கர்ப்பக் காலத்தில் நன்கு உறங்க என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பமாக இருக்கும் போது தூக்கம் என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். குழந்தை வளர வளர வயிறானது பெரியதாகும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம், நெஞ்செரிச்சல் தசைப்பிடிப்புகள், கால்வலி, இடுப்பு வலி என்று தினம் ஒரு வலியுடன் உறக்கம் கலைந்து விடும்.

கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.

பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்த்து, புத்தகம் வாசிப்பது, வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடுவது நல்லது.

கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு ஏற்ற வகையில் நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2-3 தலையணைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

SOS-side on side ஒருக்களித்து அதாவது ஏதாவது ஒரு பக்கமாக படுத்து உறங்குவது தான் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்லது.

மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களினால் உறக்கம் வராமல் தவிப்பவர்கள், காலார சிறிது நேரம் நடக்கலாம். தியானம், யோகப்பயிற்சிகள் செய்யலாம்.

தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால் நல்ல உறக்கம் வரும்.

கார்போஹைட்ரேட், புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை இரவு உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல உறக்கம் வரும்.

Liquid Food

தாய் – சேய் நலத்திற்கு நலத்திற்கு நிறைய தண்ணீர் மற்றும் இளநீர், பழச்சாறு போன்ற பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால் அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். அதன்பொருட்டு இரவில் தூக்கம் தடைபடாது.

இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இரவில் நல்ல உறக்கம் வரும்.

நல்ல உணவு, காற்றோட்டமான அறை, நல்ல மனநிலை, அன்பான கணவன், அக்கறையான உறவுகள் தான் நிம்மதியான உறக்கம் வருவதற்கான காரணங்கள்.


During pregnancy, the best position to sleep is “SOS” (sleep on side). Even better is to sleep on your left side. Sleeping on left side will increase the amount of blood and nutrients that reach the placenta and your baby. While sleeping on your right side is unlikely to directly affect the baby, it can put added pressure on the liver. Intake of dinner foods rich in protein and carbohydrates helps to get good sleep. It is also advised to take more liquids in day time for the betterment of both mother and child.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course