தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல்!

தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. மேலும் தளபதி விஜய்,  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65-ல் நடித்து வருகிறார்.

Pooja Hegde, wishes to join Vijay in 'Thalapthy 65' - Tamil Movie News

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

Vijay's Next: All Guns Blazing For Thalapathy 65, Produced By Sun Pictures And Directed by Nelson Dilipkumar

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் 65 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. ஜார்ஜியாவில் நடந்த ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.

மேலும் இதில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் இருந்த அதே கெட்டப்பில் தான்  உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course