என்னது இந்த படங்கள் எல்லாம் நாவல் கதைகளாக இருந்தவையா?

தமிழ் திரையுலகிற்கு பல படங்கள் வெவ்வேறு காட்சியமைப்பில் வந்தாலும், சில படங்கள் நாவல்களை தழுவி வந்துள்ளது. அது மக்கள் மத்தியில் என்றும் நீங்க இடத்தையும் பிடித்துள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் நாவல்களை தழுவிய சில படங்களின் தொகுப்பை பார்க்கலாம். 

பரதேசி :

இந்த படம் எரியும் பனிக்காடு [Red tea] என்ற நாவலை தழுவிய படம். இந்த நாவலை எழுதியவர் P H Daniel. இது வரலாறு சார்ந்த கதை. ஒரு கூட்டத்தை சார்ந்த மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிமைகளாக டீத்தோட்டத்தில் பணிபுரியும் ஒரு கதை. ஒரு சிறிய தவறு அங்கு செய்தாலும், திரும்பி வீடு சேர முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். 

எரியும் பனிக்காடு | இது தமிழ்

இந்த கதை பரதேசி படமாக எடுக்கப்பட்ட போது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் பாலாவின் திறமை இப்படத்தில் ஓங்கியிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கி வடிவமைத்துள்ளார் பாலா. 

இறைவி:

இந்த படம் ஜன்னல் மலர் என்ற சுஜாதாவின் நாவலை தழுவியது. இந்த கதை குடிக்கு அடிமையான ஒரு நண்பன் மற்றும் கட்டிய மனைவிக்கே பாதகம் விளைவிக்க நினைக்கும் நண்பர்கள் சார்ந்த படம். 

இறைவி விமர்சனம் | Cinesnacks.net

இந்த படம் குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சராசரி குடும்ப பெண்களின் வாழ்க்கையை காட்டும் கண்ணாடியாக சித்தரித்து உள்ளார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மனிதி வெளியே வா… என்ற பாடல், இப்போதும் பெண்களின் மனதிற்கு பிடித்த ஒன்று.

விக்ரம்:

இதுவும் சுஜாதாவின் விக்ரம் நாவலை தழுவிய ஒன்றே. தன் மனைவியை பிரிந்த சூழலில், ஒரு ஏவுகணை மீட்டு எடுக்க போராடும் படம். இதை ராஜசேகர் இயக்கியுள்ளார். தற்போது, இதை லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம்:                     இந்த படம்  derailed என்னும் நாவலின் தொகுப்பு. இதை எழுதியவர் ஜேம்ஸ் சிஜெல் [James Siegel]. இக்கதை திருமணமான பெண்ணின் மீது காதல் கொள்ளும், திருமணமான ஆணின் பின்னால் இருக்கும் குடும்ப சூழல் மற்றும் அதை வைத்து ஏமாற்றிய பெண்ணின் கதை.இந்த படத்தை தமிழில் கெளதம் மேனன் இயக்கினார். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top