலை அல்லது மாலை சிற்றுண்டிக்கு பயன்படுத்துங்கள்.சாலட் கலந்து அன்னாசி பழத்தை பயன்படுத்தலாம்.

பராமரிப்புக்கு

 சருமத்தின் மீது 1 டீஸ்பூன் பாலுடன் அன்னாசிப்பழச்சாற்றை கலந்து தடவி எடுக்கவும். பிறகு முகத்தை 10 நிமிடங்கள் கழித்து  கழுவி எடுக்கவும்.

ஆப்பிள்

ஆப்பிள் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளதால் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிளை தோலோடு பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு நன்மை தரக்கூடும்.

உள்ளுக்கு

ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தை நிறைவாக பெறமுடியும்.தினசரி ஒரு பகுதியாக சிற்றுண்டியில் நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் எடுத்துகொள்வது வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஆப்பிள் ஸ்மூத்தியாகவும் எடுக்கலாம்.

பராமரிப்புக்கு

சருமத்தில் ஆப்பிளை மசித்து தடவவும். வறண்ட சருமத்துக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து மசித்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

திராட்சை

திராட்சை என்பது ஆக்ஸிஜனேற்றத்துடன் ஏற்றப்படுகிறது. இது சரும புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ரெஸ்வெராட்ரால் ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது. இது வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் வளமான மூலம். கூடுதலாக திராட்சை விதை சாறு சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடும்.

உள்ளுக்கு

காலை அல்லது மாலை நேரத்தில் ஒரு கப் அளவு திராட்சை எடுக்கவும். இதை சாலட்டில் கலந்தும் பயன்படுத்தலாம்.

பராமரிப்புக்கு

 சருமத்தில் திராட்சையை பிசைந்து  தடவி எடுக்கவும். பிறகு 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.

​முலாம் பழம்

சரும சிகிச்சைக்கும் உதவக்கூடியவை:கிர்ணி பழம் என்றும் சொல்லலாம். இது வைட்டமின் ஏ, சி, கே, ஃபொலேட் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது 

கொரியன் பியூட்டி டிப்ஸ் : பளிங்கு மாதிரி முகம் வழவழன்னு இருக்க, இதை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துங்கள் போதும். 

உள்ளுக்கு

நம் உடலுக்கு தினமும் ஒரு கப் முலாம் பழத்தை சேர்க்கலாம். முலாம் பழத்துடன் வெல்லம் கலந்து ஸ்மூத்தியாக்கி குடிக்கலாம்.

பராமரிப்புக்கு

சருமத்தில் முலாம் பழத்தை மசித்து தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். இதனுடன் முகத்தில் திராட்சை சாறு கலந்து சேர்க்கவும். சரும நிற மாற்றத்தை தவிர்க்க  உதவுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post செம்ம அழகு டானு சொல்ல வைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டு, ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே போதும்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/wants-to-see-the-natural-beauty-of-your-skin-with-fruit-face-pack/feed/ 0 12204
ஆண்களின் முடி மற்றும் தோல் பராமரிப்பில் ஏற்படும் 14 முக்கிய தவறுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் https://tamilnewslive.com/beauty-tips/14-major-mistakes-in-hair-and-skin-care-and-tips-for-men/ https://tamilnewslive.com/beauty-tips/14-major-mistakes-in-hair-and-skin-care-and-tips-for-men/#respond Fri, 07 May 2021 17:22:20 +0000 https://tamilnewslive.com/?p=11808 மணமகன் நடைமுறைகள் தனிப்பட்டவை, ஆனால் எங்களுக்கு ஒரே குறிக்கோள். புத்துணர்ச்சியுடன் வாசனை மற்றும் ஒவ்வொரு நாளும் அழகாக இருக்க வேண்டுமென்றுதான். மீண்டும் மீண்டும், நாள் மற்றும் பகல்நேரங்களில் எதையும் செய்வது. தனிப்பட்ட பயிற்சியாளரின் கவனமாக பயிற்சியின் கீழ் ஜிம்மில் தொடங்குவது போன்றது. இது  நுட்பம் எல்லாமே, ஆனால் எங்கள் செயல்திறனைப் பார்க்கவும், கண்காணிக்கவும், வழிநடத்தவும் யாருமில்லாமல், இங்கே குனியவோ அல்லது நேராக்கவோ மறந்துவிடலாம். உங்களுக்குத் தெரிவதற்கு முன்பு, நாங்கள் எங்கள் வேலையின் நேரத்தை அதிகம் பெறவில்லை. ஆனால் […]

The post ஆண்களின் முடி மற்றும் தோல் பராமரிப்பில் ஏற்படும் 14 முக்கிய தவறுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் appeared first on Tamil News Live.

]]>
மணமகன் நடைமுறைகள் தனிப்பட்டவை, ஆனால் எங்களுக்கு ஒரே குறிக்கோள். புத்துணர்ச்சியுடன் வாசனை மற்றும் ஒவ்வொரு நாளும் அழகாக இருக்க வேண்டுமென்றுதான். மீண்டும் மீண்டும், நாள் மற்றும் பகல்நேரங்களில் எதையும் செய்வது.


தனிப்பட்ட பயிற்சியாளரின் கவனமாக பயிற்சியின் கீழ் ஜிம்மில் தொடங்குவது போன்றது. இது  நுட்பம் எல்லாமே, ஆனால் எங்கள் செயல்திறனைப் பார்க்கவும், கண்காணிக்கவும், வழிநடத்தவும் யாருமில்லாமல், இங்கே குனியவோ அல்லது நேராக்கவோ மறந்துவிடலாம். உங்களுக்குத் தெரிவதற்கு முன்பு, நாங்கள் எங்கள் வேலையின் நேரத்தை அதிகம் பெறவில்லை. ஆனால் நம்முடைய தனிப்பட்ட பராமரிப்பு ஆட்சிகளுக்கும் இதேதான் நடக்கலாம். எனவே, இதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக நாங்கள் இங்கு டிப்ஸ் தருகிறோம்.பின்வருவனவற்றுள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  

நீங்கள் பொழிவதற்கு முன் ஷேவிங்


சூடான நீர் முடியை மென்மையாக்குகிறது மற்றும் நீராவி வளிமண்டலம் திறந்த துளைகள். ஒரு பிந்தைய மழை ஷேவ் எளிதாக, வேகமாக இருக்க வேண்டும் மற்றும் அதிக அசுத்தங்களை அகற்றுவதன் மூலம் உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவும்.

 

மிக விரைவாக ஷேவிங்

இதற்கு மாறாக, நீங்கள் வறண்ட சருமத்திலிருந்து ஷேவிங் செய்ய  தொடங்கினால்,பொறுமையாக  உங்கள் நேரத்தை எடுத்து செய்து  கொள்ளுங்கள். விரைந்து ஷேவிங் செய்வதால் மூலையில் வெட்டு போன்ற தவறுகள், நிக்ஸ் மற்றும் கோபமான, சிவந்த சருமத்திற்கு வழிவகுக்கிறது.

மெல்லிய பற்கள் துலக்குதல்


யாரும் உண்மையில் பல் துலக்குவது எப்படி என்று கற்பிக்கப்படுவதில்லை. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை நாம் கற்றுக் கொள்ளும் ஒன்றாகும். நம் பற்களை திறம்பட சுத்தம் செய்வதில் நம்மில் பெரும்பாலோர் மிகவும் மோசமானவர்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

 

குறைந்தது இரண்டு நிமிடங்களாவது துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால்தான் சில அதிநவீன மின்சார தூரிகைகள் டைமர்களையும் பயன்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. நீங்கள் எங்கு துலக்குகிறீர்கள், எவ்வளவு நேரம் துலக்கி  இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க உதவுகிறது.தலையின் கோணமும் முக்கியமானது. இதை தெரிந்து கொண்டு  ஆரோக்கியமான வாய் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ளுங்கள் 

 

ஷேவ் செய்தபின் மிகைப்படுத்துதல்


எல்லாவற்றையும் வெளியேற்றுவதற்கு இது தூண்டுகிறது, ஆனால் நீங்கள் அதை வலுவாக மணக்க முடிந்தால், அது மற்றவர்களுக்கு பெருமளவில் அதிகாரம் அளிக்கிறது. எந்தவொரு கண்ணியமான ஈ டாய்லெட் அல்லது ஈ டி பர்பம் ஒன்று அல்லது இரண்டு ஸ்ப்ரேக்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.

வாசனை திரவியங்கள் வாசனையின் தடத்தை உங்களுக்கு பின்னால் இழுக்கின்றன. இது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த வாசனையுடன் ஒரு அறையை துர்நாற்றம் வீசுவோருக்கு, நாங்கள் உங்களுக்குச் சொல்ல இங்கே இருக்கிறோம்: குறைவானது அதிகம்.

ஒரு ஹேர்டிரையரைப் பயன்படுத்தவில்லை

இது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல: ஒரு அடி உலர்த்தி ஸ்டைலிங் நேரத்தை விரைவுபடுத்துகிறது மற்றும் மென்மையான தோற்றத்தையும் மெருகூட்டப்பட்ட பூச்சுகளையும் அடைகிறது. உற்பத்தி செய்யப்படும் வெப்பம் தனித்தனி இழைகளை குண்டாக மாற்ற உதவுகிறது, இதனால் முடி மெல்லியதாக 

ஓவர் பறித்தல்

ஒரு மோனோப்ரோ அல்லது வால்வரின் புருவம் ஒரு சிறிய முறுக்குதலால் பயனடையக்கூடும், ஆனால் எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரியும். புருவத்திற்கு மேலே செல்ல வேண்டாம், அல்லது நடுத்தரத்திலிருந்து அதிகமாக வெளியே எடுக்க வேண்டாம். அவை இயற்கையாக தோன்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

நிபுணர்களைப் பயன்படுத்தவில்லை


உங்கள் பிட்கள் மெழுகப்பட்டதற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறதா? அல்லது முகமா? ஒரு மிதக்கும் தொட்டியில் ஒருபோதும் அமைக்கப்படவில்லை? மைக்ரோடர்மபிரேசன், ஊசி அல்லது ஐ.பி.எல். மசாஜ் போன்ற சில சிகிச்சைகள் மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் முழுமையான நன்மைகளைக் கொண்டுள்ளன. அல்லது அவை முடிவுகளால் இயக்கப்படுகின்றன (அதாவது உங்களை அழகாகக் காண்பிக்கும்).

நீங்கள் ஒரு மார்பை மிகவும் மென்மையாக விரும்பினால், அதில் உங்கள் முகத்தை, அல்லது சூரிய ஒளியில்லாத பழுப்பு நிறத்தைக் காணலாம் அல்லது உங்கள் முதுகில் உள்ள ஒவ்வொரு கடைசி முடியையும் நிரந்தரமாக அகற்றலாம், அதைச் செய்ய ஒரு வழி இருக்கிறது, உங்கள் சொந்த வீட்டில் கூட. ட்ரீட்வெல் என்பது இங்கிலாந்தில் உள்ளூர் சந்திப்புகள் மற்றும் மொபைல் சேவைகளைக் கண்டறிய ஒரு நல்ல தளமாகும்.

ஒழுங்கற்றதாக இருப்பது

அவசரமாக பொதி செய்வது என்பது உங்கள் ரேஸர் / ரெட்டினோல் மாய்ஸ்சரைசர் / கிளைகோலிக் தலாம் ஆகியவற்றை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்பதாகும். முன்பே பயணித்த கழுவும் பை வழக்கமாக நன்கு வருவார். பயணத்தை மேற்கொள்வதாக நன்கு பயணித்த மனிதர்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த தர்க்கத்தை வீட்டிலுள்ள உங்கள் வழக்கத்திற்குப் பயன்படுத்துங்கள்: நீங்கள் அடிக்கடி ஜிம்மிலிருந்து நேராக வெளியே சென்றால், உங்கள் கிட் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தையும் இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள், அல்லது அவற்றை உங்கள் கார் க்ளோவ் பாக்ஸில் / வேலையில் ஒரு டிராயரில் சேமிக்கவும்.

வழக்கமாக  முடி வெட்டுதலுக்கும் இதுவே பொருந்தும் – நீங்கள் பணம் செலுத்தும்போது உங்கள் முடிதிருத்தும் புத்தகத்தை மீண்டும் பதிவு செய்ய நினைவில் கொள்ளுங்கள். அந்த வகையில், நீங்கள் அதைச் செய்வதற்கு முன் வாரங்கள் நழுவாது.

உங்கள் நகங்களை புறக்கணித்தல்


முதல் பதிவுகள் எண்ணப்படுகின்றன மற்றும் ஒரு அழகுபடுத்தப்பட்ட கை நீங்கள் விவரங்களை கவனிக்கிறீர்கள் என்று கூறுகிறது. கால் நகங்களுக்கு இது இரட்டிப்பாகும், குறிப்பாக குளிர்காலத்தின் உறக்கநிலைக்குப் பிறகு உங்கள் கால்களை பொதுக் காட்சிக்கு வைக்க நினைத்தால்.

உயர் தெரு ஆணிப் பட்டியில் நகங்களை அல்லது பாதத்தில் வரும் காழ்ப்புக்கானவற்றை முயற்சிக்க பயப்பட வேண்டாம்; சிகிச்சைகள் ஒரு மார்க்கெட் ஸ்பாவுடன் ஒப்பிடும்போது விலை உயர்ந்தவை அல்ல, தொழில்நுட்ப வல்லுநர் நீங்கள் வீட்டில் செய்வதை விட சிறந்த வேலையைச் செய்வார். மேலும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வெடுக்கலாம்.

பல ஆண்டுகளாக ஒரே தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்


நீங்கள் நினைவில் கொள்ளும் வரை ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்களா? ஷாம்பூக்கள் காலப்போக்கில் திறம்பட உணர்வை நிறுத்தலாம். அல்லது உங்கள் மாய்ஸ்சரைசர் இனி கீறல் இல்லாமல் இருக்கலாம். எங்கள் தலைமுடி மற்றும் சருமத்தின் தேவைகள் காலப்போக்கில் அடிக்கடி மாறுகின்றன. எனவே நீங்கள் முயற்சித்த மற்றும் நம்பகமானவர் இனி நம்பகமானவராக இருக்கக்கூடாது.

சுருள்அலை அலையான முடி


அலை அலையான, சுருள் மற்றும் கட்டுக்கடங்காத முடி வகைகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்போது தலைமுடியை வழக்கமாக ஷாம்பு செய்வதன் மூலம் ஒரு தந்திரத்தை காணவில்லை. நீங்கள் எப்போதுமே ஷாம்பூவை போட வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதைத் தவிர்த்து, கண்டிஷனரைக் கொண்டு கழுவுவது முடியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் சுருட்டை வரையறுக்கப்பட்டு, ஃப்ரிஸ் இலவசமாக இருக்கும்.

ஹேர் ஜெல் ஓவர்லோடிங்

ஹேர் ஜெல் பயன்படுத்துவது  பொதுவானது, நாங்கள் அனைவரும் இதைச் செய்துள்ளோம். ஆனால் சமீபத்தில் நீங்கள் கொஞ்சம் ஹேர் ஜெல் அதிகமாக  பெறுகிறீர்கள் என்றால் உங்கள் தலைமுடி உற்பத்தியைக் குறைக்கவும். மேலும், அதை எப்போதும் உங்கள் கைகளுக்கு இடையில் சூடேற்றி, தலையின் பின்புறத்திலிருந்து முன் நோக்கி வேலை செய்யுங்கள். இதன் பொருள் நீங்கள் தலைமுடியை அதிக சுமை மற்றும் உங்கள் மயிரிழையை கிரீஸ் செய்ய மாட்டீர்கள்.நினைவில் கொள்ளுங்கள்: மீண்டும் ஆரம்பித்து உங்கள் தலைமுடியை கழுவுவதை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சேர்ப்பது எப்போதும் எளிதானது.

ஒரு வழுக்கை இடத்தை மறைத்தல்


உங்கள் தலைமுடியை இழப்பது எளிதான அனுபவம் அல்ல. இருப்பினும், சில நேரங்களில் அதைத் தழுவி முன்னேறுவது சிறந்தது. பெயிண்ட்-ஆன் சாயங்கள் மற்றும் நிரப்புதல் பொடிகள் மற்றும் எங்கள் பாதுகாப்பற்ற தன்மைகளுக்கு விளையாடும் தயாரிப்புகளில் உங்கள் பணத்தை வீணடிக்க அனைத்து வழிகளும் உள்ளன. இந்த விஷயங்கள் யாரையும் முட்டாளாக்காது; நீங்கள் ஒரு வெட்டு அல்லது ஒரு குறுகிய கடினமான பயிர் மூலம் அழகாக இருப்பீர்கள், எங்களை நம்புங்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post ஆண்களின் முடி மற்றும் தோல் பராமரிப்பில் ஏற்படும் 14 முக்கிய தவறுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/14-major-mistakes-in-hair-and-skin-care-and-tips-for-men/feed/ 0 11808
தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/ https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/#respond Fri, 02 Apr 2021 15:52:38 +0000 https://tamilnewslive.com/?p=6828   திரிபலா சூரணம் என்பது மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள் ,இது ஒரு காய கற்பம். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்து தயாரித்ததே திரிபலா சூரணம்.   கடுக்காய்    துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத,கப தன்மையைச் சீராக்கும் தன்மை இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். கடுக்காய் […]

The post தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? appeared first on Tamil News Live.

]]>
 

திரிபலா சூரணம் என்பது மூன்று மூலிகைகளின் கூட்டுப் பொருள் ,இது ஒரு காய கற்பம்.


நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்து தயாரித்ததே திரிபலா சூரணம்.

 

கடுக்காய்

 

 துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத,கப தன்மையைச் சீராக்கும் தன்மை இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும். கடுக்காய் சுத்தி செய்து தான் மருந்தாக பயன்படுகிறது.

 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஒரு காயகல்பம் , என்றும் மங்கா இளமைத் தரும் அமிர்தம்.

வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது.

தான்றிக்காய்

 

தான்றிக்காய் மரத்தினை மகாவிருட்சம் என்பர், எல்லாவகை இருமல் களையும் , சளியையும் நீக்கவல்லது.

தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.

 

திரிபலா சூரணம் செய்முறை: 

 

கடுக்காய் ஒரு பங்கு,  நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்து நன்றாக நிழலில் உலர்த்தி காயவைக்கவும். காய்ந்த மூன்றையும் அரைத்துப்பயன்படுத்தவும்.எல்லா

கடைகளிலும் எளிதாக கிடைக்கும்.பொடி அல்லது மாத்திரை வடிவில் கிடைக்கிறது.

 

திரிபலா சாப்பிடும் முறை

 

*மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். 

 

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். 

 

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

 

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

 

*இரவில் பால் குடித்து விட்டு உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் பால் குடித்து ஒரு மணிநேரம் கழித்து திரிபலாவை எடுத்து கொள்ளவும்.

 

திரிபலா சூரணம் இரவில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து. ஒட்டுமொத்த உடலின் நலனுக்காக தினமும் இரவில் எடுத்துக் கொள்ளலாம். இதன் பலன்களை பட்டியல் இட பக்கங்கள் போதாது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தினசரி இரவு திரிபலா சூரணம் எடுத்து கொள்ளலாமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/triphala-is-an-ancient-herbal-remedy-with-antioxidant-anti-inflammatory-and-antibacterial-effects/feed/ 0 6828
பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் முட்டை ஓடு https://tamilnewslive.com/beauty-tips/fact-that-egg-shells-are-almost-as-useful-for-beauty-purposes-as-the-insides-are-we-give-you-various-reasons-why-you-must-use-these-shells-in-your-beauty-and-skincare-regime/ https://tamilnewslive.com/beauty-tips/fact-that-egg-shells-are-almost-as-useful-for-beauty-purposes-as-the-insides-are-we-give-you-various-reasons-why-you-must-use-these-shells-in-your-beauty-and-skincare-regime/#respond Fri, 02 Apr 2021 15:36:01 +0000 https://tamilnewslive.com/?p=6823   முட்டை புரதச்சத்து நிறைந்தது , உடலுக்கு வலிமை தரும் என்பது நாம் அறிந்ததே! முட்டையை சமையலுக்கு பயன்படுத்தும் போது, முட்டை ஓடுகளை குப்பையில் போட்டு பழக்கப்பட்ட நமக்கு , முட்டை ஓடுகளை கொண்டு பெண்களின் அழகுக்கு அழகு கூட்ட இயலும் என்பது புதிய தகவல்.   முட்டை ஓடுகளை சுத்தப்படுத்துதல்   முட்டை ஓடுகளின் உள்ளே இருக்கும் மெல்லிய உறையை எடுத்து விடவும். பிறகு அதனை தண்ணீரில் நன்கு கழுவவும். முட்டை ஓடுகளை ஒரு பாத்திரத்தில் […]

The post பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் முட்டை ஓடு appeared first on Tamil News Live.

]]>
 

முட்டை புரதச்சத்து நிறைந்தது , உடலுக்கு வலிமை தரும் என்பது நாம் அறிந்ததே! முட்டையை சமையலுக்கு பயன்படுத்தும் போது, முட்டை ஓடுகளை குப்பையில் போட்டு பழக்கப்பட்ட நமக்கு , முட்டை ஓடுகளை கொண்டு பெண்களின் அழகுக்கு அழகு கூட்ட இயலும் என்பது புதிய தகவல்.

 

முட்டை ஓடுகளை சுத்தப்படுத்துதல்

 

முட்டை ஓடுகளின் உள்ளே இருக்கும் மெல்லிய உறையை எடுத்து விடவும். பிறகு அதனை தண்ணீரில் நன்கு கழுவவும். முட்டை ஓடுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு , கைகளால் சிறுதுண்டுகளாக உடைக்கவும். மைக்ரோ வேவ் அவனில் வைத்து பத்து நிமிடம் சூடு செய்யவும் அல்லது ஒரு நாள் முழுவதும் நல்ல வெயிலில் காய வைத்து எடுக்கவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். கிருமிகள் நீக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும்.


முட்டை ஓடு கலவை( Egg shell Face Packs)


முட்டை ஓடு பவுடர் எடுத்துக் கொண்டு அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி காயவிடவும். கை , கால்முட்டியில் உள்ள கறுப்பு நீங்கவும் தடவலாம். பத்து நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். முகச்சுருக்கங்கள் நீங்க எளிய முறை இது. முகத்தில் உள்ள சருமத்திற்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கிறது.

 

* முட்டை ஓடு பவுடரை தேனில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவவும். சருமம் பளிச்சென்று மிளிரும்.

 

* ஆப்பிள் சிடர் வினீகர் ஒரு பங்கு எடுத்து கொண்டு அதில் முட்டை ஓடு பவுடரை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும். முட்டை ஓடு பவுடரின் சத்துக்கள் கரைந்து இருக்கும்.இதில் பஞ்சினை முக்கிய எடுத்து முகத்தில் தடவவும்.

 

*முட்டை ஓடு பவுடரை தயிருடன் கலந்து , மயிர்க்கால்களில் படுமாறு தடவவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். தலைமுடி பட்டுப் போல் மாறும்.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் முட்டை ஓடு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/fact-that-egg-shells-are-almost-as-useful-for-beauty-purposes-as-the-insides-are-we-give-you-various-reasons-why-you-must-use-these-shells-in-your-beauty-and-skincare-regime/feed/ 0 6823
Summer Skin Whitening Tips to Get Fair Skin in 8 Days! https://tamilnewslive.com/beauty-tips/summer-skin-whitening-tips-to-get-fair-skin-in-8-days/ https://tamilnewslive.com/beauty-tips/summer-skin-whitening-tips-to-get-fair-skin-in-8-days/#respond Mon, 23 Mar 2020 18:33:22 +0000 https://tamilnewslive.com/?p=3935 Here is one of the natural skin whitening tips to become fair in 8 days especially in summer season. During this hot weather generally our skin becomes dark due to over sweating, over oiliness, over-heat and sun-tans. Many people get skin problems like pimples, rashes, sun burns in summer. Just follow this easy daily skin […]

The post Summer Skin Whitening Tips to Get Fair Skin in 8 Days! appeared first on Tamil News Live.

]]>
Here is one of the natural skin whitening tips to become fair in 8 days especially in summer season. During this hot weather generally our skin becomes dark due to over sweating, over oiliness, over-heat and sun-tans. Many people get skin problems like pimples, rashes, sun burns in summer.

Just follow this easy daily skin care routine at home for 7 days and on the 8th day you can see visible fairness and glow on face and neck. It is one of the most effective summer beauty tips which many celebrities use at home.

Ingredients you Need

Raw Milk

Milk contains lactic acid; it helps to keep skin soft, smooth, glowing and clear. Applying milk on face increases fairness and softness. It also removes all sun-tans, dirt, oiliness, all impurities thus gives bright and glowing skin.

Cucumber

Water content rich in cucumber helps to purify and increase skin colour naturally. Applying cucumber on face removes sun tans naturally. Try this summer face mask to get a glowing skin in one week at home!

Steps to Make Summer Fairness Face Mask

This face mask acts as a best cleansing milk that boost skin health.

  • Take ½ cucumber and peel its outer skin
  • Cut into thin slices – make 10-12 slices
  • Soak the cucumber slices in raw milk
  • Refrigerate it for an hour or two
  • Cool cucumber milk face mask is ready to use!

Steps to Apply Summer Fairness Face Mask

  • Wash your face in a clean water
  • Wipe the water with a towel
  • Take cool cucumber slices soaked in milk
  • Place the slices over face and neck
  • Lie down for 15-20 minutes
  • Gently massage the cucumber slices on face and neck
  • Wash the face and neck with cool water.

Dont spend much on best skin whitening products in the world. Just this simple beauty tip works effectively to boost fairness in face and neck. You can see permanent skin whitening results in just 2 weeks. It works well to increase skin colour to fair naturally. Follow it regularly for 10-12 days to get visible results.

The post Summer Skin Whitening Tips to Get Fair Skin in 8 Days! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/summer-skin-whitening-tips-to-get-fair-skin-in-8-days/feed/ 0 3935
வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/ https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/#respond Sun, 01 Jul 2018 07:54:45 +0000 https://tamilnewslive.com/?p=2603 பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள். மருக்கள் என்பது என்ன? தோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வரும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் […]

The post வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் இருக்கும் அசௌகரியம், அழகைப் பாதிக்கும் விஷயம் என்றால் அது மருக்கள் தான். இந்த மருக்கள் உடலுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை. ஆனால் அழகென்று வரும் போது சிறிது கலக்கமடைகிறார்கள்.

மருக்கள் என்பது என்ன?

Wart in Bodyதோலின் மீது சிறு புடைப்பு போல் வளர்த்து வரும். இது பலூன் போல உப்பிக்கொண்டு இருக்கும். கழுத்து, முகம், அக்குள், தொடை இடுக்குகளில் வரும். மருக்கள் எதனால் வருகிறது என்று இதுவரை தெரியவில்லை. உடற்பருமன் உடையவர்களுக்கு மருக்கள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு.

மருக்களின் அளவு

ஒன்று முதல் நூற்றுக்கணக்கான மருக்கள் தோன்றும். பருவ வயதில் தான் உருவாக ஆரம்பிக்கிறது. திராட்சை போல் கிளைத்து வருவதும் உண்டு. பொதுவாக 2 mm அளவில் இருந்து 5 mm அளவுக்கு தான் இருக்கும் அசாதாரணமாக 5 cm வரை உருவாகிறது.

மருக்களை எப்படி நீக்குவது?

Laser Removalமருக்களை நீக்கினால் வேகமாக பரவும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால் அது உண்மை அன்று. அறுவை சிகிச்சை, லேசர் மூலம் சுட்டுப்பொசுக்குதல், அதற்கான இரத்த ஓட்டத்தை தடைச் செய்யும் போது ஊட்டம் இல்லாமல் சுருங்கி உதிர்ந்த விடும். திரவ நைட்ரஜன் மூலம் உறைய வைக்கும் போது அது உதிர்ந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால் தோல் மருத்துவர் மூலம் நீக்குதல் தான் சிறப்பு.

பெரும்பாலான மருக்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. நகைகள், ஆடைகள், சதை மடிப்பு எனும் போது கிடைக்கும் உராய்வு, அழுத்தத்தால் தான் பலநேரங்களில் வலி ஏற்படுகிறது.

புற்றுநோயாக மாறுவதற்க்கான சாத்தியம் மிகவும் குறைவு. அரிதாக மருக்கள் சிவந்து நிறம் மாறி அதில் இருந்து நீர் வடிந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் பயாப்சி எடுப்பது நல்லது.


Wart is a fleshy bump mucous membrane on the skin, caused by papillomavirus. Warts can be found anywhere on skin, from face to feet. Cutting off a wart cannot cure it. Flat warts and long skinny warts that look like tiny fingers usually appear on your face. Plantar warts are common that are large flat bumps on the bottoms of feet. There are some natural remedies and Laser treatment for wart removal.


The post வீட்டிலே மருக்களை நீக்குவது எப்படி? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/beauty-tips/tamil-beauty-tips/remove-wart-home/feed/ 0 2603