சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, “சினிமாவில் நான் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளேன். வில்லி, ஆக்ஷன் நாயகி என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன்.
ஆனால் சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறி உள்ளது. இத்தகைய கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகி உள்ளது. இப்படத்திற்காக 100 சதவீதம் உழைப்பேன்” என கூறினார்.