உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும்,அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்து, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர்.

Rank | Name | Country | Net Worth (May 24, 2021) |
---|---|---|---|
1 | Bernard Arnault | $186.3 billion | |
2 | Jeff Bezos | $186.0 billion | |
3 | Elon Musk | $147.3 billion |
பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு, ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை கணிப்பின்படி, 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 13.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில மாதங்களாக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கிறிஸ்டியன் டியோர், லூயிஸ் உய்ட்டன் ,பெண்டி’ என, பிரபல பேஷன் பிராண்டுகளை சொந்தமாக கொண்ட நிறுவனமாகும், எல்.வி.எம்.எச்., கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தில் மட்டும் பெர்னார்ட் அர்னால்டுக்கு, 96.5 சதவீத பங்குகள் இருக்கின்றன.
நடப்பு ஆண்டு ஜனவரியில், எல்.வி.எம்.எச். குழு அமெரிக்காவின் முன்னணி நகை நிறுவனமான ‘டிப்பானி அண்டு கோ’ நிறுவனத்தை, 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. modafinil online europe https://lustfel.com/ இவ்வளவு விலையில் இதற்கு முன் எந்த ஆடம்பர பிராண்டும் கையகப்படுத்தப்பட்டதில்லை என்கின்றனர்.