விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது!

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிவரும் திரைப்படம் லாபம். இப்படத்தில் தனது பகுதிகளை நடித்துக்கொடுத்து நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை படத்தில் ஜனநாதனுடன் முதன் முதலாக இணைந்தார் விஜய் சேதுபதி. அதனால், இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றனர் . மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் தனது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை தற்போது லாபம் என தொடர்ச்சியாக இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசி வருகிறார்.

Vijay Sethupathi Shruthi Haasan Movie

லாபம் படத்திலும் விவசாய கருத்துகளை வலிமையுடன் முன்வைத்துள்ளார். டிரைலர் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. இமான் இசையமைக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

Vijay Sethupathi Shruthi Haasan Movie

சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிருஷ்ணகிரியில் தங்கி விஜய் சேதுபதி பட காட்சியில் நடித்து வந்தார். ஏராளமான பொதுமக்கள் அதை காண்பதற்கும் நடிகர்களை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். விஜய் சேதுபதியும் நாள்தோறும் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதியினை முழுமையாக முடித்துக்கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. லாபம் படத்தின் சூட்டிங் தொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. அந்தப் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

scroll to top