வலுக்கட்டாயமாக செய்த சிகிச்சையால் நடிகை ரைசாவிற்கு நேர்ந்த சோகம்…

வலுக்கட்டாயமாக செய்த சிகிச்சையால் நடிகை ரைசாவிற்கு நேர்ந்த சோகம். தோல் மருத்துவரால் செய்யப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக தன் முகம் வீங்கி மோசமான தோற்றத்துடன் இருப்பதாக நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் வெளியிட்டுள்ளார்.

தவறான சிகிச்சையால் வீங்கிய முகத்துடன் நடிகை ரைசா..

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ நான் நேற்று தோல் மருத்துவர் டாக்டர் பைரவியை சிறிய முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக்கட்டாயாமாக அளித்தார். அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது. இது தொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். அவரது உதவியாளர்கள் அவர் தற்போது சென்னையில் இல்லை என்று கூறியதாக அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரைசா தனது வீங்கிய முகத்துடன் எடுத்த புகைப்படத்தையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். இப்புகைப்படத்தில் ரைசாவின் இடது கண்ணுக்கு கீழ் கொப்புளம் போல் வீங்கி இருக்கிறது. இந்நிலையில் ரைசா தன்முக வீக்கத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com