1.26 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.62 லட்சத்தைக் கடந்துள்ளது.

World Corona Status

சீனாவின் வுகான் நகரில் 2019-ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மெல்ல மெல்ல இந்த தோற்று பரவத்தொடங்கி, தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது.

சற்று ஆறுதலாக, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது.

scroll to top