பிரசவ குழம்பு – 2

பெற்று பிழைக்கும் பெண்ணை உடல் தேற்றி விட நம் பாட்டி காலத்தில் மருத்துவ குணம் நிறைந்த உணவை அன்பும், அக்கறையுடன் சமைத்து கொடுத்து வந்தனர். பக்கவிளைவுகள் இல்லாத நமது பாரம்பரிய சித்த மருந்துகளை கொண்டு எளிய முறையில் தயாரிக்க முடியும் என்பதே இதன் சிறப்பு.

பிரசவத்திற்கு பின் தாயின் உடல் களைப்பு தீர, நோய் அண்டாமல் இருக்க, வாயுத் தொல்லை, உணவுச் செரிமானத்திற்கும், கர்ப்பப்பை புண்களை ஆற்றும் மருந்துகள் கொண்டு செய்வதால் ஒரு வகை மருந்துக்குழம்பு தான்.

இந்த வகை பேறுகால குழம்பு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களால் செய்யும் கைப்பக்குவம். பேறுகால குழம்பு வைக்க மருந்து என்று  நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் தருவார்கள் இல்லையெனில் நம்வீட்டு அஞ்சறைப் பெட்டி சரக்குகள் மற்றும் தேவைப்படும் மருந்துகளையும் வாங்கிக் கொள்ளவும்.

பேறுகால குழம்பு

Postnatal curry

தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஸ்பூன்
அரிசி திப்பிலி – 1ஸ்பூன்
வரமிளகாய் – 1
சுக்கு – 1 டீஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
சுண்டை வத்தல்
நல்லெண்ணெய்
புளி – மிகக்கொஞ்சம்
உப்பு

செய்முறை :
* மிளகு, சீரகம், மல்லி, பெருங்காயம், கடுகு, அரிசி திப்பிலி போன்றவற்றை வாணலியில் வறுத்து எடுக்கவும்.

Postpartum Curry

* சுண்டை வத்தலை எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.

* வறுத்த பொருட்களை நன்கு பொடி செய்து, பிறகு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். முதலிலே தண்ணீர் சேர்த்து அரைத்தால் மருந்துப் பொருட்கள் அரைப்படாது.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து அரைத்த மசாலா, மஞ்சள் தூள், சுக்கு பொடிகளை போட்டு வதக்கவும்.

* புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* இதனுடன் சுண்டைவத்தலை சேர்த்து வேகவிடவும்.மிதமான தீயில் வேகவிடவும்.

* எண்ணெய் விட்டு வரும் போது இறக்கவும்.

நன்கு குழைந்த சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி இளம் தாய்க்கு அளிக்கலாம். மஞ்சள் தூள் நிறைய சேர்க்கவும். மிளகு, சுக்கு, வரமிளகாய் காரம் மட்டுமே.


A postpartum (or postnatal) period begins immediately after the birth of a child as the mother’s body, including hormone levels and uterus size, returns to a non-pregnant state. Those who develop postpartum depression are at greater risk of developing major depression later on in life. Symptoms might include insomnia, loss of appetite, intense irritability and difficulty bonding with the baby. There are many recipes to maintain post delivery health. Here, we have one such recipe for women to gain nutrients back after delivery.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course