மசக்கைக்கு நெல்லிக்காய் அருமருந்து!!!

கர்ப்பகாலத்தில் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரமே முதல் மூன்று மாதங்கள் தான். துரதிர்ஷ்டவசமாக ஹார்மோன்களின் அளவு கூடி குறைவது, குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாயின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள். மாற்றங்களின் விளைவாக மசக்கை, திடிரென வித்தியாசமான சுவையில் ருசிக்க ஆசை.

காலையில் எழுந்ததும் குமட்டல், வாந்தி, தலைசுற்றல் என morning sickness அறிகுறிகள் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட வேண்டிய சமயத்தில் தான் உணவைக் கண்டாலே வெறுப்பும், குமட்டலும் என கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுவர். புளிப்பும், துவர்ப்பும் ஆக உண்ண கர்ப்பிணி பெண்கள் விரும்புவர். இதற்கு சரியான தேர்வு, உள்ளங்கை அளவு நெல்லிக்கனி தான். எளிதில் கிடைக்கும், விலை மலிவாக இந்த அற்புதக்கனியின் பயன்கள் கர்ப்பிணிக்கு மட்டுமல்ல வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

மசக்கைக்கு தீர்வு

Gooseberry Rice

கர்ப்பகால அவதிகளில் ஒன்றான மசக்கைக்கு நெல்லிக்காய் சாறு அற்புதமான மருந்து. காலையில் எழுந்ததும் இதனை அருந்துவதால் குமட்டல், வாந்தி நிற்கிறது. புத்தம்புதிதாக தயாரித்த நெல்லிச்சாறு குடிப்பதால் கர்ப்பிணிக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், அசிட்டியை தவிர்க்கிறது.

மலச்சிக்கலை நீக்கும்

கர்ப்பக் காலத்தில் தோன்றும் மலச்சிக்கல் மற்றும் ஹெமராய்டு (hemorrhoids) சிக்கல்களை தவிர்க்கிறது. நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும். இதில் விட்டமின் சி அதிகம் இருப்பதால், உணவில் உள்ள இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவி செய்கிறது. கர்ப்பக்காலத்தில் இரும்புச் சத்து அவசியமானது.

கால்வீக்கம் குறைதல்

கால், கைகளில் நீர் கோர்த்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுவர். இந்த நோய் எதிர்ப்புச் சக்தி  கோளாறுகளை (anti inflammatory responses) தொல்லைகளை நெல்லிக்காய் தவிர்க்கிறது. நெல்லியில் உள்ள நீரானது, கர்ப்பிணியின் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது. இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் உள்ள கால்சியம் பற்களுக்கு வலுவலிக்கிறது. பல் ஈறுகளில் ரத்தம் வருவதை தடுக்கிறது.

Gooseberry Juice

நெல்லிக்காய் ஜூஸ், துவையல் என்று அவரவர் விருப்பம் போல தினமும் சேர்த்து கொள்ளவும். நெல்லிக்காய் ஊறுகாய் தவிர்ப்பது நல்லது.


Pregnancy is a time of both physical and emotional changes. Most of all pregnant women experience nausea and vomiting in the first trimester, also called morning sickness because symptoms are most severe in the morning. Morning sickness may be due to the changes in hormone levels during pregnancy. Gooseberry relieves all these discomforts, keeps hydrated, treats inflammation, heals insomnia. It prevents hemorrhoids and constipation. It is rich in vitamin c and iron. Gooseberry can be taken in the form of juice, rice or thuvayal.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top