ரஜினியை பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் காரணம் என்ன ?

நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி கூறிய அறிக்கையில்,  நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடாவாக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பரவல் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.


கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று கூறி 3 பக்க அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பதை கடந்த டிசம்பர் மாதமே தனது அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல் தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணமாக இருந்ததாக உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.


கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம் என்று தேர்தல் ஆணையத்தை காட்டமாக விமர்சித்துள்ளார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top