படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடிய சில பிரபலங்கள் யார் யார்?

அந்தகன் படப்பிடிப்பின் போது நடிகர் பிரசாந்த் உடன் பல பிரபலங்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகர் பிரசாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அந்ததுன். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.


பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக எந்த நேரத்திலும் படப்பிடிப்புக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படலாம் என்பதால், படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்த படத்தில் போலீசாக நடிக்கும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா விஜயக்குமார் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் பிரசாந்த், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் நடந்து வரும் சமயத்தில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course