2021-ல் தமிழ் திரையுலகம் இழந்த சிறந்த நடிகர்கள்!

எந்த வருடமும் இல்லாமல் 2021 இல் பல சிறந்த மற்றும் முன்னணி நடிகர்கள் இறந்துள்ளனர். இவர்களின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு என்று கூட சொல்லலாம். மிக பெரிய ஜாம்பவான்கள், நகைச்சுவை நடிகர்கள் என பல பேர் இந்த வருடம் உயிர் இழந்து உள்ளனர். 

அவற்றில் முக்கியமானவர்களை பற்றி பார்க்கலாம்…..

1.நடிகர் பாண்டு 

         பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு திடீர் மரணம் எதனால் தெரியுமா.? இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - tamil360newz

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான பாண்டு(74 ) ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி குணச்சித்திர நடிகராகவும் தடம் பதித்துள்ளார் பாண்டு.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே ஆறாம் நாள் 2021 அன்று காலமானார்.

2.பாடகர் கோமகன்:

                           25 குடும்பங்களுக்குக் கண்களாக விளங்கியவர்: கோமகன் மறைவுக்கு சேரன் இரங்கல் | cheran tweeyt about komagan - hindutamil.in

 ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதியிருந்த இந்த பாடல் பாடகி சித்ரா அம்மாவுக்கு தேசிய விருது அள்ளித்  தந்தது.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே ஆறாம் நாள் 2021 அன்று காலமானார்.

3.இயக்குனர் கே.வி.ஆனந்த்

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு | Corona confirms late director KV Anand | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...

திரையுலகில் ஒளிப்பதிவாளராக கால் பதித்த கே.வி.ஆனந்த் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், சிவாஜி என பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த் அயன், மாற்றான், காப்பான், அனேகன், கவண் எனப் பல  வெற்றி படங்களை இயக்கினார். கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 30 2021 அன்று காலமானார்.

4.நகைச்சுவை நடிகர் விவேக் 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்' -விளம்பரத் தூதராக நடிகர் விவேக்..! | Tamil Nadu News in Tamil

1987ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான விவேக் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அழைக்கின்றனர்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கொடுத்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 17  2021 அன்று காலமானார்.

5.நடிகர் தீப்பெட்டி கணேசன்

பட வாய்ப்பு இல்லை.. பரோட்டா கடையில் வேலை.. தீப்பெட்டி கணேசனின் திடீர் மரணம்.. கலங்க வைக்கும் காரணம்! | Reason behind Actor Theepetti Ganesan demise - Tamil Filmibeat

பில்லா -2, ரேனிகுண்டா, தென்மேற்கு பருவ காற்று, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 22, 2021 அன்று காலமானார்.

6.நடிகர் நிதிஷ் வீரா 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுப்பேட்டை, அசுரன், காலா, வெண்ணிலா கபாடி குழு  போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் மே 17, 2021 காலமானார்.

7.நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா

                        

காமெடி நடிகர், கிணற்றை காணோம் புகழ் கொண்ட நெல்லை சிவா மாரடைப்பால் மே 11, 2021 மரணமடைந்தார். அவருக்கு வயது 69 ஆகிறது. இவர் பாண்டியராஜன் நடித்த  ஆண் பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து, 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

8.நடிகர் ஜோக்கர் துளசி 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி அவர்கள் சிகிச்சை பலனின்றி  மே 10, 2021உயிரிழந்தார். பழம்பெரும் நாடக மூத்த கலைஞரான இவர் கண்மணி என்ற நாடக குழுவில் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகி பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தேவராஜ் மோகன் இயக்கிய “உங்களில் ஒருத்தி” திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் ஜோக்கர் துளசி.


இதையடுத்து இவர் சாமுண்டி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பெரும் அளவு பேசப்பட்டது. இதை தொடர்ந்து திருமதி பழனிசாமி, புருஷன் பொண்டாட்டி, அவதார புருஷன், தமிழச்சி, புதுமைப்பித்தன் போன்ற நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women