Breaking News – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Mon, 10 May 2021 04:01:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Breaking News – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 இந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் – தி லான்செட் இதழ் https://tamilnewslive.com/india/10-lakh-people-die-of-corona-in-india-the-lancet-magazine/ https://tamilnewslive.com/india/10-lakh-people-die-of-corona-in-india-the-lancet-magazine/#respond Mon, 10 May 2021 04:01:54 +0000 https://tamilnewslive.com/?p=12166 இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு 4 லட்சம் பேரைத் தாண்டி அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நொடிக்கும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என இந்திய மருத்துவ குழு தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தலா 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாள் தோறும் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் […]

The post இந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் – தி லான்செட் இதழ் appeared first on Tamil News Live.

]]>
இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு 4 லட்சம் பேரைத் தாண்டி அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நொடிக்கும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என இந்திய மருத்துவ குழு தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தலா 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாள் தோறும் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குரையே இல்லை அப்படி யாராவது ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக செய்தி பரப்பினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக கூறுவது பொய்யாகவும் இருக்கலாம் ஏனென்றால் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

இதுதவிர மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், ஏப்ரல் மாத தொடக்கத்தில் 11 மாநிலங்களில் மட்டுமே அதிக பாதிப்புகள் காணப்பட்ட நிலையில் தற்போது 17 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து விட்டதாக மத்திய அரசு தகவல்களைத் தருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக மருத்துவ இதழான தி லான்செட்(the lancet) ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் பலமுறை எச்சரித்தும் மோடி அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று  முடிவுறும் தருவாயில் இருப்பதாக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்ததாகவும் இந்த இதழ் கூறியுள்ளது.

கொரோனா தொற்றை இந்தியா வென்று விட்டதாகவும் ஹெர்ட் இம்முனிட்டி எனப்படும் கூட்டு எதிர்ப்புத்திறன் மக்களிடையே உருவாக்கி விட்டதாகவும் தவறான தகவலை மத்திய அரசு வெளியிட்டு வந்ததாக கூறி உள்ள லென்செட் இதழ் நாட்டில் 21 விழுக்காடு பேர் மட்டுமே எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறிவிட்டு நிலையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளை ட்விட்டரில் நீக்குவதன் மூலம் நரேந்திர மோடி அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக ஏலனமாக விமர்சித்துள்ளது.

சூப்பர்  ஸ்ப்ரெட்ர்ஸ் ஈவன் எனப்படும் கொத்துக் கொத்தான கொரோனா பரவல்கள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தபோதும் கும்பமேளா போன்ற மத விழாக்களையும், பெரும் கூட்டத்துடன் அரசியல் பேரணிகளையும் மத்திய அரசு அனுமதித்து வந்ததாகவும் லான்செட் இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அரசு மேற்கொண்ட பரப்புரை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டதாகவும் இதனால் வெறும் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் லான்செட் இதழ் சுட்டிக்காட்டி உள்ளது. கொரோனா தொற்று பரவலை திடீரென எதிர்கொள்ள உத்தரபிரதேசம் மற்றும்மகாராஷ்டிர மாநிலங்களில் தயார் நிலையில் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் இல்லாமை, பிணங்களை எரிப்பதற்கு எரிமலைகள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டதாகவும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கேட்டவர்கள் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்ட வருவதாகவும் லான்செட் இதழ் குற்றம் சாட்டி உள்ளது.

அதே வேளையில் கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டதால் போதுமான ஆக்சிஜன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டதாக அந்த இதழ் பாராட்டியுள்ளது. கொரோனா காலத்தில் வெளிப்படையாக விவாதங்களை முன்னெடுக்காமல் தன் மீதான விமர்சனங்களை தடுக்க மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை என்று கூறி உள்ள லான்செட் இதழ் ஆகஸ்ட் ஒன்றாம் நாளுக்குள் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கு மோடி அரசாங்கமே முழு பொறுப்பு என்றும் கடுமையாக சாடியுள்ளது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் – தி லான்செட் இதழ் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/10-lakh-people-die-of-corona-in-india-the-lancet-magazine/feed/ 0 12166
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 1000 லிட்டர் ஆக்சிஜன் டேங்க் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்  https://tamilnewslive.com/news-in-tamil/1000-liter-oxygen-tank-at-kanchipuram-government-general-hospital-minister-anparasan/ https://tamilnewslive.com/news-in-tamil/1000-liter-oxygen-tank-at-kanchipuram-government-general-hospital-minister-anparasan/#respond Sat, 08 May 2021 10:09:12 +0000 https://tamilnewslive.com/?p=11984 காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஓரிரு நாளில் புதிய ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட உள்ளது. அதனால் இனி ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவாது என தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதியளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடத்தில் 347 ஆக்சிஜனோடு கூடிய படுக்கைகள் தயார் செய்யப்படும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும், கூடுதலாக கொரோனா […]

The post காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 1000 லிட்டர் ஆக்சிஜன் டேங்க் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்  appeared first on Tamil News Live.

]]>
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஓரிரு நாளில் புதிய ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட உள்ளது. அதனால் இனி ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவாது என தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடத்தில் 347 ஆக்சிஜனோடு கூடிய படுக்கைகள் தயார் செய்யப்படும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும், கூடுதலாக கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் 16 கேஎல் ஆக்சிஜன் வசதியும் தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுவதால் கொரோனா நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 1000 லிட்டர் ஆக்சிஜன் டேங்க் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்  appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/1000-liter-oxygen-tank-at-kanchipuram-government-general-hospital-minister-anparasan/feed/ 0 11984
பேருந்துகளில் பயணிக்க திருநங்கைகளுக்கும் இலவசம் -மு.க.ஸ்டாலின் https://tamilnewslive.com/news-in-tamil/free-for-transgender-people-to-travel-by-bus-mk-stalin/ https://tamilnewslive.com/news-in-tamil/free-for-transgender-people-to-travel-by-bus-mk-stalin/#respond Sat, 08 May 2021 09:36:09 +0000 https://tamilnewslive.com/?p=11975 மகளிரை போலவே திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் வழங்குவது குறித்து ஆவணம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநங்கைகள் அதிகம் துன்பப்படுவதால் அவர்களுக்கும் இலவச பயணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துஜா ரகுநாதன் என்பவர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் நலன் உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலம் […]

The post பேருந்துகளில் பயணிக்க திருநங்கைகளுக்கும் இலவசம் -மு.க.ஸ்டாலின் appeared first on Tamil News Live.

]]>
மகளிரை போலவே திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் வழங்குவது குறித்து ஆவணம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநங்கைகள் அதிகம் துன்பப்படுவதால் அவர்களுக்கும் இலவச பயணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துஜா ரகுநாதன் என்பவர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் நலன் உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலம் தொட்டே திமுக அரசு வழங்கும் எனவும் தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி என்றும் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

பெண்களைப் போலவே திருநங்கைகளும்  கட்டணமின்றி பேருந்துகளில் பயணிப்பது குறித்து பரிசீலித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

The post பேருந்துகளில் பயணிக்க திருநங்கைகளுக்கும் இலவசம் -மு.க.ஸ்டாலின் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/free-for-transgender-people-to-travel-by-bus-mk-stalin/feed/ 0 11975
தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படுபவை?? https://tamilnewslive.com/news-in-tamil/what-is-allowed-in-tamil-nadu-on-full-curfew-days/ https://tamilnewslive.com/news-in-tamil/what-is-allowed-in-tamil-nadu-on-full-curfew-days/#respond Sat, 08 May 2021 05:47:36 +0000 https://tamilnewslive.com/?p=11926 தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று, நாளை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து விதமான கடைகளும் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மளிகை, இறைச்சி, தேநீர், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், பூ மற்றும் காய்கறி விற்பனைகள் ஆகியவைக்கு 12 […]

The post தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படுபவை?? appeared first on Tamil News Live.

]]>
தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று, நாளை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து விதமான கடைகளும் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் மளிகை, இறைச்சி, தேநீர், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், பூ மற்றும் காய்கறி விற்பனைகள் ஆகியவைக்கு 12 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி, தமிழக அரசு சார்ந்த துறைகளில் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
  • பெட்ரோல்,  டீசல் பங்குகள் முழு நேரமும் இயங்கும் 
  • வேலைவாய்ப்பு, நேர்முக தேர்வு, திருமணம் ஆகிவையில் பங்கேற்பார்கள் உரிய ஆவணங்களுக்கு கீழ் அனுமதிக்கப்படுவர்.
  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு மையங்கள் ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • மருத்துவமனைக்கு செல்பவர்கள்  உரிய ஆவணத்துடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  • மேலும் இறுதி சடங்குகளில் 20 நபர்களும், திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படுபவை?? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/what-is-allowed-in-tamil-nadu-on-full-curfew-days/feed/ 0 11926
தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு https://tamilnewslive.com/news-in-tamil/full-curfew-in-tamil-nadu-from-may-10-to-24/ https://tamilnewslive.com/news-in-tamil/full-curfew-in-tamil-nadu-from-may-10-to-24/#respond Sat, 08 May 2021 03:46:21 +0000 https://tamilnewslive.com/?p=11910 தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு  மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என தமிழக அரசு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து கடைகளும் இரவு  9 […]

The post தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு appeared first on Tamil News Live.

]]>
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு  மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என தமிழக அரசு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து கடைகளும் இரவு  9 மணி வரை  திறந்திருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10 தேதி முதல் தொடங்க உள்ள ஊரடங்கால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் மதுபான  கடைகளை திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/full-curfew-in-tamil-nadu-from-may-10-to-24/feed/ 0 11910
முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் இன்று காலமானார்! https://tamilnewslive.com/breaking-news/ajit-singh-leader-of-the-rashtriya-lok-dal-party-and-former-union-minister-has-passed-away/ https://tamilnewslive.com/breaking-news/ajit-singh-leader-of-the-rashtriya-lok-dal-party-and-former-union-minister-has-passed-away/#respond Thu, 06 May 2021 08:15:41 +0000 https://tamilnewslive.com/?p=11454 ராஷ்டிரிய  லோக் தள கட்சியின் தலைவர் அஜித் சிங் கடந்த ஏப்ரல் 20ஆம் நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விபி சிங், பீவி நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் அமைச்சரவையில் இவர் இடம் பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித்சிங்  7 முறை மக்களவை எம்பியாக இருந்தார். அஜித்சிங் உத்தரபிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் […]

The post முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் இன்று காலமானார்! appeared first on Tamil News Live.

]]>
ராஷ்டிரிய  லோக் தள கட்சியின் தலைவர் அஜித் சிங் கடந்த ஏப்ரல் 20ஆம் நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விபி சிங், பீவி நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் அமைச்சரவையில் இவர் இடம் பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித்சிங்  7 முறை மக்களவை எம்பியாக இருந்தார்.

அஜித்சிங் உத்தரபிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி இருந்தார். அஜித்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் இன்று காலமானார்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/ajit-singh-leader-of-the-rashtriya-lok-dal-party-and-former-union-minister-has-passed-away/feed/ 0 11454
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்! https://tamilnewslive.com/news-in-tamil/new-regulations-coming-into-effect-today-as-corona-spreads-increase/ https://tamilnewslive.com/news-in-tamil/new-regulations-coming-into-effect-today-as-corona-spreads-increase/#respond Thu, 06 May 2021 05:31:58 +0000 https://tamilnewslive.com/?p=11443 தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.  இன்று முதல் பால் மற்றும் மருந்து சம்பந்தப்பட்ட கடைகள் தவிர அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும். அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியர் ரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் […]

The post கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்! appeared first on Tamil News Live.

]]>
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. 

  • இன்று முதல் பால் மற்றும் மருந்து சம்பந்தப்பட்ட கடைகள் தவிர அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  • பயணியர் ரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
  • 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள்,இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
  •  தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.
  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயக்க அனுமதிக்கப்படுகிறது.ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  •  மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
  • மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • அனைத்து உணவகங்களிலும்  பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
  • விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவும் வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
  • உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
  • மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளில், அழகு நிலையங்கள்,  இயங்க தடை விதிக்கப்படுகிறது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/new-regulations-coming-into-effect-today-as-corona-spreads-increase/feed/ 0 11443
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு திடீர் மறைவு! https://tamilnewslive.com/news-in-tamil/famous-comedian-and-character-actor-pandu-suddenly-dies/ https://tamilnewslive.com/news-in-tamil/famous-comedian-and-character-actor-pandu-suddenly-dies/#respond Thu, 06 May 2021 04:08:39 +0000 https://tamilnewslive.com/?p=11426 பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில்  பாண்டுவும் அவரது மனைவியும் ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டு காலமானார்.மேலும், அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பாண்டு அவர்களுக்கு வயது 74. மேலும் இவர் அதிமுகவின் கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை […]

The post பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு திடீர் மறைவு! appeared first on Tamil News Live.

]]>
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில்  பாண்டுவும் அவரது மனைவியும் ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டு காலமானார்.மேலும், அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 பாண்டு அவர்களுக்கு வயது 74. மேலும் இவர் அதிமுகவின் கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு திடீர் மறைவு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/famous-comedian-and-character-actor-pandu-suddenly-dies/feed/ 0 11426
உடல் நலக்குறைவால் டிராபிக் ராமசாமி திடீரென காலமானார் https://tamilnewslive.com/news-in-tamil/traffic-ramasamy-died-suddenly-due-to-ill-health/ https://tamilnewslive.com/news-in-tamil/traffic-ramasamy-died-suddenly-due-to-ill-health/#respond Wed, 05 May 2021 05:28:12 +0000 https://tamilnewslive.com/?p=11224 உடல்நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். 87 வயதான இவர் உடல்நலக்குறைவால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார். ஆரம்ப காலத்தில் பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசுக்கு உதவி  செய்தவர் ராமசாமி. கடந்த 20 ஆண்டுகளாக பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றவர் டிராபிக் ராமசாமி. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் முக்கிய  பிரச்சனைகளுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் […]

The post உடல் நலக்குறைவால் டிராபிக் ராமசாமி திடீரென காலமானார் appeared first on Tamil News Live.

]]>
உடல்நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். 87 வயதான இவர் உடல்நலக்குறைவால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார்.

ஆரம்ப காலத்தில் பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசுக்கு உதவி  செய்தவர் ராமசாமி. கடந்த 20 ஆண்டுகளாக பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றவர் டிராபிக் ராமசாமி.

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் முக்கிய  பிரச்சனைகளுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி முன்னின்று நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டவர் இவர் சட்டப் போராளி எனவும் மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post உடல் நலக்குறைவால் டிராபிக் ராமசாமி திடீரென காலமானார் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news-in-tamil/traffic-ramasamy-died-suddenly-due-to-ill-health/feed/ 0 11224
234 தொகுதிக்கான தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை விவரம் https://tamilnewslive.com/breaking-news/tamil-nadu-assembly-elections-2021-results-live/ https://tamilnewslive.com/breaking-news/tamil-nadu-assembly-elections-2021-results-live/#respond Sun, 02 May 2021 07:18:34 +0000 https://tamilnewslive.com/?p=10552 நடந்து வரும் தமிழக 234 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பான நிலையில் நடந்து வருகிறது. நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலையில் திமுக – 142, அதிமுக – 91, அமமுக – 0, மநீமா – 1, நாதக – 0 ஆகிய நிலைப்பாட்டில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி முன்னிலை […]

The post 234 தொகுதிக்கான தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை விவரம் appeared first on Tamil News Live.

]]>
நடந்து வரும் தமிழக 234 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பான நிலையில் நடந்து வருகிறது. நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலையில் திமுக – 142, அதிமுக – 91, அமமுக – 0, மநீமா – 1, நாதக – 0 ஆகிய நிலைப்பாட்டில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.

  •  எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் 26,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • ஆர்.கே. நகர்  தொகுதியில் திமுக வேட்பாளர் எபினேசர் முன்னிலை.
  • சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி முன்னிலை.
  • பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே. பி. அழகன் முன்னிலை. 
  • திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.
  • பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2,583 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். 
  • போடி நாயகன் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பின்னடைவில் உள்ளார்.
  • கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை.
  • சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post 234 தொகுதிக்கான தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை விவரம் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/breaking-news/tamil-nadu-assembly-elections-2021-results-live/feed/ 0 10552