கார்த்தி நடிப்பில் “கைதி – 2” உருவாகுமா? தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு புதிய தகவல்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய  “கைதி” திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. தளபதி விஜயின் “பிகில்” திரைப்படம் வெளியான நாள் அன்று தான் இந்த படமும் வெளியானது, இருந்தாலும் கைதி படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 105 கோடி ரூபாய் வசூல் செய்து மிக பெரிய லாபத்தை அந்த குழுவிற்கு பெற்று கொடுத்தது என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில் “கைதி 2” படம் குறித்த தகவல் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  நிச்சயம் கைதி 2 உருவாகும் எனவும், அதன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

தற்போது, கார்த்தி மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் வேலைப்பாடுகள் முடிந்த பிறகு, கார்த்தியும், கனகராஜூம் “கைதி 2” படத்திற்காக கை சேர்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது என தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு  தெரிவித்துள்ளார். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course