டிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி? (Trendy Ways To wear A Simple Kurti)

குர்தி எனும் பெண்களுக்கான ஆடையானது இன்று வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உடையாகி விட்டது. கண்ணைக் கவரும் வண்ணங்களில், விதவிதமாக கைவேலைப்பாடு, எல்லாரக துணிகளிலும் கிடைக்கிறது. தகுந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உடன் உடுத்தும் போது ஒரு எளிமையான குர்தி கூட அணிந்த பெண்களுக்கு அழகூட்டும்.

ஆண்களுக்கான குர்தாவை சுருக்கி தான் குர்தியாக பெண்கள் அணிகிறார்கள் என்ற புலம்பலை கண்டுகொள்ள வேண்டாம் பெண்களே!

குர்தி என்பது ஜீன்ஸ்க்கு மட்டும் அல்ல எல்லாவிதமான பேண்ட்கள், பாவாடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

1. குர்தியும் பாவாடையும் (Kurti With A Skirt)

Skirt Bottom

அழகான ஃப்ரில் வைத்த அல்லது ஃப்ரில் (fril) வைக்காத பாவாடைகளுக்கு குர்தி தோதான மேலாடை. ஒல்லியான பெண்களுக்கு நல்ல மேட்சிங். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட அணிந்து செல்லலாம்.

2. சல்வாருக்கு மேட்சாக குர்தி (Kurti And Salwar)

மிக்ஸ் அன்ட் மேட்ச் (mix and match) முறையில் ஏற்கெனவே உள்ள சல்வார் பேண்ட் உடன் contrast நிறத்தில் குர்தி அணிவது அணிந்திருப்பவர்க்கு பெருமை, காண்போருக்கு பொறாமை.

3. குர்தியும் வேட்டி மாடல் பேண்ட்டும் (Kurti With Dhoti Pants)

Kurti with Dhoti Pant

வேட்டி பேண்ட் என்பது சல்வாரின் சகோதரிதானோ என நினைக்கும் அளவிற்கு தோற்ற ஒற்றுமை. வித்தியாசமான கட்டிங், அதற்கேற்ற தையல் அதற்கு மேட்சிங்கான நிறத்தில் குர்தி. ஆடம்பர விழாக்கள் முதல் சுற்றுலாவரைக்கும் என எங்கும் அணியலாம்.

4. ஜீன்ஸ்க்கு குர்தி (Kurti With Jeans)

இந்த காம்பினேஷன் ஆடைகளை விரும்பாத பெண்களே கிடையாது. வசதியாக அதேசமயம் ஸ்டைலாகவும் உள்ள ஒரே ஆடை. தினசரி அணிவதற்கு ஏற்ற ஆடை. கட்டுப்பெட்டியான அம்மாக்கள் கூட உடுத்த அனுமதிக்கும் ஆடை.

5. ஃப்ளாஷோ பேண்ட்களுக்கும் குர்தி (Kurti With Palazzo Pants)

ஸ்டைலிஷ் அதேசமயம் டீசென்ட் ஆக உடுத்த விரும்பும் பெண்களுக்கு ஏற்ற உடை தான் இந்த காம்பினேஷன். ஆபிஸ் பார்ட்டிகளுக்கு ஏற்ற ஆடை இது.

6. குர்தியும் லெக்கின்ஸ்ம் (Kurti With Skinny Leggings)

Leggings

குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக காட்டும். பிரிண்ட் செய்த குர்தியும் லெக்கின்ஸ்ம் நல்ல சேர்க்கை.

7. குர்தியும் ஷராராவும் (Kurti With Sharara)

வடநாட்டு பட்டுப் பாவாடை என்று கூறும் அளவிற்கு ஆடம்பரமான ஆடையான ஷராராவையும் விட்டு வைக்க வில்லை குர்தி ரசிகைகள்.சாதாரண குர்தியும் ஷராராவும் போதும் உங்களை தேவதைப்போல ஜொலிக்க வைப்பதற்கு.

டிரெண்ட் செட்டிங் என்பதே யாரும் முயற்சி செய்யாத அல்லது அணிந்து இராத வகையில் உடுத்துவது தானே.


Kurtis are shorter and tighter versions of the kurta. The straight-cut kurta is a loose shirt falling either just above or somewhere below the knees of the person is traditionally worn by men. However, women do also wear the straight-cut kurta or its shorter version, the kurti. kurti refers to waist coats, jackets and blouses which sit above the waist without side slits. Trendy way to wear Kurti is to wear along with Skirt / Jeans / Salwar / Sharara / Palazzo or Dhoti Pant / Leggings


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top