நடிகை வித்யுலேகா காமெடி நடிகர் மோகன் ராமின் மகள். நடிகர் மோகன் ராம் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். நடிகை வித்யுலேகா நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாகவும் சந்தானத்திற்கு ஜோடியாகவும் நடித்து வரவேற்பு பெற்றார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், வித்யுலேகா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதி படுத்தும் விதகமாக சில மாதங்களுக்கு முன்பு அவரது இணையதள பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற தொழிலதிபரை காதலித்து நிச்சயம் நடந்த்துள்ளது.
சமீபத்தில் வித்யுலேகா உடலெடை குறைத்து வெளியிட புகைப்படம் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று சஞ்சய் மற்றும் வித்யுலேகாவின் திருமணம் நடந்த்துள்ளது. இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News