விஷாலின் அடுத்த படம் – புதுமுக இயக்குனருடன்

தற்போது விஷால் நடித்து வரும் “எனிமி” படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கிறார். இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தின் இயக்குனர்.

                 

 

இந்த படத்திற்கு அடுத்து விஷால் ஒரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். சு.ப.சரவணன் இவர் இயக்கிய “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த குறும் படத்தை பார்த்து விஷால் அந்த இயக்குனரை அழைத்து தனக்கு ஒரு கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளாராம்.

அதற்கு அந்த இயக்குனரும் விஷாலுக்கேற்ற ஒரு கதையை கூறியுள்ளாராம். விஷாலுக்கு அந்த கதை பிடித்துப்போக இந்த படத்தை விஷால் தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course