நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய குறிப்புகள்.. ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தவுடன் அவர்கள் தன் வாழ்வில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது உணவு முறையில் மற்றம் தேவைப்படும். அவர்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்து உள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருத்தல் அவசியம். இவராக அவர்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் தேவை.
புதிதாக மேற்கொள்ள பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நான்கு பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நீரிழிவு வகை 2 (Diabetes Type 2) நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைத்து வகையான காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்று வரும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் பழங்கள் இனிப்பு வகையாக இருப்பதால் எந்த பழ வகையை சாப்பிடுவது என்று அனைவரும் குழம்புவதுண்டு.
சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது நன்று எனவும் சில பழங்கள் உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடாது பழங்கள் :
ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். எடை குறைப்பு நிபுணர்கள் கூற்றுப்படி டைப் 2 (Diabetes Type 2) தவிர்க்க வேண்டிய பழங்கள்..
- மாம்பழம்
- அன்னாசி
- முலாம்பழம்
- வாழைப்பழம்
ஆகியன ஏனெனில் இவ்வகை பழங்களில் சர்க்கரை அதிகளவு இருப்பதால் இப்பழங்களை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பழங்கள்
கொய்யா, பேரிக்காய், கருப்பு திராட்சை, செர்ரி, பீச், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிச்சம்பழம், கிவி ஆகியன சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பழங்கள்.