மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.


அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிக்கும் 8 படங்களுக்கும் இது தான் சம்பளம் என தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அடுத்ததாக ஹீரோவாக அவர் நடிக்கும் ஆறு படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார்.

அதேபோல் தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க 20 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக 3 சீசன்களையும் சேர்த்து 54 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top