Health – Tamil News Live https://tamilnewslive.com Global Tamil News Sun, 01 Aug 2021 12:30:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 https://i1.wp.com/tamilnewslive.com/wp-content/uploads/2017/11/cropped-favicon.png?fit=32%2C32&ssl=1 Health – Tamil News Live https://tamilnewslive.com 32 32 138894946 மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/ https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/#respond Sun, 01 Aug 2021 12:30:11 +0000 https://tamilnewslive.com/?p=16490 *குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. * சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது. […]

The post மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! appeared first on Tamil News Live.

]]>
*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது.
*ஏற்கெனவே புற்றுநோய் பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் வருடம் ஒருமுறை மார்பகத்தில் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* சிறுவயதில் மருத்துவ காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது.
* 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, ‘ஈஸ்ட்ரோஜென்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
*‘மெனோபாஸ்’, சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
*30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
* வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
*இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, ‘மெலோடினின்’ ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
*மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம்.
* கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியவர்கள்,பாலூட்டாத தாய்மார்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/lets-find-out-about-the-causes-of-breast-cancer/feed/ 0 16490
தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/ https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/#respond Sun, 01 Aug 2021 12:09:54 +0000 https://tamilnewslive.com/?p=16485 அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு – sweet புளிப்பு  – sour உவர்ப்பு – salt கார்ப்பு – pungent கசப்பு – bitter துவர்ப்பு- astringent ஒவ்வொரு சுவையும் அது தரும் பயன்களும் : 1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும் 2 .  புளிப்பு – தேவையான கொழுப்பை தரும் 3 .  உவர்ப்பு  –   உமிழ் நீரை சுரக்க செய்யும் […]

The post தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும்.

அறுசுவைகள்

இனிப்பு – sweet
புளிப்பு  – sour
உவர்ப்பு – salt
கார்ப்பு – pungent
கசப்பு – bitter
துவர்ப்பு- astringent

ஒவ்வொரு சுவையும் அது தரும் பயன்களும் :

1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும்
2 .  புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்
3 .  உவர்ப்பு  –   உமிழ் நீரை சுரக்க செய்யும்
4 .  கார்ப்பு  –  எலும்புகளை வலுவாக்கும்
5 .  கசப்பு  –  நரம்புகளை வலுபடுத்தும்
6 .  துவர்ப்பு  –  இரத்தம் சுத்தம் செய்யும்

உணவுப் பொருட்களும் அதன் சுவையும்:

*இனிப்பு  உணவுகள் -கரும்பு , காரட் , பீட்ரூட் , அரிசி , வெல்லம் , கோதுமை பரங்கிகாய்
*புளிப்பு உணவுகள் -எலுமிச்சை , தக்காளி ,புளி, மாங்காய் , தயிர் , மோர் , நார்த்தங்காய்
*உவர்ப்பு  உணவுகள் – வாழைத்தண்டு , பூசணி , முள்ளங்கி , சுரக்காய் , பீக்கங்காய்
*கார்ப்பு  உணவுகள் -மிளகு, கடுகு , மஞ்சள் , மிளகாய் , வெங்காயம் , பூண்டு
*கசப்பு   உணவுகள் -பாகற்காய் , சுண்டக்காய் , கத்திரிக்காய், வெந்தியம் , எள் , வேப்பம்பூ
*துவர்ப்பு   உணவுகள் -மாதுளை , வாழைக்காய் , மாவடு , நெல்லிக்காய் , அத்திக்காய் , அவரை
உணவினை உண்ணும் நேரமும் அதன் அளவும் அதனை சமைக்கும் முறை மற்றும் பரிமாறுவதும் கூட உணவின் தன்மையை நிர்ணயிக்கும்.
எந்த வேளையில் உணவை உண்ணும் போது உணவின் அளவினைப்பற்றி தெளிவு வேண்டும்.
உணவு   – அரை வயிறு
நீர்  –         கால் வயிறு
காலி  –     கால் வயிறு
அதை போல ஒரு நாளைக்கு இரு வேலைதான் உண்ண வேண்டும்  என்றே வலியுறுத்துகின்றனர். ஆனால் இன்றைய பரப்பான உலகில் இது சாத்தியமில்லை.

உணவை உண்ணும் போது செய்ய வேண்டியவை :

பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.வயிறுமுட்ட உண்பதோ , உணவு உண்டபின் உறங்குவதோ கூடாது. தண்ணீரை மென்று தின்னுவதுப்போல ,அதாவது மெதுவாக ரசித்து ருசித்து  துளி துளியாக பருக வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்பார்கள் அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று உமிழ்நீரோடு பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து  விழுங்க வேண்டும்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/eat-six-flavors-of-food-daily/feed/ 0 16485
கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/ https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/#respond Sun, 01 Aug 2021 11:31:30 +0000 https://tamilnewslive.com/?p=16481 கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், இதன்மூலம் நீர்க்கட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். இலவங்கப்பட்டை : இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  […]

The post கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? appeared first on Tamil News Live.

]]>
கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், இதன்மூலம் நீர்க்கட்டியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. சர்க்கரையின் அளவை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கும் என்பதால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு  காலையில் தேனீர் அல்லது மஞ்சள் டீயில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம்.

நீர்க்கட்டிக்கு  தீர்வாக வெந்தயம் :

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தில்ல் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் போது நீர்க்கட்டி வளர ஏதுவாகிறது. வெந்தயமும் , வெந்தயக் கீரையும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். ஊறவைத்த நீரையும் பருக வேண்டும்.

துளசி இலைகள் :

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆண்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதால் இதனை கட்டுப்படுத்த துளசி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  மென்று சாப்பிடலாம். இது ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து :

நெல்லிக்காய் இரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு அல்லாமல் உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுப்படும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/is-there-a-link-between-the-uterine-cysts-and-insulin/feed/ 0 16481
அரிசி மாவு உங்கள் சருமத்தை சிவப்பாக்கும் தெரியுமா? https://tamilnewslive.com/health/did-you-know-rice-flour-helps-to-brightens-our-skin/ https://tamilnewslive.com/health/did-you-know-rice-flour-helps-to-brightens-our-skin/#respond Sun, 25 Jul 2021 07:11:33 +0000 https://tamilnewslive.com/?p=16396 நமது வீட்டில் உள்ள சாதாரண அரிசி மாவு சிறந்த ஃபேஸ் க்ளென்சர்.  அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனாக நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது.இதிலுள்ள வைட்டமின் பி சருமத்தை வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.இதனால் முகம் சுருக்கங்கள் நீங்கி […]

The post அரிசி மாவு உங்கள் சருமத்தை சிவப்பாக்கும் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
நமது வீட்டில் உள்ள சாதாரண அரிசி மாவு சிறந்த ஃபேஸ் க்ளென்சர்.  அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனாக நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது.இதிலுள்ள வைட்டமின் பி சருமத்தை வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.இதனால் முகம் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெறும். அரிசி மாவு கொண்டு செய்யும் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

* அரிசி மாவு உடன் பயத்தமாவு :

 அரிசி மாவு இரு பங்கு பயத்த மாவு  1 பங்கு உடன் மஞ்சள் சிறிது மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதை முகத்தில் புருவம், கண்ணிமைகள், உதடு ஆகிய இடங்களை விட்டு விட்டு கழுத்து வரை பூசி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் உடனடியாக உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள பொலிவை உணர முடியும்.

*அரிசி மாவுடன்  பால் :

அரிசி மாவுடன் காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும். ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்குங்கள். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள். 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள். பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும்.காய்ச்சாத பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது. அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குகிறது.

*அரிசி மாவும் முட்டை வெள்ளைக்கருவும் :

அரிசி மாவு மட்டும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் தளர்ந்து போயிருக்கும் தசைகளையும் இருக்கமாகச் செய்யும். இதனால் சருமத்தை வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையாக வைத்திருக்க முடியும். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் போதும், செக்க சிவந்த பொலிவான முகத்தை பெறலாம்.

*அரிசி மாவும் தயிரும் :

அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு பிளீச்சாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது. தயிர் சருமத்துக்கு சிறந்த பொலிவு தரும்.மேலும் மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post அரிசி மாவு உங்கள் சருமத்தை சிவப்பாக்கும் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/did-you-know-rice-flour-helps-to-brightens-our-skin/feed/ 0 16396
சுற்றுலா செல்கிறீர்களா? உங்கள் சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பீர்கள்? https://tamilnewslive.com/health/are-you-going-on-a-trip-how-do-you-control-your-sugar-levels/ https://tamilnewslive.com/health/are-you-going-on-a-trip-how-do-you-control-your-sugar-levels/#respond Sun, 25 Jul 2021 06:44:26 +0000 https://tamilnewslive.com/?p=16390 கோடை விடுமுறை வந்தாலே வெயிலையும் தாண்டி கொண்டாட்டமே! விருந்து, உறவினர்கள் , திருவிழாக்கள் , திருமணம் போன்ற வைபவங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் என்று முப்பது நாட்கள் விடுமுறை செல்வதே தெரியாது. இங்கு தான் சர்க்கரை நோயாளிகள் தவித்து விடுவார்கள். உணவுக்கட்டுப்பாடு , உடற்பயிற்சி என ஒழுங்கான முறையில் நடந்து வந்த பழக்க வழக்கங்கள் அப்படியே மாறி விடும். திரும்ப அதனை நடைமுறைப்படுத்த பெரும்பாடு படவேண்டும்.கொண்டாட்டங்களுடன் நமது உடல் நலத்தையும் எப்படி பார்த்துக்கொள்வது என்று பார்ப்போம். * நிறைய […]

The post சுற்றுலா செல்கிறீர்களா? உங்கள் சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பீர்கள்? appeared first on Tamil News Live.

]]>
கோடை விடுமுறை வந்தாலே வெயிலையும் தாண்டி கொண்டாட்டமே! விருந்து, உறவினர்கள் , திருவிழாக்கள் , திருமணம் போன்ற வைபவங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் என்று முப்பது நாட்கள் விடுமுறை செல்வதே தெரியாது. இங்கு தான் சர்க்கரை நோயாளிகள் தவித்து விடுவார்கள். உணவுக்கட்டுப்பாடு , உடற்பயிற்சி என ஒழுங்கான முறையில் நடந்து வந்த பழக்க வழக்கங்கள் அப்படியே மாறி விடும். திரும்ப அதனை நடைமுறைப்படுத்த பெரும்பாடு படவேண்டும்.கொண்டாட்டங்களுடன் நமது உடல் நலத்தையும் எப்படி பார்த்துக்கொள்வது என்று பார்ப்போம்.

* நிறைய தண்ணீர் குடியுங்கள்:

எளிமையான ஒரு விஷயம் தண்ணீர் குடிப்பது தான். எங்கும் கிடைக்கும் ஒரு பொருள் தண்ணீர் . கோடையின் வெப்பத்தை தணிக்க மட்டும் அல்ல , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இரத்தத்தில் கலந்த சர்க்கரையின் அளவு தண்ணீர் நிறைய குடிக்கும் போது இரத்த ஓட்டம் மிகும் போது உடலெங்கும் உள்ள செல்களுக்கு உணவாக எடுத்து செல்கிறது.

*நடைப்பயிற்சி :

காலை நேர மற்றும் மாலை நேரம் தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. ஊர்சுற்றி முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்ததும் அங்குள்ள வராந்தாவில் நடக்கலாம். குறிப்பாக உணவிற்கு பிறகு நடக்க வேண்டும். இயன்ற வரை லிஃப்ட் உபயோகத்தை தவிர்த்து மாடிப்படிகளை பயன்படுத்தலாம்.

*பயணங்களில் உணவுகள் :

உறவினர் வீடுகளில் சென்று நம் விருப்பப்படி உணவு உண்பது கடினம். நெருங்கிய உறவுகள் விதிவிலக்கு.ஹோட்டல் என்றால் அரிசி உணவுகளைக்குறைத்து ஆம்லெட் , சிக்கன் , பன்னீர் போல எளிதாக எல்லா ஹோட்டல்களில் கூட கிடைக்கும் இவற்றை நிறைய உண்ணலாம். வெள்ளரிக்காய் வாங்கி ரூமில் வைத்துக்கொண்டால் இரவு உணவுக்கு பின் காலை எழுந்தவுடன் மற்றும் பயணங்களில் வெள்ளரிக்காயை உண்பது மிகச்சிறந்த வழிமுறை. வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். இப்போது தான் நிறைய கடைகள் , ஹோட்டல்களில் ஸ்மூத்தி கிடைக்கிறது. வெஜிடபிள் ஸ்மூத்தி ஏதாவது ஒன்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
 

*நாவல் கொட்டை சூரணம் :

நாவல் கொட்டை சூரணம் அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் இதனை ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் சென்ற நாட்களில் காலை உணவுக்கு பின் , இரவு உணவிற்கு பிறகு என்று நீரில் கலந்து குடிக்கலாம். மாத்திரைகளை எடுத்து செல்வது போலத்தான். நமது திட்டமிடல் தான் எந்தவொரு பயணமோ நிகழ்ச்சியோ அதனை சிறப்பாக்கும்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சுற்றுலா செல்கிறீர்களா? உங்கள் சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பீர்கள்? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/are-you-going-on-a-trip-how-do-you-control-your-sugar-levels/feed/ 0 16390
காபியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் என்னாகும்? https://tamilnewslive.com/health/what-will-happen-when-coconut-oil-mixed-in-coffee/ https://tamilnewslive.com/health/what-will-happen-when-coconut-oil-mixed-in-coffee/#respond Sat, 24 Jul 2021 10:39:34 +0000 https://tamilnewslive.com/?p=16381 காலையில் எழுந்ததும் காபி , டீ , நீராகாரம் என ஏதோவொரு உற்சாக பானம் குடித்துத் தான் அன்றைய தினத்தை ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர் பழக்கம். காபி குடிக்கும் பழக்கத்தை ஆரோக்கியம் அல்லது ஆரோக்கியமற்றது என இருபெரும் கருத்துகளுடன் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளது. காபி எப்போது உடலுக்கு தீங்காகிறது என்றால் காபியுடன் பால் , க்ரீம் , சர்க்கரை சேர்த்து குடிக்கும் போது அதன் கலோரி மதிப்பு கூடுகிறது. காப்பியில் உள்ள காஃப்பின் எனும் வேதிப்பொருளின் நல்ல […]

The post காபியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் என்னாகும்? appeared first on Tamil News Live.

]]>
காலையில் எழுந்ததும் காபி , டீ , நீராகாரம் என ஏதோவொரு உற்சாக பானம் குடித்துத் தான் அன்றைய தினத்தை ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர் பழக்கம். காபி குடிக்கும் பழக்கத்தை ஆரோக்கியம் அல்லது ஆரோக்கியமற்றது என இருபெரும் கருத்துகளுடன் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளது. காபி எப்போது உடலுக்கு தீங்காகிறது என்றால் காபியுடன் பால் , க்ரீம் , சர்க்கரை சேர்த்து குடிக்கும் போது அதன் கலோரி மதிப்பு கூடுகிறது. காப்பியில் உள்ள காஃப்பின் எனும் வேதிப்பொருளின் நல்ல பலனை பெற இயலுவதில்லை. காப்பியை எப்படி ஆரோக்கியமான முறையில் குடிக்கலாம் என்று பார்ப்போம்.

காப்பி கொழுப்பை கரைக்குமா ?

காப்பியில் உள்ள காஃபின் மட்டும் அல்ல காப்பியானது கீட்டோசிஸை தூண்டும் அதாவது மெட்டபாலிசத்தில் உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பினை கரைத்து கீட்டோன்களாக மாற்றுகிறது. இதுவும் ஒரு வகையான க்ளுக்கோஸ் என்பதால் கார்போஹைட்ரேட் உணவு இல்லாமல் க்ளுக்கோஸ் தேவை நிறைவேறுகிறது அதேசமயம் உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கொழுப்பும் கரைகிறது. கீட்டோஜெனிக் டயட்டில் இதுவொரு முக்கிய ரெசிபி.

காப்பியில் தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் என்பது தாவரக்கொழுப்பு என்று நாமறிவோம்.இதனை ஏன் காப்பியில் கலந்து குடிக்கவேண்டும் என்பது நம்மில் பலருக்கு வரும் சந்தேகம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பின் வகையானது medium-chain triglycerides (MCTs). இதனை உட்கொள்ளும் போது கல்லீரலானது மிக வேகமாக இதனை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் ஆற்றலாக மாற்றும். காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் கீட்டோசிஸ் எனும் நிலையில் நீண்ட நேரம் இருக்க உதவும். விளைவு உடலில் உள்ள கொழுப்பு ஐ ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனால் கொழுப்பு கரைகிறது.

தேங்காய் எண்ணெய் அளவு :

கடும் காப்பியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதுமானது. ஏனெனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயின் கலோரி மதிப்பு என்பது 124 கலோரி . ஆகவே இரண்டு அல்லது அதற்கு மேல் தேங்காய் எண்ணெய் வேண்டாம். காப்பியின் கலோரி மதிப்பு அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிசுபிசுப்பு வாந்தி வரவழைக்கும். இதனையும் பருகி காலை உணவு வும் எடுத்துக் கொள்ளும் போது எடைக்குறைவோ , இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post காபியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் என்னாகும்? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/what-will-happen-when-coconut-oil-mixed-in-coffee/feed/ 0 16381
நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை வருமா? https://tamilnewslive.com/health/does-eating-peanuts-cause-allergies/ https://tamilnewslive.com/health/does-eating-peanuts-cause-allergies/#respond Sat, 24 Jul 2021 09:20:31 +0000 https://tamilnewslive.com/?p=16375 கடலை எண்ணெயில் தோசை சுட்டு நிலக்கடலையில் சட்னி அரைத்து அதனை உண்டு வளர்ந்தவர்கள் நாம். பார்க் , சினிமா , பீச் என்றாலே எல்லோருடைய கைகளிலும் அலங்கரிப்பது ஆவி பறக்கும் கடலை அல்லது மொறுமொறுப்பான வறுத்த கடலை தான்.இந்த கடலை நம்முடன் இணைந்த எண்ணெய் வித்து. ஆனால் இதனை உண்டால் ஒவ்வாமை என்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம் ஆனால் அமெரிக்கர்கள் கடலை என்று உச்சரித்தாலே பறந்தடித்து ஓடி விடுவார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானோர் நிலக்கடலை […]

The post நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை வருமா? appeared first on Tamil News Live.

]]>
கடலை எண்ணெயில் தோசை சுட்டு நிலக்கடலையில் சட்னி அரைத்து அதனை உண்டு வளர்ந்தவர்கள் நாம். பார்க் , சினிமா , பீச் என்றாலே எல்லோருடைய கைகளிலும் அலங்கரிப்பது ஆவி பறக்கும் கடலை அல்லது மொறுமொறுப்பான வறுத்த கடலை தான்.இந்த கடலை நம்முடன் இணைந்த எண்ணெய் வித்து. ஆனால் இதனை உண்டால் ஒவ்வாமை என்பது இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம் ஆனால் அமெரிக்கர்கள் கடலை என்று உச்சரித்தாலே பறந்தடித்து ஓடி விடுவார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானோர் நிலக்கடலை ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் தான்.

நிலக்கடலை ஒவ்வாமை

 நிலக்கடலையால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை சமயங்களில் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளது. உலகெங்கும் உணவுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமைகளில் பொதுவானது பால் சாப்பிடுவதால் ஏற்படுவது தான். முட்டை, சோயா மற்றும் பட்டாணி போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளால். தீவிரப் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை
 

ஒவ்வாமை விகிதம்:

நிலக்கடலை ஒவ்வாமை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. 100 பேரில் 2.5 என்ற அளவில் நிலக்கடலை ஒவ்வாமை காணப்படுவதாக அவர்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சமீபகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்றாலும், சமீபத்திய தவறான உணவு பழக்கத்தால் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிலக்கடலை ஒவ்வாமை இருப்பது தெரிந்தால் அதனை உங்கள் குடும்பத்தினரின் மருத்துவக்குறிப்பேடுகள் , குடும்ப மரூத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். வருமுன் காப்பது தான் சாலச்சிறந்தது.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post நிலக்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை வருமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/does-eating-peanuts-cause-allergies/feed/ 0 16375
சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது ஏன் தெரியுமா? https://tamilnewslive.com/health/do-you-know-why-the-waist-belt-should-not-be-loosened-after-eating/ https://tamilnewslive.com/health/do-you-know-why-the-waist-belt-should-not-be-loosened-after-eating/#respond Sat, 24 Jul 2021 07:12:56 +0000 https://tamilnewslive.com/?p=16369 சரிவிகித உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் உணவு உண்டபின் என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.   *சாப்பிட்டதும், ரத்த ஓட்டம்  நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும்.அப்போது தான் செரிமானம் எளிதாக நடக்கும்.  *உணவுக்கு பின்  வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க,  ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப்  பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க […]

The post சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது ஏன் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
சரிவிகித உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் உணவு உண்டபின் என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 
*சாப்பிட்டதும், ரத்த ஓட்டம்  நமது வயிற்றுப் பகுதிக்குத் தான் செல்ல வேண்டும்.அப்போது தான் செரிமானம் எளிதாக நடக்கும்.
 *உணவுக்கு பின்  வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க,  ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப்  பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். ஆகவே குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிட்டபிறகு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
* உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் வாயுவை உருவாக்கும். சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.ஆனால் நமது விருந்தோம்பலில் இலையில் அறுசுவை உணவுடன் பழங்களும் உண்டு.
*சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை உள்ள அமிலங்கள்  உணவில் உள்ள புரதங்களுடன்  சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.
 *உணவு உண்டபின் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் , புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
*உணவு உண்டபின் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட  உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், செரிமானக் கோளாறு ஏற்படும்.
* உணவு உண்ட உடனே படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. மேலும் வயிற்றில் கொழுப்பு சேர இதுவும் ஒரு காரணம்.
 
 
 
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது ஏன் தெரியுமா? appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/do-you-know-why-the-waist-belt-should-not-be-loosened-after-eating/feed/ 0 16369
தினமும் உணவில் இந்த பொருளை சேர்த்துங்கள்! சர்க்கரை நோய் ஓடிவிடும்! https://tamilnewslive.com/health/include-this-substance-in-your-daily-diet-diabetes-will-run-away/ https://tamilnewslive.com/health/include-this-substance-in-your-daily-diet-diabetes-will-run-away/#respond Thu, 22 Jul 2021 04:24:05 +0000 https://tamilnewslive.com/?p=16296 உலகிலேயே வைத்து சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். அதற்கு முழுக்காரணம் நமது உணவுப்பழக்கம் தான்.டைப் 2 டயபடிஸ் நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பது என்பது பெரும் பிரச்சினை.ஆனால் சமீபத்திய ஆய்வுகள் ஒரு சாதாரண பொருள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை தடுக்கிறது என்பது வரவேற்க்க வேண்டிய விஷயம்.விலை மலிவும் எளிதாக கிடைக்கும் வெங்காயம் என்பது தான் பெரு மகிழ்ச்சி தரும் விஷயம் ஏனெனில் எவருக்கும் பயன்படுத்த முடியும் என்பது தான். டைப் 2 […]

The post தினமும் உணவில் இந்த பொருளை சேர்த்துங்கள்! சர்க்கரை நோய் ஓடிவிடும்! appeared first on Tamil News Live.

]]>
உலகிலேயே வைத்து சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். அதற்கு முழுக்காரணம் நமது உணவுப்பழக்கம் தான்.டைப் 2 டயபடிஸ் நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பது என்பது பெரும் பிரச்சினை.ஆனால் சமீபத்திய ஆய்வுகள் ஒரு சாதாரண பொருள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை தடுக்கிறது என்பது வரவேற்க்க வேண்டிய விஷயம்.விலை மலிவும் எளிதாக கிடைக்கும் வெங்காயம் என்பது தான் பெரு மகிழ்ச்சி தரும் விஷயம் ஏனெனில் எவருக்கும் பயன்படுத்த முடியும் என்பது தான்.

டைப் 2 டயபடிஸ் :

டைப் 2 சர்க்கரை நோயால் உடல் அணுக்கள் இரத்தத்தில் இருந்து சரியான குளுக்கோஸ் அளவை எடுத்து கொள்ள முடியாது, அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகம் ஆகிவிடும்.இன்சுலின் எதிர்ப்பு என்றால் உடல் சரியான அளவில் குளுக்கோஸை உற்பத்தி செய்தாலும் உடல் அணுக்களால் சரியான அளவில் இன்சுலினை கிரகித்து கொள்ள முடியாது. காலப்போக்கில் கணையமும் இன்சுலின் உற்பத்தியை மட்டுபடுத்திவிடும். இந்த வகை சர்க்கரை நோயில் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைந்து உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்கிறது மேலும் எளிதாக ஈஸ்ட் தொற்று , சிறுநீரக தொற்று என தொற்று நோய்க்கு ஆளாகுகிறார்கள். இதற்கு தீர்வாக சமீபத்திய ஆய்வுகள் வெங்காயத்தை தெரிவிக்கின்றன.

வெங்காயம் சர்க்கரையின் அளவை குறைக்குமா?

வெங்காயத்தில் உள்ள quercetin and sulphur எனும் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். நூறு கிராம் பச்சை வெங்காயத்தை சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் fasting அதாவது உணவுக்கு முன் சர்க்கரையின் அளவு குறைந்து இருந்தது. Quercetin உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எளிதாக சர்க்கரை அளவை குறைக்க வெங்காயம் சேர்த்து காய்கறி சாலட் மூன்று வேளை உணவிலும் திட்டமிட்டு உண்டாலே போதும். கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகள் , நடைப்பயிற்சி உடன் உணவுக்கட்டுப்பாடு இருந்தால் போதும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post தினமும் உணவில் இந்த பொருளை சேர்த்துங்கள்! சர்க்கரை நோய் ஓடிவிடும்! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/include-this-substance-in-your-daily-diet-diabetes-will-run-away/feed/ 0 16296
இத்தன்னை விதமான பலன்களை தருகிறதா முருங்கை!!! https://tamilnewslive.com/health/does-drum-stick-will-give-so-much-of-benefits/ https://tamilnewslive.com/health/does-drum-stick-will-give-so-much-of-benefits/#respond Wed, 21 Jul 2021 17:22:08 +0000 https://tamilnewslive.com/?p=16290 முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ , கீரை,விதை, காய், பட்டை மற்றும் பிசின் என்று சகல பாகங்களும் உணவு மற்றும் மருத்துவத்திலும் பயன்படுகின்றது. அதன் பலன்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம். *முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். . *அனைத்து சத்துகளும் நிறைந்தது முருங்கைக்காய். உடலுக்கு நல்ல வலிமையைத்தரும் மேலும் உடற்சூடு தணிக்கும். * முருங்கைப்பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். * முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து […]

The post இத்தன்னை விதமான பலன்களை தருகிறதா முருங்கை!!! appeared first on Tamil News Live.

]]>
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ , கீரை,விதை, காய், பட்டை மற்றும் பிசின் என்று சகல பாகங்களும் உணவு மற்றும் மருத்துவத்திலும் பயன்படுகின்றது. அதன் பலன்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
*முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். .
*அனைத்து சத்துகளும் நிறைந்தது முருங்கைக்காய். உடலுக்கு நல்ல வலிமையைத்தரும் மேலும் உடற்சூடு தணிக்கும்.
* முருங்கைப்பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
* முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போடலாம்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.
*முருங்கை இலையை உருவி அதன் காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
*இதன் விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
* முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்து பருகினால் காசநோய் நீங்கும்
*முருங்கைக் காய் சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
*மொத்தத்தில் முருங்கை என்பது ஆண்களுக்கு தாது விருத்தியாகும். மேலும் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்
* முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் வலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
*இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின்  லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
*கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும் என்பதே இதன் சிறப்பு.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

The post இத்தன்னை விதமான பலன்களை தருகிறதா முருங்கை!!! appeared first on Tamil News Live.

]]>
https://tamilnewslive.com/health/does-drum-stick-will-give-so-much-of-benefits/feed/ 0 16290