பிரசவக்குழம்பு – 3

பிரசவத்துக்குப் பிறகு பெண் உடலின் பலவீனம் நீங்கவும் அவளுக்கு ஊட்டம் கொடுப்பதற்காகவும், தாய்ப்பால் சுரக்க, குழந்தைப் பேறு குழம்பாக கொடுக்கும் பழக்கம் எல்லா குடும்பங்களில் உண்டு. இதன்மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும் என்று மருந்துக் குழம்பின் பெருமைகளாகக் கூறுகிறார்கள்.

குமரி மாவட்டம் கடலோர மாவட்டம் என்பதால் இங்கு மீன்களே உணவில் பிரதானம் என்பதால் பிரசவ குழம்பில் கூட மீன் தான்.

கறுத்த கறி என்ற பெயரில் நாஞ்சில் நாட்டு பிரசவக்குழம்பினை எப்படி செய்வது என்று பார்ப்போம். .

பால் சுறா, மஞ்சப்பாறை, நெய் மீன், வேளா போன்ற சதைப்பிடிப்பான மீன் ரகங்களே நல்ல சுவையாக இருக்கும். பால் சுறா இயல்பாகவே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் ரக மீன்.

கறுத்த கறி

Blck Fish Curry

தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
வரமிளகாய் – 1
மிளகு – 1 ஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
பூண்டு – விருப்பம் போல
சுக்கு – 1 துண்டு
தேங்காய் துருவல் – 1 கப்
கொத்தமல்லி – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய்

செய்முறை :

Fish Pieces

* மீன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ளவும்

* வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான தீயில் வதக்கவும்.

* இதனுடன் சுக்கு, மிளகு, பூண்டு, கொத்தமல்லி, ஓமம், கடுகு ஒவ்வொன்றையும் அதன் வறுபடும் நேரத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கருகி விடாமல் வறுக்கவும். தேங்காய் துருவல் பொன்னிறமாகும் போது இறக்கவும்.

* வறுத்த மசாலா ஆறியபின் நைசாக அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வேகவிடவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மஞ்சள் தூள் , உப்பு , கரைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். உரித்த பூண்டுகளை சேர்த்து வேகவிடவும்.

* குழம்பு கொதித்து வரும்போது மீன் துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.

* மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்.எண்ணெய்விட்டு வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

கறுப்பு நிறத்தில் மருத்துவ குணம் நிறைந்த மீன் குழம்பு தயார். சுடுசோறு, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்.பிரசவித்த பெண்கள் மட்டுமன்றி அனைவரும் சாப்பிடலாம்.


It is an alternative to postpartum curry recipes seen earlier. The fish curry recipe called “karutha curry”. Eating fish is good for mother and baby, because it is a good source of many vitamins and minerals, as well as essential omega 3 fatty acids. Eating fish helps for healthy breastfeeding. Follow the steps to prepare a healthy fish curry for postpartum/postnatal care. It can be eaten by all people to stay healthy. The curry is suitable in combination with rice, dosa, idli, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com