பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்!

காலை நேர பரபரப்பில் ஆரம்பிக்கும் டென்ஷன் இரவு படுக்கைக்கு செல்லும் வரை தொடரும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி தான். காலப்போக்கில் இந்த நெருக்கடியான சூழல் வாழ்க்கை மீது சலிப்பும், தீவிர மன அழுத்தம் அதன் விளைவாக சில பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

சின்ன சின்ன திட்டமிடல், மாற்றங்கள் தேவையில்லாத பதட்டங்களை தவிர்க்கிறது. குடும்பத்தினரின் அனுசரணையும் தேவை.

காலை நேர டென்ஷனைத்தவிர்க்க

Early to Rise

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் இரவே அடுக்களையை சுத்தப்படுத்தி, பாத்திரங்களை கழுவி வைக்கவும். மறுநாள் சமையலுக்கு தேவையான பொருட்களை அலசி ஆராய்ந்து எடுத்து வைக்கவும். டிபன் பாக்ஸ், ஸ்பூன், குடிநீர் பாட்டில்களை கழுவி தனியே ஒரு இடத்தில் எடுத்து வைத்தால், காலையில் தேடும் வேலை மிச்சம்.

திட்டமிடல் நேரவிரயத்தை தவிர்க்கும்

அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். மொபைலில் ரிமைண்டரில் கூட போடலாம். சிலர் ஒரு வாரத்திற்கான மெனுலிஸ்ட் கூட தயார் செய்கிறார்கள். குழந்தைகளையும் நேர மேலாண்மையில் பழக்கவும்.

பலருக்கும் காத்திருத்தல் என்பது கொடுமையான விஷயம். இந்த நேரத்தை புத்தக வாசிப்புக்கு பயன்படுத்தலாம். வாசிப்பு அனுபவம் கூடும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

சோம்பலை தவிர்க்கவும்

நாளை நாளை என வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் சரியான நேரத்தில் செய்து முடியுங்கள். சோம்பல் என்பது எப்போதும் நேரவிரயம், பொருள் விரயத்தில் தான் கொண்டு செல்லும்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிர்க்கவும். சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

தினசரி காலை பத்து நிமிடம் முன்பாக எழுந்து கொள்ளுங்கள். நினைத்தபடி ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடக்க வில்லையெனில் பதட்டம் அடையாமல் அதற்கு மாற்று வழியை யோசித்து செயல்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

Hang Out

பிடித்த பொழுது போக்கு, நட்புகளுடன் உரையாடுதல் என மனசுக்கு பிடித்தவற்றை செய்து எப்போதும் மனதை உற்சாகப்படுத்துங்கள்.


Women either working or non-working are stressed due to many reasons. There are some ways to help women to get out of stress. Early to rise is a healthy habit and it is helpful to relieve from stress. Laziness leads to stress, so it is better to avoid being being all the time. Doing meditation on daily basis helps to work peacefully for the whole day as meditation deals with mental relaxation and concentration. Hobbies and Spending time in interested activities also helps to lead a happy life without stress.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women