சேலை வாங்க போறீங்களா?

நூறு ரூபாய் புடவையா, லட்சம் ரூபாய் செலவில் வாங்க போகும் புடவையா ? புடவையின் விலையில் இல்லை சந்தோசம். புடவை வாங்கப் போகிறேன் என்பதே சந்தோஷம். இந்தியப்பெண்களின் அழகை வெளிங்கொணர்வது புடவை தான்.

Saree

“8” போன்ற உடற்கட்டு உள்ள இந்திய பெண்களின் அழகையும், உடல் அமைப்பையும் அழகுபட வெளிப்படுத்த புடவைக்கு நிகர் புடவையே. இத்தனை தூரம் பெண்களின் மனதில் குடிகொண்ட புடவையை வாங்க செல்லும் முன், ஏன் எதற்கு என்று ஆராய்ந்து சென்றால் நேரவிரயம், பொருள் விரயம் ஆகாது தானே!

எந்த நிகழ்ச்சிக்கு, யாருக்கு புடவை, எவ்வளவு பட்ஜெட், எத்தனை புடவைகள் வாங்கப் போகிறோம் என்பதை தீர்மானமாக முடிவெடுத்துக்கொண்டால், அதற்கேற்ப கடையையும் முடிவு செய்து குறிப்பிட்ட கடையில் மட்டும் வாங்கச் சென்று திரும்பலாம்.

புடவை ரகங்கள் பலவிதம்

புடவைகள் எண்ணற்ற ரகங்களிலும், பலவிதமான விலைகளிலும் கொட்டிக் கிடக்கிறது. நமக்கு பொருத்தமான நிறம், டிசைனில், ரகத்தில் உள்ள புடவையை கட்டும் போது தன்னம்பிக்கை மிளிரும்.

ஃபேஷன் என்ற பெயரில் அறிமுகம் ஆகும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக வாங்கி, நமக்கு உடுத்த வாகில்லாத புடவைகளால் பீரோ தான் நிரம்பும்.

உதாரணமாக ஆர்கண்டி புடவைகள் ஒல்லியாக, உயரமாக இருப்பவர்களுக்கு அழகாக இருக்கும். குண்டாக, குள்ளமாக இருப்பவர்கள் ஆர்கண்டி புடவைகளை வாங்காமல் இருந்தல் நலம்.

இப்போது வரும் ஹெவி எம்பிராய்டரி, ஆரி வொர்க் செய்த டிசைனர் புடவைகள் விலையும் அதிகம். காணும் போது கண்ணைக் கவரும். ஆனால் உடுத்தும் போது எல்லோருக்கும் அழகாக இருப்பதில்லை. பென்சில் போல உடல்வாகு உள்ள வட இந்திய பெண்களுக்கு அழகாக இருக்கிறது. வெள்ளிக்குடம் போன்ற உடல்வாகு உள்ள தென் இந்திய பெண்களுக்கு பொருத்தமாக இல்லை. விதிவிலக்காக இளம்பெண்களுக்கு அழகாக உள்ளது.

புடவையின் டிசைன்களில் கவனம் (mind the prints)
புடவையில் உள்ள டிசைன்கள் கூட நம் மனம், ரசனை, ஆளுமை என நம்மை வெளிப்படுத்தும். ஆகவே கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்.

* குண்டாக, குள்ளமாக இருப்பவர்கள் பெரிய பூக்கள், பெரிய பெரிய குறுக்கு கோடுகள் வரும் டிசைன் உள்ள புடவைகளை தவிருங்கள்.

* எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு பூப்போட்ட புடவைகளை வாங்கலாம் எவருக்கும் பொருந்தும்.

புடவையின் பார்டர்

Big Border

* அழகான புடவையின் அழகை மெருகூட்டுவதே பார்டர்கள் தான். பார்டர்கள் கூட புடவை கட்டுபவரின் உடல்வாகுக்கு ஏற்றவாறு தான் அழகு மிளிரும்.

* மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் அகலமான பார்டர் உள்ள புடவை என்றால் குண்டாக தெரிவார்கள். உயரமாக ஒல்லியாக இருப்பவர்கள் கூட அகலமான பார்டரை தேர்ந்தெடுக்கவும்.

* குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள் அகலம் குறைந்த பார்டர் உள்ள புடவைகளை தேர்ந்தெடுக்கவும்.

* உயரமும், பூசினால் போன்ற உடல்வாகு கொண்டவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் விருப்பம்போல உடுத்தலாம்.

புடவையின் நிறம்
* கறுப்பாக இருப்பவர்கள் இளம் நிறத்தில் டார்க் கலரில் டிசைன் வரும் மாதிரி எடுக்கலாம். லைட் கலரிலே புடவை கட்டி மனமும் தோற்றமும் டல்லாக இல்லாமல் இருக்கும் தானே. இந்திய கறுப்பு நிறம் கவர்ச்சிகரமானது.

* மாநிறமாக இருப்பவர்களுக்கு எல்லா நிறமும் அழகு தான். சலிப்பூட்டாத அழகு நிறம் தான் இந்த கோதுமை நிறம்.

* சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு அடர் நிறங்கள் அழகு என்றாலும், சில வெளிர் நிறங்கள் இளம் மஞ்சள், பீச் நிறம், இளம் சிவப்பு, இளம் ஊதா, முத்து வெள்ளை அதாங்க பால்வெள்ளை…..ம்… ஹாஃப் ஒயிட் தான் அருமையாக இருக்கும்.

தழைய தழைய கட்டிய புடவை, தளர சடை பின்னி, நெருக்கமாக தொடுத்த, அளவான பூச்சூடி, கைநிறைய வளையல், நெற்றியில் செந்தூரம் இட்ட பெண்ணை ரசிக்காத இந்திய ஆண் உண்டா?


Saree is a strip of unstitched fabric reanging from five to nine meter in length that is draped in various styles. Saree is a female garment mainly from India and it is Indian tradition to wear saree on festive/auspicious occasions. Type of saree varies for each state. Indian saree is the most graceful ethnic outfit that is primarily worn by Indian women. Material varies for each type of saree such as Crepe sarees, Art Silk, Chiffon Sarees, Lycra, Cotton sarees, Net sarees, Silk sarees.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women