கொரோனா பரவல் காரணமாக தளபதி 65 ரிலீஸ் தேதி மாற்றம்!

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆவதால் தளபதி 65 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது படப்பிடிப்பு தாமதம் ஆவதால் ரிலீஸ் தேதியை சித்திரை முதல் நாளுக்கு மாற்ற உள்ளதாக படக்குழு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course