ரகுல் ப்ரீத் சிங்கின்  வைரல் புகைப்படம்! என்னது அண்ணனா!!!!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங், இளைஞர் ஒருவரின் முதுகில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ , சூர்யா நடித்த ’என் ஜி கே’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், பல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரித்தி சிங். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ’அயலான்’, கமல்ஹாசனுடன் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் நேற்று சகோதரர் தினத்தை முன்னிட்டு, தனது சகோதரருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். நீச்சல் குளத்தில் தனது சகோதரரின் முதுகில் ஏறி உட்கார்ந்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவர் சகோதரர் தினத்திற்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை சுமார் 8 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள் என்பதும் அதில் நடிகைகள் ராஷ்மிகா, ரெஜினா ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course