கலம்காரி கைவண்ணத்தில் மிளிரும் காட்டன் புடவைகள்!

Drawing

கலம்காரி என்பது பண்டைய காலத்தில் இருந்து வரும் பாரம்பரிய கலை. பருத்தி அல்லது பட்டு துணிகளில் கைகளால் டிசைன்களை வரையும் அற்புதமான கலை. இதன் சிறப்பே புளியம் பேனாக்களால், இயற்கை சாயங்களைத்தொட்டு வரைவது தான். இயற்கை சாயங்களாக பூ, இலை, விதை என இவற்றில் இருந்து எடுக்கப்பட்ட நிறங்களே. ஆகவே இந்த வகை துணிகள் வழக்கமான நிறங்களில் இல்லாமல் இருக்கும்.

மொஹஞ்சதாரோவில் கலம்காரி வகை துணிகள் கிடைத்ததற்கான சான்றுகள் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் கோல்கொண்டா சுல்தான்களால் தான் ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டத்தில் பரவியது.

கலம்காரி ஒரு பெர்ஷியன் வார்த்தை

கலம்காரி (kalamkari) யில் “கலம்”, என்பது பெர்சிய மொழியில் பேனா என்று பொருள் தரும். அதே போன்று “காரி”, என்பது கைவினைத்தொழில் என்பதைக் குறிக்கும். ஈரான் நாட்டின் பழைய பெயர் தான் பெர்ஷியா. நாட்டுப்புற கலைஞர்கள் இந்துமத இதிகாசங்களை துணியில் கலம்காரியில் ஓவியங்களாக தீட்டி, ஒவ்வொரு கிராமங்கள் தோறும் நிகழ்ச்சி நடத்த எடுத்து செல்வர். இவர்களால் தான் இந்த கலை பரவியது. ஹைதராபாத் நிஜாம் மன்னர்களும் இதனை ஊக்குவித்தனர்.

கலம்காரி தயாரிப்பு முறைகள்

பருத்தி ரக துணிகளை எடுத்துக் கொண்டு அதில் ப்ளீச்சிங், சூரிய ஒளியில் உலரவைத்தல், இயற்கை சாயங்களை தயாரித்தல் என கிட்டத்தட்ட 23 நிலைகளை கடந்து உருவாகிறது கலம்காரி துணிகள்.

* பருத்தி துணிகளை மாட்டு சாணம் கலந்த நீரில் ஊற வைக்கிறார்கள் அதன் பின்னர் இதனை எருமைப்பால்+கடுக்காய் கலவையில் ஊறவைக்கிறார்கள். துணியின் நிறம் பழுப்படைந்து, மென்மையானதும் பால் வாடை போகும் வரை தண்ணீரில் அலசி காய வைக்கிறார்கள்.

* புளிய மரத்தின் இளம் கிளைகள் அதாவது குச்சிகளை கொண்டு ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணரின் ராசலீலா கதைகளை அவுட்லைனாக வரைகிறார்கள்.

இயற்கை சாயங்கள்

வேதிப்பொருட்கள் (chemicals) இல்லாத, இயற்கை முறையில் பூ, மரப்பட்டைகளில் இருந்து தயாரிக்கிறார்கள். நீலம், கறுப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் கிடைக்கும் சாயங்களைக் கொண்டு ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுகின்றனர்.

கலம்காரியின் வகைகள்

Qalamkari Sarees

மிகமுக்கியமாக இரண்டு வகைகள் உண்டு. அவை

ஸ்ரீ காளஹஸ்தி

இந்த வகையில் கடவுள் திருவுருவங்களே வரையப்படுகிறது. கைகளால் தெய்வ உருவங்களை வரைந்து வண்ணம் தீட்டுகின்றனர்.

மசூலிப்பட்டிணம்

இந்த வகை ஓவியங்கள் ப்ளாக் (block printing) முறையில் தயாரிக்கப்படுகிறது. மயில், அன்னப்பறவை, மலர்கள், யானை, புத்தர் என்று கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக தயார் செய்கிறார்கள்.

இன்றைய நவீன பெண்கள் ஆசைகளுக்கு ஏற்ப கலம்காரி புடவைகளாக மட்டும் அல்லாமல் குர்தி, சுடிதார் என புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.


Kalamkari is a traditional art of drawing designs on cotton or silk fabric and hand painting it. Kalamkari also called Qalamkari originates in the Persian, which is derived from the words qalam (pen) and kari, Qalamkari (drawing with a pen). The beautiful sarees are dyed only using natural dyes. Dyes used are the colors from seeds, leaves, flowers. Hence Kalamkari stands unique. The two most important styles are Sri Kalahasthi style – hand drawing of Goddess images and Machilipatnam style – follows block printing method and designs are based on imagination like Peacock, Swan, Elephant, Buddha, Flowers, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top