பிரசவ குழம்பு – 1

அந்தக்காலத்தில் பிரசவித்த பெண்களுக்கு இழந்த உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்ட, பால் சுரக்க, கர்ப்பப்பை கசடுகள் வெளியேறி, கர்ப்பப்பை சுருங்கி, உள் புண்கள் ஆறி இயல்பு நிலைக்கு திரும்ப என உணவே மருந்தாக செய்து கொடுத்து பிள்ளை பெற்ற பெண்களின் உடல்நலம் தேற்றினர்.

நம் பழங்கால உணவு பழக்கத்தை டேஸ்ட் பிடிக்கவில்லை, என்ன கலர் இது என்று ஏளனம் செய்தவர்கள் தான் முப்பது வயதிலே இடுப்பு வலி, கர்ப்பபையில் கோளாறு என்று மருத்துவமனையை நாடுகிறார்கள்.

பழமையின் பெருமையை மக்கள் உணர்ந்து வருவது நல்ல அறிகுறி. ஆனால் பழைய முறை சமையல் முறைகள், மருந்து குறிப்புகள் தெரிந்த மூத்த தலைமுறையினர் நம்மை விட்டு செல்வதால், இயன்ற பொழுதெல்லாம் பெரியவர்களிடம் பேசி அவர்கள் அனுபவ மொழிகள் வாயிலாக தெரிந்தவற்றை ஆவணப்படுத்தி வைப்பது நம் வருங்கால தலைமுறையினர்க்கு உதவும். அந்த வகையில் இணையத்திற்கு பெரும் கடமை பட்டுள்ளோம். ஒவ்வொரு ரெசிபிகளாக தொடர்ந்து பார்ப்போம்.

ஒவ்வொரு மாவட்டம், சாதி, மதம், குடும்பங்கள் என பிரசவ கால சமையல்கள் வேறுபட்டாலும் நோக்கம் ஒன்று தான். தாய் சேய் நலம் தான்.

புள்ள பெத்த குழம்பு

Curry Recipe

தேவையான பொருட்கள் :
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – விருப்பம் போல
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
உப்பு

வறுத்து அரைக்க
மிளகு – 1 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – கையளவு
பூண்டு – 5பல்
இஞ்சி – சிறு துண்டு

செய்முறை :
* வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.

Tamarind

* புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

* நல்லெண்ணெய் விட்டு, உழுந்து, கறிவேப்பிலையை தனியே வறுத்து எடுக்கவும்.

* பூண்டு, இஞ்சியை தனியாக வறுத்து எடுக்கவும்.

* வறுத்தெடுத்த பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து புளித்தண்ணீரை சேர்க்கவும்.

* புளியின் பச்சை வாசனை போனதும், அரைத்த விழுதை சேர்த்து வேகவிடவும்.

* வெந்து குழம்பில் எண்ணெய் விட்டு வரும் போது வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.

காரம் அவரவர் ருசிக்கேற்ப சேர்க்கவும். சுடுசாதத்திற்க்கு இட்லி தோசைக்கு கூட ருசியாக இருக்கும்.


The postpartum period is commonly defined as the six weeks after childbirth. The month after giving birth is called ‘the golden month’ in Traditional Chinese Medicine (TCM). Nourishing food is one of the most important parts of postpartum recovery. It is very important that women regain their strength and maintain their health as they adjust to life with their new baby. Women in the postnatal period need to maintain a balanced diet, just as they did during pregnancy. Prepare the postpartum curry recipe by following the above procedure.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top