பெண்களை தாக்கும் இரத்த சோகை!!!

இந்திய பெண்களுக்கே உள்ள தியாக மனப்பான்மையுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் போதும் என சொல்லும் அளவுக்கு சமைத்தவற்றை பரிமாறிவிட்டு, மிச்சம் மீதி, நேற்றைய பழையது உண்பதால், அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சரிவிகித உணவு கேள்விக்குறி. விளைவு ஊட்டச்சத்து பற்றாக்குறை அதன் காரணமாக இரும்புச்சத்து குறைவு, இரத்தச்சோகை என வரிசையாக நோய்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ரத்தசோகை வருவதற்கான காரணங்கள்!

ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை (Anemia) என்கிறோம். இதில் நிறைய வகைகள் உண்டு.

Heamoglobin

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடல் முழுவதும் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது ஹீமோகுளோபின்கள்தான்.

இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ஹீமோகுளோபினின் செயல்திறன் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடுகிறது. இதனைத்தான் ரத்தசோகை என்கிறோம்.

சராசரி ஹீமோகுளோபின் அளவு

ஆண்களுக்கு – 14.5 முதல் 15.5gm/dl,

பெண்களுக்கு – 13.5 முதல் 14.5 gm/dl

குழந்தைகளுக்கு – 16 முதல் 17 gm/dl

இரத்த சோகைக்கான காரணங்கள்

விபத்து, அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்றவற்றால் உண்டாகும் ரத்த இழப்புகள், இரும்புச்சத்து பற்றாக்குறை, சரிவிகித உணவு இல்லாமை, பரம்பரை குறைபாடு, கோளாறு, சிவப்பு அணுவின் அளவு குறைவது அல்லது வடிவம் மாறுவது, ரத்தம் தானத்தின் போது ரத்த வகை மாறிப்போவது போன்ற காரணங்களால் ரத்த சோகை உருவாகலாம்.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காத போதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், கர்ப்பக் காலத்தில் மற்றும் பாலூட்டும் காலத்திலும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரத்த சோகைக்கான அறிகுறிகள்!

Fatigue

சோர்வு, பசியின்மை, மூட்டு வலிகள், படியேறினாலே மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, முடி உதிர்தல், கவனக்குறைவு.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் மாற்றம்

கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, மீன், ஈரல், பேரீச்சம்பழம் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும். விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.

குடும்பத்தினரும் உணவு விஷயத்தில் வளரும் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ஆண், பெண் பேதமின்றி உணவளியுங்கள். குடும்பத்தலைவிகள் தியாகமனப்பான்மையை தூக்கி எறிந்து தனது ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உட்கொள்ளுங்கள். குடும்பத்தின் ஆணி வேர் பெண்கள் தான் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.


Without iron supplementation, anemia occurs in many pregnant women. It is also caused by blood loss, such as from heavy menstrual bleeding, an ulcer, cancer and regular use of some over-the-counter pain relievers, especially aspirin. If it is not treated, iron-deficiency anemia can cause severe health problems. Very little amount of oxygen in the body can damage organs. Include leafy greens, seafoods, beans, nuts and seed, meat, poultry, dates, berries in your diet plan to fight anemia.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top