கர்ப்பகாலத்தில் ஏற்படும் கருச்சிதைவு

Miscarriage

கருவுற்று ஐந்து மாதங்களுக்குள், ஏதேனும் அக, புற காரணிகளால் கருகலைந்து விடுவதை கருச்சிதைவு என்கிறோம்.

கருச்சிதைவு இருவகையாக பிரிக்கப்படுகிறது அவை

1. தன்னிச்சையாக கருகலைதல் (spontaneous abortion)
கருவின் இயற்கை மரணம் அல்லது குரோமோசோம்களின் குளறுபடியால் கரு மேற்கொண்டு வளர இயலாமல் கலைந்து விடுவதைத்தான் தன்னிச்சையாக கருகலைதல் என்கிறோம்.

2. தூண்டப்பட்ட கருச்சிதைவு (Induced abortion)
மருத்துவ காரணங்களுக்காக அல்லது சுய காரணங்களுக்காக கருவை கலைப்பதைத்தான் தூண்டப்படும் கருக்கலைப்பு என்கிறோம்.

கருச்சிதைவு அறிகுறிகள்

* திடிர் இரத்தப் போக்கு
கருவுற்ற காலத்தில் திடிரென இரத்த போக்கு ஏற்படுதல் ஒரு அபாயகரமான அறிகுறி. உடனடியாக மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் செல்வது அவசியம். பெரும்பாலான இரத்த போக்கினால் கருச்சிதைவு ஏற்படுவதில்லை. உரிய காரணங்களை கண்டறிந்து தகுந்த மருந்துகள், ஓய்வினால் மருத்துவர்கள் இரத்த போக்கை நிறுத்தி விடுவார்கள்.

* அடிவயிற்றில் வலி

Cramp

இரத்தப்போக்குடன் கூடிய வயிற்றுவலி, அதுவும் தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வரும் வலி என்பது அவசியம் மருத்துவ கண்காணிப்பு தேவை என்பதை உணர்த்தும்.

* சில கருச்சிதைவு இரத்த போக்கு, வயிற்றுவலி அறிகுறிகள் காட்டாமலே ஏற்படும். மகப்பேறு மருத்துவர் அல்லது செவிலியரின் பொதுவான கர்ப்பிணி பெண்களுக்கு செய்யும் பரிசோதனைகள் மூலம் தெரிய வருவதுண்டு. இதயத்துடிப்பு நின்று போன கரு, அசைவு இன்றி இருப்பதை உணர்ந்தால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றனர்.

கருச்சிதைவுக்கான காரணிகள்
* கருவுற்று முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு பெரும்பாலும் கருமுட்டை விந்தணு சேர்க்கையில் ஏற்பட்ட குரோமோசோம்கள் எண்ணிக்கை குளறுபடியால் மேற்கொண்டு கரு வளர இயலாமல் கலைந்து விடுகிறது.

* கருவுற்ற முட்டையானது ஃபாலோபியன் குழாயில் (fallopian tube) இருந்து பயணித்து கர்ப்பப்பையை வந்தடையும். கர்ப்பப்பை சுவற்றில் கருவுற்ற முட்டை (embryo) ஊன்றி வளர ஆரம்பிக்கும். இந்த செயல்பாடுகளில் தடை ஏற்பட்டால் கரு கலைந்து விடுகிறது.

கருவுற்ற பெண்ணின் வயது
கருவுற்ற பெண்ணின் வயது என்பது கர்ப்பக் காலத்தில் முக்கியமான அம்சம். இருபது வயது பெண்ணை விட நாப்பது வயது பெண்ணிற்கு கருச்Abortionசிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி கருச்சிதைவு
ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாட்பட்ட நோய்கள்
கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய், இரத்த உறைவு நோய்கள், ஹார்மோன்கள் பற்றாக்குறை, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுகள் நோய்கள் (auto immune deficiency disorders) ஆகியவற்றாலும் கருச்சிதைவு ஏற்படும்.

இடுப்பு மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள்
கர்ப்பப்பையில் உள்ள பிறவிக்கோளாறுகள், அடிக்கடி கருக்கலைப்பு (D&C) செய்ததால் ஏற்பட்ட வடுக்கள், குறுகலான இடுப்பு எலும்புகள், அரிதாக சில வகை கர்ப்பப்பை கட்டிகள் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும்.

நோய் தொற்று
எய்ட்ஸ், கொனேரியா (gonorrhoea), சிபிலிஸ் போன்ற பால்வினை நோய் தொற்று தாய்க்கு ஏற்பட்டாலும் கருச்சிதைவு ஏற்படும்.

புகை மற்றும் குடிப்பழக்கம்
கருவுற்ற காலத்தில் சிகரெட், ஆல்கஹால் போன்ற போதைப் பழக்கம் இருந்தால் தவிர்ப்பது நல்லது இல்லையெனில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.

மாத்திரைகள்
சில வகை வலிநிவாரணி மாத்திரைகள், குறிப்பிட்ட சில நோய்களுக்கு எடுக்கும் சிகிச்சை கூட கருச்சிதைவை தூண்டும்.

சுற்றுச்சூழல்
ஆர்செனிக், கந்தக அமிலம், காரீயம் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கள் , சிலவகை வேதிப்பொருட்கள், கதிரியக்கம் காரணமாக கூட கருச்சிதைவு ஏற்படும்.

தந்தையின் வயது
சமீபத்திய ஆராய்ச்சியில் தந்தையின் வயது கூட கவனிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தந்தையின் தொழில் சூழலில் வேதிப்பொருட்கள், கதிர்வீச்சு, பூச்சி மருந்து பாதிப்பு இருந்தால், விந்தணுக்கள் பாதிக்கப்பட்டு அதன் மூலம் கருவுற்ற முட்டை ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு சாத்தியம் இல்லை எனும் போது கருக்கலைகிறது.

உடற்பருமன்
பெண்ணின் உடற்பருமன் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆகவே குழந்தை பெறும் முயற்சியில் இருப்பவர்கள் உடற்பருமனை குறைப்பது நல்லது.

முதல் மூன்று மாதங்களில் அதாவது first trimester pregnancy ஏற்படும் கருச்சிதைவு மற்றும் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டோம்.


Miscarriage also called as spontaneous abortion or pregnancy loss often occurs because the foetus isn’t developing normally. Abortion that is caused for a purpose, intentionally is called as Induced abortion or induced miscarriage. Factors for miscarriage inccludes age of women, long term diseases, infection, pain killers, etc. A missed miscarriage is when embryonic death has occurred but there is not any expulsion of the embryo. Symptoms include fluid, blood or tissue passing from the vagina and pain in the stomach or lower back, nausea or vomiting, cramping, irregular uterine bleeding, or fatigue.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top