சன்னி லியோனை ரெகமெண்ட் செய்யும் நவரச நாயகன்…!!

தமிழ் திரையுலகின் நவரச நாயகன் கார்த்திக். https://shop.viavisolutions.com/ இவர் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன். இவர் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் தான் “அலைகள் ஓய்வதில்லை”.

 

இந்த படம் பெரும் வெற்றி பெற்றது, இன்றளவும் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரின் யதார்த்த நடிப்பால் நவரச நாயகன் என்ற பட்டத்தை பெற்றார்.

இவர் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பின்பு , சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார். பிறகு தற்போது சமீப காலமாக தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “தீ இவன்” என பெயரிட்டுள்ளனர். மேலும், இந்த படத்தில் ஹீரோயினாக பல வருடம் கழித்து நடிகை சுகன்யா நடித்து வருகிறார்.

 இந்த படத்தை சிந்துபாத் படத்தை தயாரித்த ஜெயமுருகன் என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாட்டிற்காவது நடனமாட வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மார்கெட்டுகான ஐடியா என்று கூறியுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas