Categories: India

21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்பு!

கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இடதுசாரி கூட்டணியில் ஈடுபட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.
திருவனந்தபுரதில் இன்று  பிற்பகல் 3.30 மணிக்கு முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பதவி ஏற்று கொள்கிறார். அதை தொடர்ந்து மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்.

1.பினராயி விஜயன் – முதலமைச்சர், உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது நிர்வாகம்
2.எம்.வி.கோவிந்தன் – உள்ளூர் சுய அரசுத் துறை, கலால்
3.கே ராதாகிருஷ்ணன் – தேவசோம், எஸ்சி / எஸ்டி வளர்ச்சி
4.சஜி செரியன் – மீன்வளம், கலாச்சாரம்
5.கே.என்.பாலகோபால் – நிதியமைச்சர்
6.பி ராஜீவ் – கைத்தொழில் மற்றும் வணிகத் துறை
7.வி.என் வாசவன்-கூட்டுறவுத் துறை மற்றும் பதிவு
8.வி சிவன்குட்டி – கல்வி அமைச்சர்
9.முஹம்மது ரியாஸ் – பி.டபிள்யூ.டி, சுற்றுலா, இளைஞர் நலன்
10.டாக்டர் ஆர் பிந்து – உயர்கல்வி அமைச்சர்
11.வீணா ஜார்ஜ் – சுகாதார அமைச்சர்
12.அப்துல் ரஹ்மான் – சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் என்.ஆர்.கே.
13.ரோஷி அகஸ்டின் – நீர்வளத் துறை
14.ஜே சின்ச்சுரானி – சட்ட அளவியல், பால் மேம்பாடு மற்றும் கால்நடை பராமரிப்பு
15.ஆண்டனி ராஜு – போக்குவரத்து
16.கே கிருஷ்ணன்குட்டி – மின்சாரம்
17.ஏ.கே.சசீந்திரன்- வனத்துறை
18.பி பிரசாத்- விவசாயம்
19.கே ராஜன் – வருவாய் துறை
20.ஜி ஆர் அனில்- சிவில் சப்ளைஸ்
21.அகமது தேவர்கோவில் – துறைமுகங்கள்

Nagaraj

Recent Posts

ரீல் ஜெவின் அடுத்த இன்னிங்ஸ் பிரமாண்ட படத்தில்??

ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாக உள்ள புதிய படம் "சீதா". இந்த படம் ராமாயண கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படத்தை…

48 mins ago

பீஸ்ட் படத்தில் அவரது பணிகளை நடித்து முடித்துள்ளார் பூஜா!!

விஜய் நடிப்பில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் தான் "பீஸ்ட்". இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்…

19 hours ago

அக்கட தேசத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் தனுஷ்!!

தமிழில் சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே பெரும் வெற்றி பெறுகிறது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல…

21 hours ago

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஓவியா..

நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகனார். அந்த படம் பெரும் வெற்றி பெற்று ஓவியாவுக்கு நல்ல அறிமுகம்…

1 day ago

எனது வலிமை என்று பதிவிட்ட யாஷிகா??

யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. மாடலிங் துறையில் இருந்து திரைக்கு வந்தவர். தமிழில் ஒரு சில படங்களில்…

1 day ago

லால் சேட்டன் செய்த காரியத்தால் கோவில் நிறுவகத்தின் அதிரடி முடிவு??

சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் குருவாயூர் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா…

1 day ago