சர்வதேச திரைப்பட விழாவில் தலைமைக்காவலன் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

சிங்கப்பூரில் நடைபெற்ற 17வது உலக திரைப்பட கார்னிவல் என்ற சர்வதேச திரைப்பட விழாவில் தலைமைக்காவலன் திரைப்படம் விருது பெற்றுள்ளது. இந்த விருது சிறந்த கதை அம்சம் (சிறந்த சாதனை விருது) வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பல திரைப்படங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரபல மலையாள பட தயாரிப்பாளர் அஜித் பிள்ளை மற்றும் புதுமுக இயக்குனர் சுதாகர் அருண் தாஸ் இயக்கி நடித்துள்ள தலைமைக்காவலன் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை தட்டிச்சென்றதால் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோல்டன் மார்லன் விருதுகள் என்பதற்கு தகுதி பெற்றுள்ளது. இதைத் தவிர PRAGUE சர்வதேச திரைப்பட விழா என்ற விருது வழங்கும் விழாவில் இறுதி சுற்று வரை சென்றுள்ளது. இந்திய அளவில் கோலிவுட் சினிமாவில் பெருமையாக பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் பல விருதுகளை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளிவருவதற்கு முன்னதாகவே பல விருதுகளை தட்டிச் சென்றுள்ள ‘தலைமைக்காவலன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு,  தற்போது ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்த படம் தியேட்டரில் அல்லது OTT தளத்தில் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top