அபுதாபியில் அதிசய பறவையாக தென்பட்ட – ஆள்காட்டி பறவைகள்

 

 

அபுதாபி- துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் அதிசயமாக காட்சியளித்த அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இந்த பறவைகள் நடமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆள்காட்டி பறவையானது கருப்பு நிறத்தில் மூக்குடைய கரையோரம் வாழும் ‘லேப்விங்ஸ்’ எனப்படும்  பறவையாகும். காட்டிக்கொடுக்கும் தன்மையை கொண்ட இந்த பறவை மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ பார்த்தால் ஒலி எழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்துவதால் இந்த பறவை ஆள்காட்டி குருவி என்று அழைக்கப்படும். இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்று போலவே காட்சியளிக்கும் ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் கொஞ்சம் நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியவாறும் காணப்படும். பெரிய பறவைகள் அதிகபட்சமாக 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். இந்த பறவையானது இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும், நீர் நிலை அருகேயும் அதிகாமாக காட்சியளிக்கின்றனர். இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசித்து வருகின்றனர்.

 

 

இந்த ஆண்டில் அதிகபட்சமாக 34 ஆள்காட்டி பறவைகள் மட்டுமே வருகை புரிந்துள்ளன. இந்த பறவை அமீரகத்தை பொறுத்தவரையில் மிக அரிதாக காணப்படும் பறவையாகும். ஆனால். இதற்கு முன் 12 பறவைகளே பதிவாகியுள்ளன.

 

தற்போது அபுதாபி- துபாய் எல்லை பகுதியான அல் மஹா பைவோர் விவசாய பண்ணையின்  அருகே ஆள்காட்டி பறவைகள் பறந்து உலா வந்து கொண்டு நடமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெயில் காலம் வந்தால் இந்த பறவை அங்கிருந்து போய் விடும் . இந்த அதிசயமான  பறவை இனத்தை பாதுகாக்க அபுதாபி முகம்மது பின் ஜாயித் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com