ஸ்டைலிஷ் ஸ்டார் படத்தில் வில்லனாக நடிக்க 20 கோடி சம்பளமாக கேட்ட விஜய் சேதுபதி?

 

தெலுங்கு திரையின் முன்னணி ஹீரோ மற்றும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படம் “புஷ்பா” ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை அணுகிய படக்குழுவினர்.

 

                     

பிஸி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழியிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான “உப்பெனா ” படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் இந்த படமும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் தான் “புஷ்பா” படத்தில் வில்லனாக நடிக்க படக்குழுவினர் கேட்டபோது சம்பளமாக 20 கோடி என்று கேட்டதும் அதிர்ந்து போன படக்குழுவினர்.பின்னர், இதே கதாபாத்திரத்திற்காக பஹத் பசில் 2.5 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த படம் தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனராம். 

             

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top