சிம்புவை மாநாடு படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சிம்புவின் சினிமா கேரியரில் மாநாடு படம் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் அதிகமாக  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் தான் மாநாடு. இந்த படம் பல்வேறு சிக்கல்களை கடந்து தான் உருவானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்து உருவாகியிருக்கும் படம் தான் மாநாடு. 


இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்தனர். இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் திணறி வந்தார்கள் படக்குழுவினர். இருந்தபோதும் மாநாடு படம் மாஸ் கலந்த திரில்லர் படமாக தான் இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top