தளபதி விஜய் படத்தில் டான்ஸ் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் என்று கூறிய நடிகை!

தல அஜீத் நடித்திருக்கும் படத்தில் கதாநாயகியாக உன்னை தேடி படத்தில் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானார் நடிகை மாளவிகா. பேரழகன், சந்திரமுகி, வெற்றி கொடி கட்டு போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.  வாழ மீனுக்கு என்ற ஒரே பாடலில் அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார் நடிகை மாளவிகா.


இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசிய மாளவிகா, தளபதி விஜய் நடித்திருக்கும் குருவி திரைப்படத்தில் டண்டானா டர்னா என்னும் பாடலில் டான்ஸ் ஆடும் போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறியுள்ளார். தளபதி விஜய் உடன் ஆட கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றும், நான் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் ரசிகர்கள் மனதில் பதியும்படி நல்ல குத்தாட்டம் ஆடி இருப்பேன் எனவும் மாளவிகா கூறியுள்ளார்.


அந்த பாடலில் எளிதாக உடலை அசைத்து ஆடுவது போன்ற ஸ்டெப் தான் இருக்கும், கர்ப்பமாக இருந்ததால் நன்றாக டான்ஸ் ஆட முடியாமல் போனதில் மிகுந்த வருத்தமடைகிறேன் என்று நடிகை மாளவிகா பகிர்ந்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top