Mahalakshmi – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Fri, 04 Dec 2020 08:53:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7 https://tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon-32x32.png Mahalakshmi – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 மாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியீடு – திட்டவட்ட அறிவிப்பு! https://tamilnewslive.com/tamil-cinema-news/master-movie-theater-release-date-confirmed-announcement/ https://tamilnewslive.com/tamil-cinema-news/master-movie-theater-release-date-confirmed-announcement/#respond Fri, 04 Dec 2020 08:52:34 +0000 https://tamilnewslive.com/?p=5484 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் ஓடிடியில் வெளியாகவுள்ளது என செய்திகள் பரவியது. இதனை அடுத்து திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மாநகரம், கைதி வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64-வது படமான மாஸ்டர் படத்தை இயக்கி இருப்பதால் வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் பட பாடல்கள் அனைத்தும் ஹிட், இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் வருகிறார் […]

The post மாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியீடு – திட்டவட்ட அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் ஓடிடியில் வெளியாகவுள்ளது என செய்திகள் பரவியது. இதனை அடுத்து திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மாநகரம், கைதி வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64-வது படமான மாஸ்டர் படத்தை இயக்கி இருப்பதால் வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் பட பாடல்கள் அனைத்தும் ஹிட், இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் வருகிறார் விஜய் சேதுபதி. சிறுவயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Master Film Theater Release Date

இதனிடையே மாஸ்டர் படமும் ஓடிடி  தளமான நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தகவலால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு அடைந்தனர். மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் பரவி வருவதை அடுத்து மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் வெளியிட்டை எந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதை அறிவோம். மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதே தற்போதைய சூழலில் சரியாக இருக்கும்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். பிரபலமான ஓடிடி தளங்களில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம்.தமிழ் திரைப்பட துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாஸ்டர் படம் எதில் வெளியீடு, எப்போது வெளியீடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நிச்சயம் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என மாஸ்டர் படக்குழு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை தெரிவிக்கிறது. என்ன முடிவு என்பதை விரைவில் சொல்கிறோம் என்று கூறியுள்ளதால் தியேட்டரா? ஓடிடியா? என்ற குழப்பம் இந்த அறிக்கைக்கு பின்னும் தொடரும் என்றே தெரிகிறது. எனினும் அடுத்த சில வாரங்களில் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு அதன் மூலம் தங்களது இறுதி முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியீடு – திட்டவட்ட அறிவிப்பு! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/master-movie-theater-release-date-confirmed-announcement/feed/ 0 5484
குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன் – அனுஷ்கா சர்மா! https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-return-to-cinema-shooting-with-the-birth-of-a-child-anushka-sharma/ https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-return-to-cinema-shooting-with-the-birth-of-a-child-anushka-sharma/#respond Fri, 04 Dec 2020 08:45:56 +0000 https://tamilnewslive.com/?p=5493 பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது என்ற செய்தியை ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் இருவரும் உறுதி செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் அனுஷ்கா சர்மா. அனுஷ்கா சர்மா தற்போது விளம்பர படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். செட்டில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன் என்றும். […]

The post குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன் – அனுஷ்கா சர்மா! appeared first on Tamil News Live.

]]>

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது என்ற செய்தியை ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் இருவரும் உறுதி செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் அனுஷ்கா சர்மா.

Anushka Sharma Post Delivery Photos

அனுஷ்கா சர்மா தற்போது விளம்பர படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். செட்டில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன் என்றும். அடுத்த சில நாட்களுக்கு இந்த பணி தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும் இப்போதாவது களத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி தான்.

அசாதாரணமான சூழலில் ஷூட் செய்வதால் செட்டில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு பயோ பபுளில் இருக்கிறோம். சில நாட்களுக்கு ஒருமுறை என பரிசோதனைகள் தொடர்கிறது.

குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன். குழந்தை, குடும்பம் மற்றும் எந்த தொழிலை பேலன்ஸ் செய்வதற்கான யோசனைகளை வைத்துள்ளேன். அதன்படி அதை செய்வேன். நடிப்பதில் எனக்கு திருப்தி கிடைப்பதால் வாழ்நாள் முழுக்க அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.

The post குழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன் – அனுஷ்கா சர்மா! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/i-will-return-to-cinema-shooting-with-the-birth-of-a-child-anushka-sharma/feed/ 0 5493
பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தார்! https://tamilnewslive.com/india/a-boy-got-stuck-in-an-elevator-and-died-due-to-the-negligence-of-his-parents/ https://tamilnewslive.com/india/a-boy-got-stuck-in-an-elevator-and-died-due-to-the-negligence-of-his-parents/#respond Fri, 04 Dec 2020 08:41:07 +0000 https://tamilnewslive.com/?p=5505 பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் இரு கேட்டுகளுக்கு நடுவே சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராவி சாகு நகரைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ். தையல்காரராக உள்ளார். இவருக்கு 2 மகள்களும், ஹொஜபா சாயிக்(05) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 4வது தளத்தில் இருந்த தனது வீட்டிலிருந்து தரை தளத்திற்கு செல்ல 3 குழந்தைகளும் அங்கு இருந்த கிரில் லிஃப்டை நேற்று மதியம் 12.45 மணியளவில் பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிஃப்டிற்குள் முதலில் சென்ற சிறுமி சாயிக் வருவதற்குள் […]

The post பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தார்! appeared first on Tamil News Live.

]]>

பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் இரு கேட்டுகளுக்கு நடுவே சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராவி சாகு நகரைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ். தையல்காரராக உள்ளார். இவருக்கு 2 மகள்களும், ஹொஜபா சாயிக்(05) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 4வது தளத்தில் இருந்த தனது வீட்டிலிருந்து தரை தளத்திற்கு செல்ல 3 குழந்தைகளும் அங்கு இருந்த கிரில் லிஃப்டை நேற்று மதியம் 12.45 மணியளவில் பயன்படுத்தியுள்ளனர்.

Small Kid Died in Lift Disoperation

அப்போது லிஃப்டிற்குள் முதலில் சென்ற சிறுமி சாயிக் வருவதற்குள் கதவை சாத்தியுள்ளார். சாயிக் லிஃப்டின் இரு கதவுகளுக்கு இடையே நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து லிஃப்டிற்கு வெளியே இருந்த சிறுமியும் கிரில் கதவை சாத்தியுள்ளார்.

இதையடுத்து லிஃப்ட் தரைதளத்திற்கு நகர்ந்தது. அப்போது இடையில் சிக்கிய சிறுவன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை சர்ஃபராஸ் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் கவனம் இல்லாமல் சிறுவர்கள் லிஃப்ட்டை இயக்கும் அளவிற்கு அலட்சியமாக இருந்ததால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோகும் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

The post பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தார்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/a-boy-got-stuck-in-an-elevator-and-died-due-to-the-negligence-of-his-parents/feed/ 0 5505
நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை! https://tamilnewslive.com/india/only-tea-in-earthenware-at-all-railway-stations-in-the-country/ https://tamilnewslive.com/india/only-tea-in-earthenware-at-all-railway-stations-in-the-country/#respond Fri, 04 Dec 2020 08:35:02 +0000 https://tamilnewslive.com/?p=5503 நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளிலேயே இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வடமேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாவிற்காக ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். […]

The post நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை! appeared first on Tamil News Live.

]]>

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளிலேயே இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Indian Railways Food

வடமேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாவிற்காக ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 400 ரயில் நிலையங்களில் தேநீர் மண்கோப்பைகளில் வழங்கப்படுகிறது, எதிர்காலத்தில், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை செய்யப்படும் என்பது எங்கள் திட்டமாகும் என்று அவர் கூறினார்.

Foods Price List in Railways Booking Order

மண்கோப்பைகள் சுற்றுச்சூழலைக் காக்கின்றன, மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலமாக வேலைவாய்ப்பையும் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

The post நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/only-tea-in-earthenware-at-all-railway-stations-in-the-country/feed/ 0 5503
சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தவிர்த்துடுங்க – ஆய்வு முடிவுகள்! https://tamilnewslive.com/health-tips/diabetics-are-advised-to-avoid-these-fruits/ https://tamilnewslive.com/health-tips/diabetics-are-advised-to-avoid-these-fruits/#respond Thu, 03 Dec 2020 11:34:44 +0000 https://tamilnewslive.com/?p=5532 நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய குறிப்புகள்.. ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தவுடன் அவர்கள் தன் வாழ்வில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது உணவு முறையில் மற்றம் தேவைப்படும். அவர்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்து உள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருத்தல் அவசியம். இவராக அவர்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் தேவை. புதிதாக மேற்கொள்ள பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நான்கு பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு வகை 2 […]

The post சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தவிர்த்துடுங்க – ஆய்வு முடிவுகள்! appeared first on Tamil News Live.

]]>

நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய குறிப்புகள்.. ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தவுடன் அவர்கள் தன் வாழ்வில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது உணவு முறையில் மற்றம் தேவைப்படும். அவர்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்து உள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருத்தல் அவசியம். இவராக அவர்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் தேவை.

Fruits to Avoid for Sugar Patients

புதிதாக மேற்கொள்ள பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நான்கு பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு வகை 2 (Diabetes Type 2) நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைத்து வகையான காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்று வரும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் பழங்கள் இனிப்பு வகையாக இருப்பதால் எந்த பழ வகையை சாப்பிடுவது என்று அனைவரும் குழம்புவதுண்டு.

சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது நன்று எனவும் சில பழங்கள் உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.

சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடாது பழங்கள் :

ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். எடை குறைப்பு நிபுணர்கள் கூற்றுப்படி டைப் 2 (Diabetes Type 2) தவிர்க்க வேண்டிய பழங்கள்..

    • மாம்பழம்
    • அன்னாசி
    • முலாம்பழம்
    • வாழைப்பழம்

ஆகியன ஏனெனில் இவ்வகை பழங்களில் சர்க்கரை அதிகளவு இருப்பதால் இப்பழங்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பழங்கள்

Best Fruits to Eat for Diabetes Patients

கொய்யா, பேரிக்காய், கருப்பு திராட்சை, செர்ரி, பீச், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிச்சம்பழம், கிவி ஆகியன சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பழங்கள்.

The post சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தவிர்த்துடுங்க – ஆய்வு முடிவுகள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health-tips/diabetics-are-advised-to-avoid-these-fruits/feed/ 0 5532
ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் -ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் https://tamilnewslive.com/sports/india-vs-australia-match-victory-celebration/ https://tamilnewslive.com/sports/india-vs-australia-match-victory-celebration/#respond Thu, 03 Dec 2020 11:17:51 +0000 https://tamilnewslive.com/?p=5534 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்ப இருக்கிறார் விராட் கோலி. இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடையும் என முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், முதல் போட்டி முடிந்தவுடன் […]

The post ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் -ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் appeared first on Tamil News Live.

]]>

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்ப இருக்கிறார் விராட் கோலி. இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடையும் என முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், முதல் போட்டி முடிந்தவுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். அவர் இல்லாதது பேட்டிங் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சூழ்நிலையில் இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் மாறும் என்று கூறி இருந்தார்.

இப்போது இதே வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் கருத்து பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே எனது கருத்து. கேப்டன் பொறுப்பானாலும், பேட்டிங் ஆனாலும், கோலி இல்லாவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்.

விராட் கோலி இடத்தை எந்த பேட்ஸ்மேன் நிரப்ப போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணியினர் கொண்டாடலாம். அப்படி பெறும் வெற்றி, உண்மையில் நம்பமுடியாத வெற்றி.

கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர், நல்ல பேட்ஸ்மேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருக்கு இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அவரால் நிச்சயம் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் விளையாட முடியும். ஆனால், கோலி இடத்தை அவரால் மட்டுமல்ல, யாராலும் நிரப்ப முடியாது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றவர், ரஹானே பற்றியும் பேசினார்.

ரஹானே சிறந்த வீரர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். கேப்டன்ஷிப் என்று வரும்போது ரஹானே சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இந்திய அணிக்கு இருக்கக்கூடிய ஒரு சாதகமான விஷயம் என்றால், அது ரஹானேவின் கேப்டன்ஷிப்தான். அதைக் காண எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ரஹானே தன்னை நிரூபித்தால் வரலாறு படைக்க முடியும். என்னை பொறுத்தவரை இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை அணுக வேண்டும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் திறமை தங்களுக்கு இருக்கிறது என்று அவர்கள் நம்ப வேண்டும்.

The post ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் -ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/sports/india-vs-australia-match-victory-celebration/feed/ 0 5534
விவசாயிகள் போராட்டத்தால் அதிர்ந்து போகும் டெல்லி – எச்சரிக்கை! https://tamilnewslive.com/india/farmers-have-warned-that-our-struggle-will-intensify/ https://tamilnewslive.com/india/farmers-have-warned-that-our-struggle-will-intensify/#respond Thu, 03 Dec 2020 11:05:58 +0000 https://tamilnewslive.com/?p=5547 டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம், மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை அதிரவைத்துக்கொண்டுள்ளனர் விவசாயிகள். கொட்டும் பனிஎன்றும் பாராமல் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். முக்கிய இடங்களான புராரி, காஜிபூர், திக்ரி உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் […]

The post விவசாயிகள் போராட்டத்தால் அதிர்ந்து போகும் டெல்லி – எச்சரிக்கை! appeared first on Tamil News Live.

]]>

டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம், மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை அதிரவைத்துக்கொண்டுள்ளனர் விவசாயிகள். கொட்டும் பனிஎன்றும் பாராமல் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Delhi Farmers Protest Issue

முக்கிய இடங்களான புராரி, காஜிபூர், திக்ரி உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்தால் உத்தரபிரேதசம், பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர் வரும் தடைகள் அனைத்தையும் முறியடித்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். எங்கள் போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதை தொடர்ந்து டெல்லி எல்லை பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கிடையே இன்று மாலை 3 மணியளவில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் பெரும்பாலான விவசாய சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம், திருத்தம் மட்டுமே செய்வோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒருவேளை இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா அல்லது விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவார்களா என்பது இன்று மாலையே தெரியவரும்.

The post விவசாயிகள் போராட்டத்தால் அதிர்ந்து போகும் டெல்லி – எச்சரிக்கை! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/india/farmers-have-warned-that-our-struggle-will-intensify/feed/ 0 5547
விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது! https://tamilnewslive.com/tamil-cinema-news/a-photo-related-to-the-shooting-of-the-movie-laabam-starring-vijay-sethupathi-has-been-released-on-twitter/ https://tamilnewslive.com/tamil-cinema-news/a-photo-related-to-the-shooting-of-the-movie-laabam-starring-vijay-sethupathi-has-been-released-on-twitter/#respond Thu, 03 Dec 2020 11:04:03 +0000 https://tamilnewslive.com/?p=5559 இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிவரும் திரைப்படம் லாபம். இப்படத்தில் தனது பகுதிகளை நடித்துக்கொடுத்து நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை படத்தில் ஜனநாதனுடன் முதன் முதலாக இணைந்தார் விஜய் சேதுபதி. அதனால், இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றனர் . மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் தனது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை தற்போது லாபம் என தொடர்ச்சியாக இடதுசாரி பார்வையினை […]

The post விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது! appeared first on Tamil News Live.

]]>

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிவரும் திரைப்படம் லாபம். இப்படத்தில் தனது பகுதிகளை நடித்துக்கொடுத்து நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை படத்தில் ஜனநாதனுடன் முதன் முதலாக இணைந்தார் விஜய் சேதுபதி. அதனால், இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றனர் . மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் தனது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை தற்போது லாபம் என தொடர்ச்சியாக இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசி வருகிறார்.

Vijay Sethupathi Shruthi Haasan Movie

லாபம் படத்திலும் விவசாய கருத்துகளை வலிமையுடன் முன்வைத்துள்ளார். டிரைலர் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. இமான் இசையமைக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

Vijay Sethupathi Shruthi Haasan Movie

சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிருஷ்ணகிரியில் தங்கி விஜய் சேதுபதி பட காட்சியில் நடித்து வந்தார். ஏராளமான பொதுமக்கள் அதை காண்பதற்கும் நடிகர்களை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். விஜய் சேதுபதியும் நாள்தோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதியினை முழுமையாக முடித்துக்கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. லாபம் படத்தின் சூட்டிங் தொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. அந்தப் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

The post விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/a-photo-related-to-the-shooting-of-the-movie-laabam-starring-vijay-sethupathi-has-been-released-on-twitter/feed/ 0 5559
சிங்கப்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது! https://tamilnewslive.com/news/born-in-singapore-when-the-baby-is-born-for-corona-disease-resistance-has-been-found-to-be-present/ https://tamilnewslive.com/news/born-in-singapore-when-the-baby-is-born-for-corona-disease-resistance-has-been-found-to-be-present/#respond Thu, 03 Dec 2020 06:27:13 +0000 https://tamilnewslive.com/?p=5554 கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்து மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரு குழந்தை. சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான பெண் செலின் ஜான். இவர் கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவந்துள்ளார். நாடு திரும்பிய இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது, செலின் கருவுற்று 10 வாரங்கள் ஆகி இருந்தார். இதில் இருந்து அவர் குணமாகிய நிலையில், சில நாள்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை […]

The post சிங்கப்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது! appeared first on Tamil News Live.

]]>

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்து மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரு குழந்தை. சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான பெண் செலின் ஜான். இவர் கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவந்துள்ளார். நாடு திரும்பிய இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது, செலின் கருவுற்று 10 வாரங்கள் ஆகி இருந்தார். இதில் இருந்து அவர் குணமாகிய நிலையில், சில நாள்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

New born baby with inbuilt corona resistance

அந்தக் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போகினர். குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது இதை அறிந்த மருத்துவர்கள் மிகவும் ஆச்சர்யம் மிகுந்த அதிர்ச்சியில் திளைத்தனர்.

செலினிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்கும் சென்றிருக்கும் என்று மருத்துவர்கள் யூகிக்கின்றனர். இதுவரை, கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பதற்கு சரியான விடை கிடைக்காமல் இருந்து வந்தது.

அதேபோல், கருப்பையைச் சுற்றியுள்ள திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக கடந்த அக்டோபரில் சீனா தெரிவித்திருந்தது.

இதற்கு எடுத்துக்காட்டாக செலினின் குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கொரோனா தொற்று தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

New Born Baby with Natural Corona Immunity

இதற்கிடையே, குழந்தைக்கு, அல்ட்ரின் எனப் பெயர் சூட்டியுள்ள செலின் தனது சந்தோஷத்தை பிபிசிக்கு BBC பகிர்ந்துள்ளார். அதில், மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்று வந்தேன். மீண்டும் நாடு திரும்பியபோதுதான் கொரோனா பாதிப்பு எனக்கு கண்டறியப்பட்டது. என்னுடன் ஐரோப்பா வந்த என் கணவருக்கும், தந்தைக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் எனக்கு என் தாய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனக்கு பாதிப்பு உறுதி ஆனபோது நான் 10 வார கருவுற்றிருந்தேன்.

கருவில் உள்ள குழந்தைக்குக் கொரோனா வைரஸ் பரவாது என்பதை முன்பே நான் படித்திருந்தேன். அதனால் நான் பயம் கொள்ளவில்லை. எனக்கு முன்பாக சிங்கப்பூரில் நடாஷா, பீலே என்ற தம்பதியினர் இதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டபோது நடாஷா கர்ப்பம் தரித்திருந்தார். அதுவும், கருவுற்ற 36வது வாரத்தில் நடாஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஒருவேளை சிங்கப்பூரில் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுடன் சிங்கப்பூரில் பிறந்த முதல் குழந்தை அதுவாக இருக்கலாம்.

இதனால் என் மனதில் பயம் ஏற்படவில்லை. நான் தைரியத்துடன் குழந்தைப் பேறுக்கு சென்றேன். ஏற்கெனவே எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த முறை எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடன் பிறந்த மூன்று சகோதர்கள் உடன் நானும் ஆணுக்கு நிகராய் வளர்ந்ததால் எனக்கு இந்த ஆசை வந்தது.

கொரோனா பாதிப்பு இருந்தாலும் நான் தாய்மை அடைந்த காலமும், குழந்தைப் பிறப்பும் சுமூகமாகவே இருந்தன. எனது ஆசை மகனை நல்லவிதமாக பெற்றெடுத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று நெகிழ்கிறார் செலின்.
செலினின் பிரசவமும் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தையும் மருத்துவத்துறையில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறியுள்ள மருத்துவர்கள், இது தொடர்பான ஆய்வுகளில் இறங்க உள்ளனர்.

The post சிங்கப்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/news/born-in-singapore-when-the-baby-is-born-for-corona-disease-resistance-has-been-found-to-be-present/feed/ 0 5554
கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு ! https://tamilnewslive.com/tamil-cinema-news/valimai-movie-is-definitely-coming-to-the-screen-in-the-summer-the-crew/ https://tamilnewslive.com/tamil-cinema-news/valimai-movie-is-definitely-coming-to-the-screen-in-the-summer-the-crew/#respond Thu, 03 Dec 2020 06:05:49 +0000 https://tamilnewslive.com/?p=5568 ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.இப்படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜனவரிக்குள் படக்குழு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வை-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. வலிமை திரைப்படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி என்ற […]

The post கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு ! appeared first on Tamil News Live.

]]>

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.இப்படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜனவரிக்குள் படக்குழு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வை-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

Ajith Valimai Movie Release

வலிமை திரைப்படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் அஜித்துக்கு படப்பிடிப்பில் சிறய விபத்தும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம்தான் கடைசியாக வெளியானது. வலிமை இந்த வருடம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் 6 மாதங்கள் சினிமா ஷூட்டிங்கிற்கு தடைவிதிக்கப்பட்டதால் அனைத்துப் படங்களும் தள்ளிப்போயின. இந்த வருடம் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்த வருடம் கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனால், வரும் 2021 ஜனவரிக்குள் படத்தை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளார்.

The post கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு ! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/tamil-cinema-news/valimai-movie-is-definitely-coming-to-the-screen-in-the-summer-the-crew/feed/ 0 5568