திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்ணா நீங்கள்? அவசியம் இதை படியுங்கள்!

Marriage

திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவு மட்டும் அல்ல, வாழ்க்கையில் இதுவும் ஒரு முக்கிய நிலை. பெற்றோர்களும் முக்கிய கடமையாக நினைப்பது இந்த நிகழ்வைத் தான். இன்றைய பெண்கள் புத்திசாலிகள், எத்தனை விதமான உறுதியான கொள்கைகள் உடன் வரன் பார்க்க சம்மதிக்கின்றனர்.

அவர்களது எல்லாவித எதிர்பார்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பெரும்பாலும் சுயநலம் தான் வெளிப்படுகிறது. அவர்களது எதிர்பார்ப்புகள் இருக்கட்டும். பொத்தாம்பொதுவாக திருமணம் பற்றி சில புரிதல்களை அலசுவோம்!

1. மாமியார் – மாமனார்

மாமியார் – மாமனார் இருவரும் அன்பும், பாசமும், அக்கறையும் கலந்த அளவான சுதந்திரம் அளிக்கும் வகையில் இருப்பார்களா என்று கணித்து பார்க்கவும். மனித மனம் சிக்கலானது அதனை முழுவதும் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

2. வரதட்சணை

பெண் வீட்டில் இருந்து வரதட்சணை பெறுவதில் பேரார்வம் காட்டுபவர்கள் போல தோன்றினால் ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுங்கள்.

3. மதம் சார்ந்த நம்பிக்கைகள்

தீவிர தெய்வநம்பிக்கைகளும், அது சார்ந்த மதச்சடங்குகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வீட்டுக்கு, சாமிக்கு ஒரு ஹாய், பை மட்டும் சொல்லும் பெண்ணோ அல்லது எதிர்மறையாக பெண் தீவிர பக்தியில் சிறந்தவர் என்றாலும் பிரச்சினை தான் வரும்.ஆகவே தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

4. பொருளாதார நிலைமை

உங்கள் வருங்கால வாழ்க்கைத்துணை யின் சம்பளம் கொண்டு குடும்ப நிர்வாகத்தை நடத்த முடியுமா என்று கவனியுங்கள். குழந்தை பிறப்பு, பராமரிப்பு என்று வரும் போது பெண்கள் வேலையை விடவேண்டிய சூழல் வரும் தானே!

5. திருமணத்திற்க்குப்பிறகு பணிபுரிதல்

திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல கணவரும், கணவர் வீட்டாரும் அனுமதிப்பார்களா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

6. மருத்துவ பரிசோதனை

உங்கள் வருங்கால கணவருக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்யச் சொல்லி கேட்கலாம். நமது நாட்டில் மிகவும் கடினமான காரியம்.ஆனால் அவசியமான ஒன்றாகும். பெண்ணும் தனது மருத்துவ பரிசோதனை ஆவணங்கள் வைத்திருந்தால் மாப்பிள்ளை சம்மதிப்பாரோ என்னவோ?

7. கூட்டு குடும்பம் – தனிக்குடும்பம்

ஆரம்பத்திலேயே கூட்டு குடித்தனமா, தனிக்குடித்தனமா என்பதை முடிவு செய்தல் பின்னால் வரும் தேவையில்லாத மனக்கசப்புகளை தவிர்க்கும்.

8. வீட்டு வேலைகள்

Work

வீட்டு வேலைகளில் கத்துக்குட்டி என்றால் ஆரம்பித்திலே சொல்லி விடுவது, எதிர்ப்பார்ப்புகளை குறைக்கும். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் பெண் தன் மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும்.

எத்தனை முன்யோசனையுடன் திருமணம் செய்து கொண்டாலும் திருமணம் என்பது கடவுள் அமைத்து வைத்த மேடை. கிடைத்த இந்த வாழ்க்கையை அதன் போக்கில், அதேசமயம் பாதகங்களையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான் புத்திச்சாலித்தனம்.


There are certain things every woman must learn and understand before getting married, too. Main conflict happens after marriage is because of preferring nuclear family instead of joint family. There also may be problem due to financial status, dowry, job after marriage, parents-in-law, household chores, etc. So it reduces the risk when we make these things clear before marriage.


scroll to top